Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம் 2

    முடிவு காலம்

    நாம் முடிவு காலத்தில் வசிக்கிறேம். அதி விரைவில் நிறைவேறி வரும் காலங்களின் அடையாளங்கள் கிறிஸ்துவின் வருகை மிகச் சமீபம் என்று அறிவிக்கின்றன. நாம் வசிக்கும் நாட்கள் முக்கியத்துவமும், பக்தி வினயமுமானவைகள். பரிசுத்த ஆவியானவர் படிபடியாக, ஆனால் அதி நிச்சயமாக பூமியினின்று எடுத்துக்கொள்ளப்படுகிறார். தேவ கிருபையை அலட்சியம் செய்வோர்மேல் வாதைகளும் நியாயத்தீர்ப்புகளும் விழுந்த வண்ணமாக இருக்கின்றன. பூமியிலும், சமுத்திரத்திலும் ஏற்படும் விபத்துகளும், சீர்குலைந்த சமுதாய நிலையும், யுத்த பீதிகளூம் தீய அறிகுறிகளாகும். நடைபெறவிருக்கும் மாபெரும் சம்பவங்களூக்கு இவைகள் முன் அறிவிப்புகளாகும். தீமையின் ஏதுக்கள் சக்திகளை ஒன்று திரட்டி அவைகளை பலப்படுத்துகின்றன. கடைசி நெருக்கடிக்கு தங்களைப் பலப்படுத்துகின்றன. பெரிய மாறுதல்கள் விரைவில் உலகில் ஏற்படும், முடிவின் இயக்கங்கள் துரிதமானவைகள்.CCh 74.1

    கொடிய காலங்கள் நம்மேல் வந்திருப்பதாக உலக நிலை காட்டுகின்றது. பயங்கரப் போர் அதி சீக்கிரம் மூளும் என்பதற்கான அடையாளங்களைத் தினச்செய்தி பத்திரிகைகளில் வாசிக்கிறோம். துணிகரமான கொள்ளைகள் அடிக்கடி நேரிடுகின்றன. வேலை நிறுத்தம் சர்வ சாதரணம், கொலையும், திருட்டும் உலகில் எப்பக்கமும் காணப்படுகின்றன. சாத்தானின் மக்கள் ஆண் பெண் சிறு குழந்தைகளின் உயிரை வாங்கிவிடுகின்றன. தீய பழக்கங்கள் மலிந்து சகலவித துன்மார்க்கமும் மனிதரை ஆட்கொண்டு அலைக்கழிக்கின்றன.CCh 74.2

    நீதியைப் புரட்டி உள்ளத்தில் சுய நல நாட்டத்தைப் பெருக்குவதில் சத்துரு வெற்றி பெற்றுள்ளான். “நியாயம் பின்னிட்டு அகன்றது; சத்தியம் வீதியில் இடறி, யதார்த்தம் வந்து சேர மாட்டாமற் போகிறது. ஏசா. 59:14. பெரிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வறுமையாலும், நிர்ப்பந்த்தத்தினாலும் வாடுகின்றனர். அவர்களுக்கு உடை, உணவு, உறைவிடம் இல்லை. அதே நேரத்தில், அதே நகரத்தில் எத்தனையோ செல்வந்தர் யாதொரு குறைவுமின்றி சம்பிரமமாய் வாழ்கின்றனர். இவர்கள் தங்கள் வீடுகளை உயர்ந்த பணிமுட்டுகளால் நிரம்பி, சுய அலங்காரத்திலும் எல்லாவற்றிலும் மோசகரமாக தங்கள் மனச்சக்திகளைப் பாழாக்கி, அதை நிலை தடுமாறச்செய்து ஆத்துமாவை ஈனப்படுத்துகின்ற சிற்றின்பங்களிலும், வெறிதரும் மதுபானங்களிலும், புகையிலை பழக்கத்திலும், வேறுபல தீய காரியங்களிலும் ஈடுபடுத்துகின்றனர். பலவிதமான ஒடுக்குதலினாலும், பணம் பறிக்குதலினாலும் மனிதர் பெரும் செல்வத்தை தமக்கெனக் குவிக்கும்போது, பசி பட்டினியால் மனுக்குலம் இடும் கூக்குரல் தேவனிடம் போய் எட்டுகிறது.CCh 74.3

