Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அதிகப்படியான தெய்வ வழி காட்டுதல் பெற்றோருக்குத் தேவை

    உங்கள் பிள்ளைகளுக்கு சரியான பயிற்சி அளிப்பதை பயமின்றி நீங்கள் அசட்டை செய்துகொள்ள முடியாது. குறைபாடுடைய அவர்கள் குணம் உங்கள் உண்மைக் கேட்டை விளங்கச் செய்யும். அவர்களிடத்தில் நீங்கள் திருத்தாமல் விட்டுவிட்ட தீமைகள் கரடுமுரடான நடத்தை, மரியாதையும் கீழ்ப்படிதலும் இல்லாத நடத்தை, சோம்பலும் கவலைக் குறைவுமான பழக்கங்கள்; உங்களுக்கு கண்ணிய குறைவையும் உங்கள் வாழ்க்கையில் கசப்பையும் கொண்டு வரும். உங்கள் பிள்ளைகளின் கதி பெருமளவில் உங்கள் கைகளிலேயே இருக்கிறது. உங்கள் கடமையை நீங்கள் அவர்களுக்குச் செய்யாமற்போனால் சத்துருவின் சைனிய வரிசையிலே அவர்கள் நிற்கவும், அவனுடைய ஏவலாட்கள் ஆகவும் செய்து, மற்றவர்களையும் நீங்கள் நாசமடையச் செய்யலாம். அவ்வாறல்லாது, நீங்கள் அவர்களுக்கு உண்மையாகப் போதனை செய்து, உங்கள் சொந்த வாழ்விலே தேவபக்தியுள்ள முன்மாதிரியை வைத்து, அவர்களைக் கிறிஸ்துவுக்குள் நடத்த வேண்டும். அவர்கள் மீண்டும் மற்றவர்களைத் தங்கள் செல்வாக்கிற்குள் நடத்தி, அவர்களுக்கு நீங்கள் அளித்த பயிற்சியினால் அனேகர் இரட்சிக்கப் படலாம். 7T 66.CCh 529.2

    நம்முடைய பிள்ளைகளிடம் நாம் எளியமுறையில் நடந்துகொள்ள வேண்டுமென்று தெய்வம் விரும்புகிறார். வயது வந்தவர்களுக்கு அனேக வருட அப்பியாசம் இருந்தது போலவே பிள்ளைகளுக்கும் நற்காரியங்களில் அப்பியாசம் ஏர்படவில்லையென்பதை நாம் இலகுவில் மறந்துவிடக்கூடும். நாம் கூறுகிறபடியே இளம் பிள்ளைகள் நடந்துகொள்ளாவிட்டா, அவர்களை உடனே திட்டவேண்டியதுதான் என்று நாம் நினைக்கிறோம். இது காரியங்களைச் சீர்படுத்தாது. அவர்களை இரட்சகரிடத்திற்குக் கொண்டு போங்கள். அதைப் பற்றி யெல்லாம் அவரிடத்திலே சொல்லுங்கள். அப்புறமாக அவருடைய ஆசீர்வாதம் அவர்களின்மேல் தங்குமென்று நம்புங்கள். GC 187.CCh 530.1

    பிரார்த்தனை வேளையை மதிக்கவும், கனம் பண்ணவும் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும். வேலைக்குச் செல்லுவதற்கு முன்பாகக் குடும்பத்தினர் ஒன்றாக அழைக்கப்பட்டு, தகப்பானாரோ, தகப்பனார் இல்லாத காலத்தில் தாயாரோ, நாள் முழுவதும் அவர்களை தெய்வம் காக்கும்படி ஊக்கமான வேண்டுதல் செய்யவேண்டும். தாழ்மையுடனும் இருதயத் தில் ஊக்கத்துடனும் உங்கள் முன்பாகவும், உங்கள் பிள்ளைகள் முன்பாகவும் இருக்கும் சோதனைகள் ஆபத்துகளைப் பற்ரிய உணர்வுடனும், தேவ சமூகத்தில் வாருங்கள். விசுவாசத்துடனே பலிபீடத்துடனே அவர்களைப் பிணையுங்கள். கர்த்தர் அவர்களைக் கண்காணிக்க வேண்டுமென்று வேண்டுங்கள். இவ்வாறு ஒப்புவிக்கப்படுகிற பிள்ளைகளை அவர்களுக்குரிய தேவ தூதர்கள் பாதுகாப்பார்கள். காலையிலும் மாலையிலும் ஊக்கமான ஜெபத்தினாலும் தளராத விசுவாசத்தினாலும் தங்கள் பிள்ளைகளைச் சூழப் பாதுகாப்பான வேலியை ஏற்படுத்தவேண்டியது கிறிஸ்தவப் பெற்றோரின் கடமை. பொறுமையாக அவர்களுக்குப் போதனை செய்து, பட்சத்துடனும் சோர்ந்து போகாமலும் தேவனுக்குப் பிரியமாக இருக்க வாழுவது எப்படியென்று அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவேண்டும். 1T 397, 398.CCh 530.2

    ஒவ்வொரு நாளும் பர்4இசுத்த ஆவியின் ஸ்நானத்தைப் பெறுவது அவர்கள் சிலாக்கியமாயிருப்பதைப் பிள்ளைகளுக்குப் போதனை செய்யுங்கள். தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் கிறிஸ்துவானவர் உங்களைத் தமக்கு உதவியான கரமாகக் காண்பாராக. உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் செய்யும் ஊழியத்தை பூரண வெற்றியுடையதாக ஆக்கும் ஓர் அனுபவத்தை ஜெபத்தின் மூலமாக நீங்கள் பெறலாம். CT 131.CCh 531.1

    ஓர் அன்னையின் பிரார்த்தனைக்கு இருக்கும் வல்லமையை நாம் அளவுகடந்து மதிப்பிட்டுவிட முடியாது. தன்னுடைய மகனுடனும் மகளுடனும் குழந்தைப் பிராயத்தில் மாறுதல்கள் ஏற்படும் பொழுதும் இளம்பிராயத்தின் ஆபத்துகளிலும் முழங்கால்படியிடுகின்ற அன்னை தன்னுடைய பிள்ளைகள் மீது தன்னுடைய ஜெபங்களினால் உண்டாயிருக்கும் வல்லமையை நியாயத்தீர்ப்பின் நாள்மட்டும் அறியமாட்டாள். விசுவாசத்தினாலே தேவகுமாரனுடனே அவள் இணைக்கப்பட்டிருந்தால், அவளுடைய மெல்லிய கரம் சோதனையின் வல்லமைக்கு அவளுடைய மகனையும், பாவத்தின் சக்திக்கு இடங்கொடுத்து விடாதபடிக்கு அவளுடைய மகளையும் கட்டுப்படுத்தும். இச்சை ஆண்டு கொள்ளுவதற்குப் போராடுகின்ற பொழுதே வாஞ்சையுள்ள திடமான கட்டுப்படுத்துகின்ற ஓர் தாயின் செல்வாக்காகிய அன்பின் வல்லமை ஆத்துமாவை நீதியின் மட்சத்தில் நிலை நிற்கச் செய்யலாம். AH 266.CCh 531.2

    உன் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையை உண்மையாகச் செய்து நிறைவேற்றிய பிறகு, அவர்களைத் தேவனிடத்தில் கொண்டுபோய், அவர் உனக்கு உதவி செய்யும்படியாகக் கேள். நீ செய்ய வேண்டியதை நீ செய்திருப்பதாக அவரிடம் கூறி நீ செய்து நிறைவேற்றக் கூடாததாகிய அவர் செய்யவேண்டியதை அவர் செய்யும்படி விசுவாசத்தினாலே அவரிடத்தில் வேண்டுதல் செய். அவர்களுடைய தன்மைகளைச் செவ்வையாக்கி, தமது பரிசுத்த ஆவியினால் அவர்களைச் சாந்தமும் இணக்கமும் உள்ளவர்களாக்கும்படி கேள். உன்னுடைய பிரார்த்தனையை அவர் கேட்பார். உன்னுடைய பிரார்த்தனைகளுக்குப் பதிலளிக்க அவர் விரும்புவார். தம்முடைய வசனத்தினாலே பிள்ளைகளின் அழுகைக்கும் இரங்காமல் அவர்களைத் திருத்த வேண்டியதை அவர் உங்களிடமாக ஒப்புவுத்திருக்கிறார். இக்காரியங்களில் அவருடைய வசனத்தையே கவனித்து நடந்துகொள்ள வேண்டும். CG 256, 257.CCh 532.1