Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மன்னிக்கப்ப்டக் கூடாத பாவம்

    பரிசுத்த ஆவிக்கு விரோதமான பாவத்தை உண்டாக்குவது ஏது? அது பரிசுத்த ஆவியின் வேலையை சாத்தானின் கிரியை எனத் துணிந்து கூறுவதேயாம். உதாரணமாக, ஒருவன் தேவனுடைய ஆவியின் விசேஷித்த கிரியையைக் குறித்த சாட்சி என வைத்துக்கொள்ளுவோம். அவன் தான் செய்வது வேத வாக்கியங்களுக்கு இசைவாயிருக்கிறதென்றும், அவனது ஆவியோடு பரிசுத்த ஆவி சார்ந்து நின்று அக்கிரியை தேவனுடையது என்று சாட்சிக்கொடுக்கிறார் என்றும் திட்டமான அத்தாட்சி உடையவனாக இருக்கிறான். அதற்குப்பின் வேத வாக்கியங்களுக்கு இசைவாயிருக்கிறதென்றும், அவனது ஆவியோடு பரிசுத்த ஆவி சார்ந்து நின்று அக்கிரியை தேவனுடையது என்று சட்சிக்கொடுக்கிறார் என்றும் திட்டமான அத்தாட்சி உடையவனாக இருக்கிறான். அதற்குப்பின் அவன் சோதனையில் விழ, கர்வம், சுயதிருப்தி, அல்லது வெறு பொல்லாத குணம் அவனை ஆட்கொள்ளுகிறது; அவன் பரிசுத்த ஆவியின் தெய்வீக குணத்தின் அத்தாட்சிகளைத் தள்ளி விட்டு, முன் தான் ஏற்று அறிவித்தவை பரிசுத்த ஆவியின் வல்லமையால் அல்ல பிசாசின் வல்லமையால் ஆனவை என்று சொல்லுகிறான். தேவன் தமது ஆவியினால் மனித இருதயத்தில் வேலை செய்கிறார்; ஆனால் மனிதர் மனதார தேவ ஆவியைத் தள்ளி, அது சத்தானிலிருந்து வந்தது என்று கூறினால் தேவன் அவர்கள் மூலம் மக்களுடன் கொண்டுள்ள வழி துண்டிக்கப்படுகிறது. தேவன் கொடுக்க விரும்பிய அத்தாட்சிகளை அவர்கள் தள்ளுவதாலும், அவர்கள் மறைத்துப் போடுவதாலும் அவர்கள் இருளில் விடப்படுகின்றனர். இவ்விதமாக கிறிஸ்து சொன்ன வார்த்தைகள் மெய்யென ரூபிக்கப்படுகிறது: இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருதால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும். மத். 6:23. கொஞ்சக் காலம் மன்னிக்கப்படாத பாவம் செய்தவர்கள் தேவனுடைய பிள்ளைகள் போல காணப்படலாம்; குணம் அபிவிருத்தியடையும் சூழ் நிலை ஏற்படும் பொழுது, அவர்கள் தங்களிடம் உள்ள ஆவி எத்தன்மையான தென்று வெளிப்படுத்துவார்கள். அவர்கள் சத்துருவின் கறுப்புக் கொடியின் கீழ் நிற்பவர்களாகக் காணப்படுவார்கள். 5T. 634.CCh 270.2