    இராத் தரிசனத்தில் வானளாவிய பல கட்டட்ங்கள் எனக்குக் காட்டப்பட்டன. இக்கட்டடங்கள் அக்கினி பற்றுதென்ற உத்தரவாதம் பெற்றவைகள். அவைகளைக் கட்டினச் சொந்தக்காரரும், சிற்பாசாரியரும் தங்களுடைய மகிமைக்கென அவற்றைக் கட்டினார்கள். மேலும் மேலும் உயரமான மாடிகளைக் கட்டினர். அவைகள் விலையேறப்பெற்ற பொருள்களால் கட்டப்பட்டவை. இக் கட்டடங்கள் யாருக்குச் சொந்தமானதோ அவர்கள், நாங்கள் எவ்விதம் சிறந்த வகையில் தேவனை மகிமைப்படுத்தக்கூடும். என தங்களையே கேட்டுக்கொள்ளவில்லை. காரணம், கடவுள் அவர்கள் நினைவில் இல்லை.CCh 75.1

    இக் கட்டடங்கள் உயர உயர, அவற்றிற்கு உரிமையாளர்கள் பெருமைப் பித்தர்களாகி, சுய திருப்திக்கென்று ஏராளமான பணத்தைச் செலவு செய்தோமென்றும், தங்கள் அயலகத்தாரின் பொறுமைக் கேதுவாக எல்லாவற்றையும் செய்து முடித்தோமென்றும் களி கூர்ந்தனர். அக்கட்டடங்களூக்கு செலவான பணம் பெரும்பாலும் ஏழைகளைப் பிழிந்து சேர்க்ப்பட்டதே. வியாபரத்துறையில் கொடுக்கல் வாங்கல் செய்த ஒவ்வொன்றிற்கான மெய்யான கணக்கு பரலோகத்தில் இருக்கிறது என்பதை மறந்து போயினர். அநீதியான ஒவ்வொரு செய்கையும், புரட்டான ஒவ்வொரு காரியமும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.CCh 75.2

    என் முன்னே கடந்து சென்ற அடுத்த காட்சியில் தீ விபத்தை அறிவிக்கும் அபாயச்சங்கு ஒலித்தது. மனிதர்கள் அக்கினி பற்றதென உத்திரவாதம் பெற்ற அந்த உயர்ந்த கட்டடங்களைப் பார்த்து அவைகளுக்கு அழிவு இல்லை என்றனர். ஆனால் அக்கட்டடங்கள் நிலக்கீலினால் கட்டப்பட்டவைபோல் எரிந்து சாம்பலாயின. தீயணைக்கும் யந்திரங்களால் அணைப்பது கூடாமற்போயிற்று. தீயணைக்கும் படையினர் யந்திரங்களைச் சரிவர இயக்க முடியவில்லை.CCh 76.1

    கர்த்தருடைய வேளை வரும்போது, பெருமையும் பேராசையும் உள்ள மானிட இருதயங்களில், ஒரு மாறுதல் ஏற்படாவிடில் தேவனுடைய இரட்சிக்கும் கரமே பட்சிக்கும் கரமாக இருப்பதாகக் கண்டுகொள்வார்களென எனக்கு அறிவிக்கப்பட்டது. எந்த உலக சக்தியும் கடவுள் கரத்தைத் தடுக்க முடியாது. கற்பனைகளை அலட்சியம் செய்வதற்கும், சுயநல பேராசைக்கும் பழிவாங்கும் நாளில் யாதொன்றும் இக் கட்டிடங்களை நாசத்தினின்று காக்க முடியாது.CCh 76.2

    நிபுணர்களான கல்விமான்களுக்குள்ளும் அரசியல் வல்லுனர்களுக்குள்ளும் வெகு சிலரே சமுதாயத்தின் தற்போதைய நிலைக்கு அடிப்படை காரணங்களை அறிந்துகொள்ள திறமை உள்ளவர்கள். அரசியல் நிர்வாகத்தைப் பொறுப்பேந்தியவர்களுக்குச் சன்மார்க்கக் குறைவு, வறுமை, பாப்பர் நிலை, கொலை, கொள்ளை முதலிய பிரச்சினைகளைத் தீர்க்க வழி வகைகள் தெரியவில்லை. ஒவ்வொரு தொழிலையும் பத்திரமான அடிப்படையில் அமைக்க வீணாகப் பாடுபடுகின்றனர். மனிதர் கடவுள் வசனத்திற்குச் செவி கொடுத்தால், தங்களை மலைக்கச் செய்யும் பிரச்சினைகளுக்குப் பரிகாரம் காண்பார்கள்.CCh 76.3

    கிறிஸ்து வருகைக்குச் சற்று முன்னுள்ள உலக நிலையை தேவ வசனங்கள் விவரிக்கின்றன. கொள்ளையினாலும், சூதாகப் பறிக்கிறதினாலும் ஐசுவரியத்தைப் பெருக்குகிறவர்களைக் குறித்து பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது: கடைசி நாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டு கூக்குரலிடுகிறது, அறுத்தவர்களின் கூக்குரல் சேனைகளூடைய கர்த்தரின் செவிகளில் பட்டது, பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து சுகபோகத்தில், உழன்றீர்கள். கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறது போல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள். நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து கொலை செய்தீர்கள், அவன் உங்களோடு எதிர்த்து நிற்கவில்லை. யாக். 5:3-6. விரைவாக நிறைவேறி வரும் காலங்களின் அடையாளங்கள் அறிவிக்கும் எச்சரிப்பை வாசிப்பவர்கள் யார்? இந்த எச்சரிப்புகள் உலக சிநேகமுடையவர்களை எவ்வாறு பாதிக்கிறது? அவர்கள் மனப் பான்மையில் மாறுதல் ஏற்படுகின்றதா? நோவாவின் நாட்களிலிருந்த மக்கள் மனதில் ஏற்பட்ட மாறுதலைப் பார்க்கிலும் வேறு மாறுதல் ஏதும் ஏற்படுவதில்லை. ஜலப் பிரளயத்திற்கு முற்பட்டவர்கள் ஜலப் பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகு மட்டும் உணராதிருந்தார்கள். மத். 24:39. பரலோக எச்சரிப்புப் பெற்றும் கீழ்ப்படிய மறுத்தனர். இன்றும் தேவனுடைய எச்சரிப்பின் சத்தத்தை முற்றுமாக தள்ளி நித்திய அழிவிற்கு விரைந்து செல்லுகின்றனர்.CCh 77.1

    யுத்த ஆவி உலகை ஆட்டிக் கொண்டிருக்கிறது. தானியேல் 11-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள் ஏறக்குறைய யாவும் நிறைவேறிவிட்டன. தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்ட உபத்திரவக் காட்சிகள் சீக்கிரம் தோன்றும். “இதோ, கர்த்த்ர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி அதைக் கவிழ்த்து, அதன் குடிகளைச் சிதறடிப்பார்.....அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளைகளை மாறு பாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். இதினிமித்தம் சாபம் தேசத்தை பட்சித்தது. அதன் குடிகள் கண்டிக்கப்பட்டார்கள்...மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூறுகிறவர்களின் சந்தடி ஒழியும்; வீணையின் களிப்பு நின்றுபோம். ஏசா. 24:1-8.CCh 77.2

    “அந்த நாளினிமித்தம் ஐயோ; கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது. அது சங்காரம் போல சர்வ வல்லவரிலத்திலிருந்து வருகிற்து. யோவேல் 1:15. “பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது. வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது. பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிரிந்தன, எல்லா குன்றுகளும் அசைந்தன. பின்னும் நான் பார்க்கும் போது மனுஷன் இல்லை. ஆகாயத்துப் பறவைகள் எல்லாம் பறந்து போயின; பின்னும் நான் பார்க்கும் போது கர்த்தராலும் அவருடைய உக்கிர கோபத்தாலும் பயிர் நிலம் வனாந்தரமாயிற்று.” எரே. 4:23-26.CCh 78.1

    “ஐயோ! அந்த நாள் பெரியது. அதைப் போலொத்த நாளில்லை. அது யாக்கோபுக்கு இக்கட்டுக் காலம். ஆனாலுள்ள அனைவரும் நிற்கவில்லை. அனைவரும் உண்மையற்றவர்களாகி விடவில்லை. சிலர் மட்டும் கடவுளுக்கு உத்தமராயிருக்கிறார்கள். தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்கிறவர்கள் என்று இவர்களைப் பற்றி யோவான் எழுதுகிறார். வெளி. 14:12. கடவுளை சேவிப்போருக்கும், சேவியாதவர்களூக்குமிடையே சீக்கிரம் ஒரு பெரும் போர் நடைபெறும். அசைக்கப்படக் கூடாதவைகள் நிலை பெறத் தக்கதாக அசைக்கப்படக் கூடிய யாவும் அசைக்கப்படும்.CCh 78.2

