Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஓய்வு நாளில் கல்விச்சாலை செல்லுதல்

    நான்காம் கற்பனையைக் கைக்கொள்ளுகிற எவனும் தனக்கும் பிறருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர் இருப்பதைக் காண்பான். ஓய்வுநாள் ஒரு பரீட்சை; அது மனித ஏற்பாடல்ல. ஆனால் கடவுள் பரீட்சை. தேவனைச் சேவிக்கிறவர்களையும் சேவியாதவர்களையும் ஓய்வுநாள் வித்தியாசப்படுத்திக் காட்டு கிறது. இதே விஷயத்தின் பேரில் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமிடையே கடைசி போராட்டம் நடைபெறும்.CCh 100.2

    நம்மவருள் சிலர் தம் மக்களை ஓய்வு நாளில் கலாசாலைக்கு அனுப்புகின்றனர். பெற்றோர் இவ்விஷயத்தில் கட்டாயப்படுத்தப்படவில்லை; ஆனால் கலாசாலை அதிகாரிகள், பிள்ளைகள் ஆறு தினங்களிலும் கலாசாலை வராவிட்டால் அவர்களை கலாசாலையில் ஏற்றுக்கொள்ள மறுத்து விடுகின்றனர். இக்கலா சாலைகள் சிலவற்றில் வழக்கமான பாடங்கள் மட்டுமின்றி பலவித தொழில்களும் கற்பிக்கப்படுகின்றன. இங்கு கற்பனைகளைக் கைக்கொள்கிறோமென சொல்பவர்களின் பிள்ளைகளும் அனுப்பப்படுகின்றனர். ஒய்வுநாளில் நன்மை செய்வது நியாயந்தான் என்று கிறிஸ்து சொன்னதை எடுத்துக்காட்டி தங்கள் தவறான போக்கை சரியென ரூபிக்கப்பார்க்கிறார்கள். இக்காரனம் சரியானால் தம் மக்களுக்கு ஆகாரம் சம்பாதிக்க ஓய்வுநாளில் வேலை செய்வதும் நியாயமாகும். இவ்வித விதண்டாவாதங்களுக்கு முடிவேயிராது. நான்காம் பிரமாணத்தைக் கைக்கொள்ள முடியாத இடத்தில் தம் மக்களை வைத்து தேவன் அவர்கள் செய்கையை அங்கீகரிப்பாரென்று நம் சகோதரர்கள் எதிர் பார்க்கக்கூடாது. தங்கள் பிள்ளைகள் ஏழாம் நாளில் கலாசலைக்குச் செல்லாமல் விடுமுறை பெற்றுக்கொள்ள, அவர்கள் அதிகாரிகளைக் கண்டு தக்க ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இதுவும் தவறினால், என்ன நஷ்டம் ஏற்பட்டாலும், தேவ கட்டளைக்கே கீழ்ப்படிய வேண்டுமென்பது தெளிவு.CCh 101.1

    சிலர் தேவன் அவ்வளவு கண்டிப்புள்ளவரல்லவென்று வறுபுறுத்துகின்றனர்; இவ்வளவு பெரும் நஷ்டத்தோடும், தேசச் சட்டத்துக்கு முரண்பாடாகவும் கண்டிப்பாக ஓய்வு நாளை ஆசரிக்கத் தாங்கள் கடமைப்பட்டவர்களல்லவென்றும் கூறுகின்றனர். மனிதத் திட்டங்களுக்கு மேலாக தேவ கட்டளையை மதிக்கிறோமா என்பதின் பரிசோதனை இதில் தானிருக்கிறது. கடவுளைக் கனம் பண்ணுகிறவர்களையும் கனம் பண்ணாதவரக்ளையும் பாகுபடுத்திக் காட்டுவது இதுவே. நமது பக்தியை இதின் மூலம் ரூபிக்க வேண்டும். சகல யுகங்களிலும் தேவன் தமது மக்களோட்ய் நடந்துகொண்ட மாதிரி மூலம் அவர் திட்ப நுட்பமான கீழ்ப்படிதலை எதிர் பார்க்கிறார் என அறிகிறோம்.CCh 101.2

    பெற்றோர் தம் மக்களை உலகக் கல்வி பெற இடங்கொடுத்த ஓய்வுநாளை சாதாராண நாளாக்கினால் தேவ முத்திரை அவர்கள் மேல் போடப்படமாட்டாது. அவர்கள் உலகத்தோடு அழிக்கப்படுவார்கள். ஆகையால், அவர்களுடைய இரத்தப் பழி பெற்றோர் மேல் சுமருமல்லவா? நமது பிள்ளைகளுக்குத் தேவ கற்பனைகளைத் திட்டமாகப் போதித்து அவர்களைப் பெற்றோருடைய ஆதிக்கத்திற்குட்படுத்தி விசுவாசத்தினாலும், ஜெபத்தினாலும் பிள்ளைகளை அவரிடம் ஒப்படைத்தால் அவர் நமது முயற்சிகளுடன் ஒத்துழைப்பதாக வாக்களித்திருக்கின்றார். தேசத்தை அழிக்கும் சங்காரம் கடந்து போகும்போது நம்மோடுகூட நமது பிள்ளைகளும் கடவுளுடைய கூடாரத்தின் மறைவில் பாதுகாப்புப் பெறுவர். 2 T.T. 180-184.CCh 102.1