Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மீட்பை தேடுவோருக்கு வெற்றி

    நான் தேவனுடைய ஜனங்களைப் பார்த்தேன். அவர்கள் மிகவும் அசைவுற்றிருந்தார்கள். சிலர் பலத்த விசுவாசத்தோடும் வேதனையுள்ள கூக்குரலோடும் தேவனை நோக்கி மன்றாடுவதை நான் கண்டேன். வேதனையுடன் போராடும் அவ்வேலையில் சிலர் பங்கு பெறவில்லை என்றும் நான் கண்டேன். அவர்கள் நிர்விசாரமும் அஜாக்கிரைதையும் உள்ளவர்களாகக் காணப்பட்டார்கள். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள இருளை எதிர்த்து நிற்காததினால், அது அவர்களைச் சுற்றிலும் கனத்த ஓர் மேகம் போல் மூடிக்கொண்டது. தேவதூதர்கள் இவர்களை விட்டு நீங்கி, தங்கள் முழு பலத்தோடு பொல்லாத தூதர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டு, தங்களுக்குத் தாங்களே இயன்ற மட்டும் உதவி செய்துகொள்ளுப்படி தேவனை நோக்கிக் கூப்பிட்டு முயற்சித்த அனைவருக்கும் சகாயஞ் செய்ய தீவிரித்ததைக் கண்டேன். ஆயினும் எவரெவர் தங்களுக்குத் தாங்களே உதவி செய்ய யாதொரு முயற்சியும் எடுக்காதிருந்தார்களோ, அவர்களைத் தேவ தூதர்கள் விட்டு நீங்கினார்கள். அவர்களை நான் பிறகு பார்க்கவில்லை. ஜெபத்தில் நின்றவர்கள் இடைவிடாமல் ஊக்கமாக மன்றடினபொழுது இயேசுவிடமிருந்து ஒரு ஓளி ரேகை புறப்பட்டுச் சென்று, அவர்களுடைய இருதயங்களைத் தைரியமடையச் செய்து முகங்களைப் பிரகாசிப்பித்தது.CCh 714.2

    நான் கண்ட அசைவிற்கு அர்த்தமென்ன வென்று கேட்டேன். லவோதிக்கேயருக்கு உண்மையுள்ள சாட்சியானவரின் ஆலோசனைப்படி கூறப்பட்ட நேர்மையான சாட்சியினால் இது ஏற்படுமென்று எனக்குக் காண்பிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொள்ளுகிறவரின் இருதயத்திலே அது கிரியை செய்து, தேவனுடைய கற்பனைகளை மேன்மைப்படுத்தவும் நேர்மையான சத்தியத்தை அறிவிக்கவும் அவரை வழி நடத்துகின்றது. சிலர் இந்த நேர்மையான சாட்சி மொழியைச் சகிக்கமாட்டார்கள். அவர்கள் அந்தச் சாட்சி மொழிக்கு விரோதமாக எழும்புவார்கள். அவர்களுடைய எழுச்சியானது தெய்வ ஜனங்களுக்குள்ளே அசைவை உண்டாக்கும். CCh 715.1

    உண்மையுள்ள சாட்சியானவருடைய வார்த்தைகளில் பாதி கூட மக்களால் கவனிக்கப்படவில்லை. சபையின் நற்கதியைத் தீர்மானிக்கும் பக்தி வினயம் காட்டுவதற்குரிய சாட்சி மொழி ஆழ்ந்த மனஸ்தாபத்தை அவர்களிலே உண்டு பண்ண வேண்டும். அதை மெய் மனதுடனே ஏற்றுக்கொளுகிறவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்து, சுத்திகரிப்பை அடைவர்.CCh 715.2

    “கவனித்துக் கேள்” என்று தூதன் கூறினார். அப்பொழுது கீத வாத்தியங்கள் பல முழங்குகின்றது போல எழுந்த இன்னிசை முழக்கத்தைக் கேட்டேன். நான் கேட்ட எவ்விதமான இன்னிசையையும் மிஞ்சிய இனிமை அதிலே தோன்றியது. அன்றியும் அவ் இசை இரக்க உருக்கம் பொருந்தி பரிசுத்த சந்தோஷமும் பரவசமும் அளிப்பதாயிருந்தது. என் உடலும் உள்ளமும் சிலிர்ப்படைந்தன. “நோக்கிப் பார் ” என்று தூதன் கூறினார். அப்பொழுது மிகவும் அசைக்கப் பெற்றிருந்த, முன்னர் எனக்குக் காண்பிக்கப் பெற்ற அதே கூட்டத்தை திரும்பவும் பார்த்தேன். ஆவியின் வேதனையினால் முன்னர் அழுது ஜெபித்தோர் எனக்கு முன்பாக காண்பிக்கப் பெற்றனர். அவர்களைச் சுற் றிலும் பாதுகாவலராயிருந்த தேவ தூதர்களின் எண்ணிக்கை இரட்டித்திருந்து. மேலும் அவர்கள் தங்கள் சிரசு முதல் பாதம் வரைக்கும் ஆயுதம் தரித்திருந்தனர். போர் வீரனின் கூட்டத்தைப் போல அவர்கள் அணி வகுத்துச் சென்றனர். அவர்கள் சகித்த கடும் போரை, மன வேதனையுடனே அனுபவித்த போராட்டத்தை அவர்களுடைய முகத் தோற்றம் வெளிப்படுத்தியது. ஆயினும் கொடிய வேதனையடைந்து காணப்பட்ட அவர்களுடைய முகங்கள் இப்பொழுது பரம வெளிச்சத்தினாலும் மகிமையினாலும் பிரகாசித்தன. அவர்கள் ஜெயமடைந்திருந்தனர். அவர்களுடைய உள்ளத்திலிருந்து ஸ்தோத்திரமும் பரிசுத்த சந்தோஷமும் பொங்கியது.CCh 715.3

    இக் கூட்டத்தினரின் இலக்கம் குறைவுபட்டிருந்தது. சிலர் அசைக்ககப்பட்டு, வழியிலே விடப்பட்டனர். ஜெயமடைவதையும் இரட்சிப்பைப் பெறுவதையும் தகுந்த விதமாக மதித்து, அவற்றிற்காக ஊக்கமாகப் போராடியவர்களுடன் சேராதிருந்த நிர்விசாரிகள் அவற்றை அடையவில்லை. அவர்கள் இருளிலே பின்னால் விடப்பட்டார்கள். அவர்களுடைய இடத்தில் சத்தியத்தைப் பற்றிக்கொண்டு அவர்களுடனே இருந்த பிறர் வந்து நின்றனர். பொல்லாத தூதர்கள் அவர்களைச் சுற்றி நெருக்கியும் இவர்கள் மேல் அவர்களுக்கு ஒரு வல்லமையுமில்லாதிருந்தது.CCh 716.1

    ஆயுதம் தரித்தோர் மிகுந்த வல்லமையுடனே சத்தியத்தைக் கூறியறிவிக்கிறதை நான் கேட்டேன். அது பலன் அளித்தது. மனைவியர் சிலர் தங்கள் புருஷரோடும் பிள்ளைகள் சிலர் தங்கள் பெற்றோருடனும் ஒன்று சேர்க்கப்பட்டார்கள். சத்தியத்திற்குச் செவி கொடுக்காதபடிக்கு தடுக்கப்பட்டிருந்த உண்மையுடையோர் அதை இப்பொழுது ஊக்கமாகக் கேட்டார்கள். இனத்தாரைப் பற்றிய பயமெல்லாம் பறந்து போயிற்று. சத்தியம் மாத்திரம் அவர்களுக்கு அரிய பெரிய காரியமாயிருந்தது. அவர்கள் சத்தியத்தின் மேல் பசியும் தாகமுமாயிருந்தார்கள். ஜீவனைப் பார்க்கிலும் சத்தியம் அவர்களுக்கு அதிக அருமையாயிருந்தது. இந்தப் பெரிய மாறுதலுண்டாகியதற்கு முகாந்திரம் என்னவென்று நான் கேட்டேன். பிரதியுத்தரமாகத் தூதன் பின் வருமாறு கூறினார். “அது பின் மாரியும் கர்த்தரின் சன்னிதானத்திலிருந்து வரும் இளைப்பாறுதலும் மூன்றாம் தூதனுடைய பலத்த சத்தமுமாயிருக்கிறது.”CCh 716.2

    தெரிந்து கொள்ளப்பட்ட இவர்களிடம் பெரிய வல்லமை விளங்கியது. துர்தன் “நோக்கிப் பார் ” என்றார். நான் திரும்பி, அவிசுவாசிகளையும் துன்மார்க்கரையும் பார்த்தேன். அவர்களுக்கு அமைதலில்லை. தெய்வ மக்களிடத்தில் காணப்பட்ட வைராக்கியமும் வல்லமையும் அவர்களுடைய கோபத்தை மூளச்செய்திருந்தது. அவர்களிடையே எப்பக்கத்திலும் குழப்பமே தோற்றமளித்தது. தெய்வத்தால் ஒளியும் வல்லமையும் பெற்றவர்களுக்கு விரோதமாக அடக்கு முறைகள் கையாளப்பட்டதைக் கண்டேன். காரிருள் அவர்களை மூடினது. என்ற போதிலும் அவர்களுடைய நிலை தேவனால் அங்கீகாரம் பெற்றதாயிற்று. அவர்கள் அவரை நம்பி உறுதியாக நின்றனர். அவர்களுக்கு தத்தளிப்பும் இடுக்கணும் உண்டானது. அடுத்தாற் போல அவர்கள் தேவனை நோக்கி ஊக்கமாக ஜெபித்ததைச் செவியுற்றேன். இரவும் பகலும் தங்களுடைய தெய்வத்தைப் பார்த்து விண்ணப்பங்களை ஏறெடுப்பதினின்று அவர்கள் நீங்காதிருந்தனர். (லூக். 18:7,8. வெளி 14:14,15).CCh 717.1

    பின் வருமாறு கூறும் வார்த்தைகள் என் காதிலே ஒலித்தன: “தேவனே, உமது சித்தம் ஆகக்கடவது! உமது நாமத்துக்கு மகிமை உண்டாகுமானால் உம்முடைய ஜனங்கள் தப்பிப் பிழைப்பதற்கான ஒரு வழியைக் கட்டளையிட்டருளும். எங்களைச் சூழவிருக்கும் புற ஜாதிகளினினறு எங்களை விடுவியும். அவர்கள் எங்களை மரணத்திற்கென்று நியமித்திருக்கிறார்கள். ஆனால் உமது புயம் இரட்சிப்பருளக் கூடும்.” இவ் வார்த்தைகளை மட்டுமே நான் நினைவிற்குக்கொண்டு வரக்கூடியதாயிற்று. சகலரும் தங்கள் அபாத்திரத் தன்மையைக் குறித்த ஆழ்ந்த உணர்வுடையவர்களாக காணப்பட்டதும்ல்லாமல், தெய்வ சித்தத்திற்குப் பரிபூரணமாகக் கீழ்ப்படிந்தவர்களானார்கள். ஆயினும் அவர்கள் ஒவ்வொருவரும் யாக்கோபைப் போல இரட்சிப்புக்காக ஊக்கமுடனே ஜெபித்து போராடினர்.CCh 717.2

    அவர்கள் ஊக்கமாகக் கூப்பிட ஆரம்பித்ததும், தேவதூதர்கள் பரிதாபமடைந்து போய், அவர்களை விடுவிக்க விரும்பினார்கள். அவர்கள் மீது அதிகாரமுடையவராக் விருந்த மிகவும் உயரமானதோர் தூதன் அவர்கள் அவ்வாறு செய்வதற்கு இடமளிக்கவில்லை. அவர் கூறியது இது: “தெய்வ சித்தம் இன்னமும் நிறைவேறிவிடவில்லை. அவர்கள் அந்தப் பாத்திரத்திலே பானம்பண்ணவும், அந்த ஸ்நானத்தைப் பெறவும் வேண்டும்.”CCh 718.1

    விரைவில், வானங்களையும் பூமியையும் அசையச் செய்த தேவ சத்தத்தை நான் கேட்டேன். (யோவேல் 3:16; எபி. 12:26; வெளி. 16:17 பார்க்கவும்) ஒரு பலத்த பூமியதிர்ச்சி உண்டாயிற்று. எப்பக்கத்திலும் கட்டடங்கள் விழுந்தன. அப்புறமாக வெற்றி முழக்கத்தின் சப்தம் பலமாகவும் தெளிவாகவும் இராகத்துடனும் பெரும் இடுக்கணிலும் அடிமைத் தனத்திலும் இருந்த அந்தக் கூட்டத்தாரை நான் பார்த்தேன். அவர்கள் தங்கள் சிறையிலிருந்து நீங்கியிருந்தனர். ஒரு வெளிச்சம் மகிமையாக அவர்கள் மேல் பிரகாசித்தது. அப்பொழுது அவர்கள் மிகுந்த சிறப்புடனே விளங்கினர். கவலை, சோர்வு ஆகியவற்றின் குறிகள் அவர்களுடைய முகங்களிலிருந்து அகன்று போய்விட, ஆரோக்கியமும் அழகும் அவர்களிலே விளங்கின. எத்தனை அழகாக அவர்கள் காணப்பட்டனர்! அவர்களைச் சூழ்ந்து கொண்டிருந்த அவர்களுடைய சத்துருக்களாகிய மற்றவர்கள் செத்தவர்கள் போல விழுந்தனர். இரட்சிப்படைந்த பரிசுத்தவான்கள் மேல் பிரகாசித்த ஜோதியை அவர்கள் சகிப்பதற்குக் கூடவில்லை. இயேசுவானவர் வானத்தின் மேகங்கள் மேல் காணப்படுமளவும், இந்த மகிமையும் வெளிச்சமும் அவர்கள் பேரில் நிலைத்திருந்தன. உண்மையுள்ளவர்களாக விருந்து பரீட்சையில் நிலைநின்றவர்களாகிய இக்க்கூட்டத்தார் ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாகி மகிமையின் மேல் மகிமையடைந்தனர். கல்லறைகள் திறவுண்டன. பரிசுத்தவான்கள் அழியாமையைத் தரித்து, “மரணத்தின் மேலும் பாதாளத்தின் மேலும் ஜெயம்” என ஆர்ப்பரித்துக் கொண்டும் வெளிப்பட்டனர். அவர்கள் உயிரோடிருக்கும் பரிசுத்தவான்களோடே கூட கர்த்தருக்கு எதிர்கொண்டு போக ஆகாயத்திலே எடுத்துக் கொள்ளப்பட்டனர். அப்பொழுது அழியாமையுடைய நாவுகள் ஒவ்வொன்றிலிருந்தும் மகிமைப்படுத்துகின்ற ஜெய கீதங்கள் வெளிப்பட்டன. 1T 179- 184CCh 718.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents