Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-53

    இருதயத்திலும் வாழ்விலும் பரிசுத்தமாயிருத்தல்

    தம்முடைய ஊழியத்திற்காக்வும் தமது மகிமைக்கென்றும் நீங்கள் பாதுகாத்து வரும்படியாக கடவுள் உங்களுக்கு ஓர் உடலைக் கையளித்திருக்கிறார். உங்களுடைய சரீரங்கள் உங்களுடையவைகள் அல்ல நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 2T 352.CCh 626.1

    சீர்கேடு மிகுந்த இந்த யுகத்திலே நம்முடைய எதிரொளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல யாரை விழுங்கலாமென்று வகை தேடிச் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிற பொழுது, என்னுடைய சத்தத்தை உயர்த்தி எச்சரிப்பதற்கு அவசியமாகிறதென்று காண்கின்றேன். நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள் மாற். 14:38. அனேகர் பெருந்திறமையாகிய தாலந்துகளைப் பெற்றிருந்தும், அவற்றைப் பொல்லாப்புச் செய்ய சாத்தானின் சேவைக்கென்று அளித்துள்ளார்கள். உலகத்தை விட்டு வெளியே வந்து, அதன் கிரியைகளாகிய இருளை விட்டுத் தாங்கள் நீங்கி இருப்பதாகக் கூறுகிறவர்களும், தெய்வத்திடமிருந்து கற்பனைகளைப் பெற்றவர்களுமாயிருந்து, இலைகள் நிறைந்தும் காய்த்திராத அத்திமரத்தின் தன்மையைப் போலவே, தங்களுடைய செழிப்பான, ஓங்கி வளர்ந்த கிளைகளை சர்வ வல்லவரின் முகத்திற்கு நேராகவே பரப்பி, தேவனுடைய மகிமைக்கென்று கனிமட்டும் கொடாதிருக்கிற ஒரு ஜனத்திற்கு நான் எத்தகைய எச்சரிப்பை அளிக்கக்கூடும்? அவர்கள் அசுத்தமான நினைவுகளையும், பரிசுத்தமல்லாத மனக் கற்பனையையும், பரிசுத்தமாக்கப்படாத ஆசைகளையும், கீழ்த்தன்மையுடைய இச்சைகளையும் பேணி வைக்கின்றனர். அத்தகைய தோர் மரம் கொடுக்கின்ற கனியைத் தேவன் வெறுக்கின்றார். பரிசுத்தமும், தூய்மையும் உடையவர்களான தேவ தூதர்கள் அத்தகையோரின் போக்கைக் கண்டு அருவருப்பு அடையும் பொழுது சாத்தான் குதூகலிக்கின்றான். கடவுளுடைய பிரமானத்தை மீறுவதினால் அடையும் லாபத்தை மனிதர் சீர்தூக்கிப் பார்த்தால் எத்தனை நலமாயிருக்கும்?CCh 626.2

    எத்தகைய சந்தர்ப்பங்களில் செய்யப்படுமாயினும், மீறுதல் தேவனுக்குக் கனவீனமாகவும், மனிதனுக்குச் சாபமாகவும் விளங்கும். அது எவ்வளவு அழகாய்த் தோற்றமளித்த போதிலும், யார் அதைச் செய்த போதிலும் நாம் அதை அவ்வாறே மதிக்க வேண்டும். 5T 146.CCh 627.1

    இருதயத்தில் சுத்தமுள்ளாவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். அசுத்தமான ஒவ்வொரு நினைவும் ஆத்துமாவைக் கறைப்படுத்தி, சன்மார்க்க உணர்வைக் குன்றச் செய்து, பரிசுத்த ஆவியானவரின் கிரியை உருப்பெறாதபடி அழித்துப் போடுகின்றது. அது ஆவிக்குரிய காட்சியை மங்கலாக்கி, மனிதர் தேவனைக் காணக் கூடாதபடி செய்கின்றது. மனந்திரும்புகின்ற பாவியைக் கர்த்தர் மன்னிக்கலாம். அவர் மன்னிப்பும் அருளுகின்றார். மன்னிப்பைப் பெற்றுவிட்ட போதிலும், ஆத்துமா மீண்டும் மாறுதலடையலாம். ஆவிக்குரிய சத்தியத்தை தெளிவாக அறிந்து கொள்ள நாடும் ஒருவன் தன் பேச்சிலோ, நினைவிலோ அசுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். DA 302.CCh 627.2

    சிலர் பல காரியங்களில் ஈடுபாடு உடையவர்களாக இருப்பதின் தீமையை ஒத்துக் கொள்வார்கள், என்ற போதிலும் தங்களுடைய இச்சைகளைத் தாங்கள் மேற்கொள்ளு வதற்குக் கூடவில்லை என்று சாக்குப் போக்கு கூறுவர். கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவரும் இவ்வாறு ஒத்துக்கொள்வது பொல்லாங்கானது. “கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தை விட்டு விலக்க் கடவன்,” 2 தீமோ, 2:19. ஏன் இந்த பலவீனம்? மிருகத்தன்மையுடைய கீழ்மையான இச்சைகளைப் பயிற்சித்தால், அவை வலுவடைந்து உயர்வுடைய சக்திகளை மேற்கொண்டு விட்ட்தே இதற்குக் காரணம். ஸ்த்ரி புருஷர்கள் கொள்கையற்றவர்களாகி விட்டனர். அவர்கள் நீண்ட காலமாக தங்கள் இயற்கையான மாமிச இச்சைகளைப் பேணி வைத்த்தால், ஆவிக்குரிய மரணத்திற்குட்பட்டுவிட்டனர். தங்களை ஆண்டு நட்த்தக்கூடிய அவர்களுடைய சக்தி மாய்ந்திவிட்ட்து போலக் காணப்படுகிறது. அவர்களுடைய இயற்கையான கீழான இச்சைகள் கடிவாளத்தைப் பிடித்து நட்த்திவர, ஆண்டு நட்த்த வேண்டிய உயர்வான சக்தி சீர்கேடான இச்சைக்கு அடிமையாகி விட்ட்து. ஆன்மா மிகவும் கீழ்த்தரமான அடிமைத்தளத்தில் இருக்கின்றது. பரிசுத்தமாக வாழ வேண்டுமென்ற ஆசையைக் காம்மானது அவித்துப் போட்டு, ஆவிக்குரிய சுபீட்சம் குன்றச் செய்தது. 2T CCh 627.3