    சாத்தான் ஒரு தீவிர வேத மாணாக்கன். தனக்கு கொஞ்சக்காலமட்டும் உண்டு என அறிந்திருக்கிறான். கர்த்தருடைய வேலையின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரிடையாக வேலை செய்யப் பார்க்கிறான். பரலோக மகிமையும், மறுபடியும் வரப்போகும் கடந்த கால உபத்திரவமும் ஒன்று சேரும்போது பூமியிலிருக்கும் தேவனுடைய பிள்ளைகள் அடையும் அனுபவத்தின் தன்மையை விளக்கமாக கூறுவது கூடாத காரியம். அவர்கள் பரலோக சிங்காசனத்திலிருந்து வருகிற ஒளியில் நடப்பார்கள். தேவ தூதர்கள் மூலமாக பரலோகத்திற்கும், பூலோகத்திற்கும் உள்ள தொடர்பு நீங்காததாக இருக்கும். பொல்லாத தூதர்கள் தன்னைச் சூழ்ந்திருக்கையில் சாத்தான் தன்னைத் தேவனாகக் காட்டிக் கொண்டு, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத் தக்கதாக, பலவிதமான அற்புதங்களைச் செய்வான். தெய்வ மக்களுக்கு அற்புத அடையாளங்கள் பாதுகாப்பு ஆகா. ஏனெனில் அவர்கள் செய்யும் அவ்வித அற்புதங்களையும் அடையாளங்களையும் சாத்தானும் செய்வான். யாத். 31:12-18ல் காணப்படும் வசனங்கள் கடவுளால் புடமிடப்பட்ட மக்களுக்கு வல்லமையான அடையாளமாயிருக்கும். எழுதப்பட்டிருக்கிறதே என்ற தேவ வசனத்தில் சார்ந்து அவர்கள் கடவுளின் வசனமாகிய அஸ்திபாரத்தில் உறுதியாக நிற்கவேண்டும். தேவனோடு செய்த உடன் படிக்கையை மீறுகிறவர்கள், அந்நாளில் தேவனற்றவர்களாகவும், நம்பிக்கை யற்றவர்களாகவும் மடிவர். தேவனை வழிபடுகிறவர்கள் நான்காம் கற்பனையைக் கைக்கொள்ளுவதின் மூலம் இன்னார் என பிரத்தியேகமாக அறியப்படுவர். ஓய்வு நாள் படைப்பின் சின்னமாகவும் மனிதனுடைய பயபக்திக்கும், வணக்கத்திற்கும் கடவுளே உரிமையாளரெனவும் சாட்சி பகருகிறது. சிருஷ்டிகரின் உரிமையாளரெனவும் சாட்சி பகருகிறது. சிருஷ்டிகரின் நினைவு சின்னத்தைச் சிதைப்பதினாலும், ரோமையின் ஸ்தாபனத்தை உயர்த்துவதினாலும் துன்மார்க்கர் இன்னாரென தெளிவாகக் காட்டப்படும். இப்போராட்டத்தில் சகல கிறிஸ்தவ சமுதாயமும் கற்பனை கைக்கொள்பவர்கள், கைக்கொள் ளாதவர்கள் என இருவைகையாக பிரிக்கப்படுவர். தேவனுடைய கற்பனைகளக் கைக்கொண்டு இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தைக் காத்துக்கொள்ளுகிறவர்கள் ஒருவகுப்பார். மிருகத்தையும் அதன் சொரூபத்தையும் வணங்கி, அதன் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவர்கள் மற்ற வகுப்பார். பெரியோர், சிறியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் யாவரையும் மிருகத்தின் முத்திரையைத் தரித்துகொள்ளும்படி சபைய்ம் துரைத்தனமும் காட்டாயப்படுத்தினபோதிலும், தேவனுடைய ஜனங்கள் மிருகத்தின் முத்திரையைத் தரித்துக் கொள்ள மாட்டார்கள். வெளி. 13:16.CCh 79.1

    மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும், அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவசுரமண்டலங்களைப் பிடித்துக் கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடினார்கள். வெளி. 15:2,3.CCh 80.1

    பயங்கரமான பரீட்சையும் உபத்திரவமும் தேவனுடைய ஜனத்திற்கு வரக் காத்திருக்கிறது. பூமியின் ஒரு முனைதுவங்கி, மறு முனை மட்டும் யுத்த ஆவி கிரியை செய்வதைக் காண்கிறோம். உலக தோற்ற முதல் உண்டாயிராத மாபெரும் உபத்திரவம் உண்டாகும்போது தேவனுடைய ஜனம் அசையாமல் உறுதியார் நிற்பார்கள். பலத்த சவுரியவான்களாகிய தூதர்கள் இவர்களைப் பாதுகாப்பதால், சாத்தானும் அவன் பரிவாரங்களும் அவர்களை அழிக்க முடியாது. 9 T. 11:17.CCh 80.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents