Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தகுதியற்ற நடக்கை

    மக்கள் இருதயங்களுடன் சிறு பிள்ளைத்தனமாய் விளையாடுவது பரிசுத்தமுள்ள கடவுள் பார்வையில் மகா கொடிய குற்றம். என்றாலும் சில ஆண்மக்கள் சிற்றிளமகளீர்க்கு நயங்காட்டி, அவர் ஆசாபாசங்களை வளர்த்துவிட்டு, அப்பால் தாம் அவர்களிடம் பேசிய மொழிகளைப் பற்றியும் அவற்றால் விளைந்த பயன்பகளைப் பற்றியும் அறவே மறந்து, தங்கள் வழியே போய்விடுகின்றனர். புதிய முகம் அவர்களை வசீகரிக்கின்றது. அவர்கள் அங்கே பேசிய மொழிகளைத் திரும்பவும் இங்கே பேசி அங்கே செலுத்திய கருத்தை எல்லாம் இங்கே செலுத்துகின்றனர்.CCh 358.1

    இந்தக் குணம் மணவாழ்க்கையிலும் வெளிப்படுவதுண்டு - திருமணவுறவு எப்பொழொதும் மாறுபடும் இயல்புள்ள மனத்தை உறுதிப்படுத்தி தடுமாறுகின்ற உள்ளதை நிலை நிறுத்தி, தன் கொள்கைக்கு உண்மையாய் இருக்கும்படி செய்ய இயலுகிறதில்லை. அவர்கள் ஓரிடத்தில் நிலையாகப் பற்றில் கொண்டிராது சலிப்படைகின்றனர்; அசுத்தமுள்ள நினைவுகள் அசுத்தமுள்ள செயல்களை வெளிப்படுத்துகின்றன. அப்படியானால் வாலிபர் சாத்தான் தங்களை மயக்கி நீதியின் பாதையை விட்டு விலகிக் கெடுத்துப்போடாதபடி, தங்கள் மனத்தின் அறையைக் கட்டிக்கொண்டு, தங்கள் நடக்கையை காத்துக் கொள்வது எவ்வளவு இன்றியமையாத செயல்!CCh 358.2

    ஒரு இளம் பெண்ணின் பெற்றோருக்குத் தெரியாமல் அவள் கூட்டுறவில் மகிழ்ந்து அவளது நட்பைத் தேடிக்கொள்ளுகின்ற வாலிபன் அவளுக்காவது, அவள் பெற்றோருக்காவது தகுதியுள்ள சிறந்த கிறிஸ்துவனாக நடந்து கொள்ளமாட்டான். இரகசியக் கடிதப் போக்குவரத்துகளினாலும், சந்திப்புகளினாலும் அவன் அவள் மனத்தைக் கவர்ந்து தன் செல்வாக்கிற்குட்படுத்தலாம். ஆனாலும் அவ்வாறு செய்வதினால் கடவுள் மக்கள் ஒவ்வொருவருக்கும் சொந்தமான ஆத்துமாவின் மேன்மைக் குணத்தையும், நேர்மைக் குணத்தையும் வெளிப்படுத்த முடியாமல் அவன் தவறிப் போகின்றான். தங்கள் தீர்மானத்தை நிறைவேற்றுகிறதற்காக அவர்கள் கபடமில்லாத திறந்த மனம்பான்மையற்றதும், சத்திய வேத அளவை நிலைக்கு ஒவ்வாததுமான செயல்களைச் செய்து தங்கள் நேசித்து தங்களுக்கு உண்மையுள்ள பாதுகாவலராக இருக்க முயலுகின்றவர்களுக்குத் தாங்கள் உண்மையற்றவர்கள் என்பதை நிரூபித்து விடுகின்றார்கள். அத்தகைய செல்வாக்குகளினால் நடைபெறுகின்ற விவாகம் தேவவசனத்திற்கு ஒவ்வாத விவாகமே. மகள் ஒருத்தி தன் கடமையைச் செய்ய விடாமல் அவளை விலக்கி, அவள் தன் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து அவர்களைக் கனம் பண்ண வேண்டுமென்று விதிக்கின்ற தெளிவும் திட்டமுமான கடவுள் கற்பனையின் கருத்துக்களை மீறி நடக்கும்படி அவள் மனத்தைத் குழப்புகின்றவன், விவாகக்கடமைகளுக்கு உண்மையாய் நடந்து கொள்ளவே மாட்டான்.CCh 358.3

    “களவு செய்யாதிருப்பாயாக” என்பது கடவுள் விரலினால் கற்பலகையில் எழுதப்பெற்ற கற்பனை என்றாலும் வாலிபன் எவ்வளவு நேர்மையற்ற வகையாய் இளம் பெண்ணின் உள்ளப்பற்றுதலைக் களவாடி அதற்குப் போக்குச் சொல்லுகின்றான்! சிறிதும் அனுபவமற்றவளும், இந்தச் செயல் எங்கெல்லாம் பரவும் என்று அறியாதவளுமாகிய பெண்பிள்ளையின் உள்ளப்பற்றுதலைக் கைப்பற்றுமட்டும், வஞ்சகமான காதலுறவை வளர்த்து அவளுடன் அந்தரங்கமான செய்திப்போக்கு வரத்து வைத்துக் கொண்டு ஓரளவு தன் பெற்றோரை விட்டு அவளைப் பிரித்து தன் மேல் பற்று வைக்கும்படி செய்து தான் கையாளுகின்ற அந்த முறையினாலேயே தான் அவளுடைய அன்பிற்குத் தகுதியுள்ளவன் அல்ல என்று காண்பிக்கிறான். வேதாகமம் உண்மையின் மையின் சகல ரூபங்கிஅளையும் கண்டனஞ் செய்கின்றது.CCh 359.1

    கிறிஸ்தவர் என்று அறிக்கையிடுகிறவர்களும், தங்கள் வாழ்க்கை நேர்மையுடையது என்று பெயர் பெற்றவர்களும், மற்றெல்லாக் குற்றங்களையும் குறித்து உணர்ச்சியுடையவர்கள் போல் தோன்றுகிறவர்களும் ஆகிய பெரு மக்கள் தாமும் இந்தக் காரியத்தில் பயங்கரமான தவறுகள் செய்கின்றார்கள். பகுத்தறிவினாலே தானும் மாற்ற முடியாத உறுதியுள்ள தீர்மானத்தை வெளியிருகிறார்கள். தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பாமல், மனுஷருக்குரிய உணர்ச்சிகளினாலும் மயக்கம் அடைகின்றார்கள்.CCh 360.1

    பத்துக் கற்பனைகளில் ஒன்றை மீறி நடக்கிறபோது கீழ்ப்படுக்கு இறங்குகிறார்கள் என்பது திண்ணம். பெண்மைக்குரிய நாணம் ஆகிய வேலியை ஒரு முறை நீக்கிய போதே, கட்டுப்பாடுகளை மதியாத மகா இழிவான குணம் பெரும் பாவம் என்று அவர்களுக்குத் தோன்றுகிறதில்லை. ஐயோ தீமைக்கு ஏவி விடுகின்ற பெண்பிள்ளையினுடைய செல்வாக்கின் பலன்கள் எவ்வளவு கொடியவை என்று இக்காலத்தில் காண்கின்றோம்: அந்நிய ஸ்திரிகளின் மயக்கத்தினால் ஆயிரக்கணக்கான வாலிபர் சிறைக்கூடங்களில் அடைப்பட்டுக் கிடக்கின்றார்கள்; அனேகர் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளுகின்றார்கள்; அனேகர் பிறர் உயிரை அகாலத்தில் மாய்த்து விடுகின்றார்கள். அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும் என்னும் திருவருள் மொழிகள் எவ்வளவு உண்மையானவை?CCh 360.2

    மக்கள் அபாயமுள்ளதும் விலக்கப் பட்டதுமாகிய நிலத்தை அணுகாதபடி தடுப்பதற்காகம் ஜீவவழியின் எப்பக்கத்திலும் எச்சரிப்பு விளக்குகள் வைக்கப் பெற்றுள்ளன. ஆனால் இவற்றைக்கடந்து மக்கள் கூட்டம் பகுத்தறிவின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமலும், கடவுள் கட்டளையை மதி யாமலும், அவருடைய ஆக்கினைக்கு அஞ்சாமலும், மரண வழியைத் தெரிந்து கொள்ளுகின்றது.CCh 360.3

    உடல் நலத்தையும், ஊக்கமுள்ள அறிவையும், குற்றமற்ற ஒழுக்கத்தையும் பாதுகாப்போர் பாவியத்திற்குரிய இச்சைகளுக்கு விலகியோடுவேண்டும். நம் நடுவிலே துணிந்து வரம்புமீறித் தன் தலையையுயர்த்துகின்ற தீவினையைத் தடுப்பதற்காக வைராக்கியமும் தீர்க்கமுமுள்ள முயற்சி செய்கின்ற மக்களைத் தவறு செய்வோர் அனைவரும் பகைத்துத் துன்புறுத்திப் புறங்கூறுகின்றனர்; கடவுளோ அவர்களைப் பெருமைப்படுத்தி, அவர்களுக்குக் கைம்மாறு செய்வார். A.H. 43-57, 70-75.CCh 361.1