Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இன்று தைரியமாக ஜீவியுங்கள்

    இருதயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேவ சத்தியமானது உங்களை இரட்சிப்புக் கேற்ற ஞானமுள்ளவர்களாக்கும். அதற்கு விசுவாசத்துடன் கீழ்ப்படிந்தால், ஒவ்வொரு நாளின் போராட்டங்களுக்கும், வேலைகளுக்கும் போதுமான கிருபைகளை பெற்றுக் கொள்ளலாம். நாளைக்கு அவசியமான கிருபைகள் இன்று உங்களுக்கு தேவை இல்லை. கிரியையை நடப்பிக்க இன்றைய நாள் மட்டுமே உங்களுக்குரியது என உணர வேண்டும். இன்று ஜெபம் பெறுங்கள்; இன்று சுயத்தை தள்ளுங்கள்; இன்று விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; இன்று தேவனுக்கான வெற்றிகளை அடையுங்கள். நம்மைச் சுற்றியிருக்கும் காரியங்களும், சூழ் நிலைகளும், நம்மைச் சுற்றி ஏற்படும் மாறுதல்களும், எல்லாவற்றையும் ஆராய்ந்தறியும் தேவ வசனமும் ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய நியாயமான கடமைகளைச் செய்ய நமக்குப் போதிக்கின்றன. நீங்கள் பலனடைய கூடாத சிந்தனைகளில் உங்கள் மனதைச் செலுத்தி, அது சங்கடப்ப்ட இடங் கொடாமல், அனுதினமும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து, தற்போது கஷ்டமாகத் தோன்றும் ஜீவியத்தின் கடமைகளைச் செய்து நிறைவேற்ற வேண்டும். 3T. 333.CCh 266.2

    அனேகர் தங்களைச் சுற்றிலுமுள்ள கொடிய தீங்கையும், பெலவீனத்தையும், மருளவிழுதலையும் காணத்தங்கள் கண்களைப் பொறுத்தி, அவைகளைப்பற்றிப் பேசி தங்கள் இருதயங்களை துக்கத்தினாலும், சந்தேகத்தினாலும் நிரப்புகின்றனர். மகா வஞ்சகக் காரனின் கிரியைகளைத் தங்கள் மனதில் பிரதானமாகக் கொண்டு, தங்கள் ஜீவியத்தின் அதைரியமான அனுபவங்களை சிந்தித்து, பரம தந்தையின் வல்லமையையும், ஒப்பிடப்ப்டாத அன்பையும் அனேகர் காணாமற் போகின்றனர். சாத்தான் விரும்புவது இதுதான். தேவனின் வல்லமை, அன்பு இவைகளை சிறிதளவு சிந்தித்து, நீதியின் சத்துருவை மா வல்லமையால் உடுத்துவிக்கப்பட்டவனாக எண்ணுவது தவறு. கிறிஸ்துவின் வல்லமையைப் பற்றி நாம் உரையாடல் வேண்டும். சாத்தானின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு நாம் முழுதும் சக்தியற்றவர்கள்; ஆனால் தேவன் தப்புவதற்கு ஒரு வழியை வைத்திருக்கிறார். உன்னதமானவரின் குமாரன் நமக்காக யுத்தம் செய்ய வல்லவர், நம்மிடத்தில் அன்பு கூர்ந்தவர் மூலமாக, நாம் முற்றிலும் ஜெயங்கொண்டவர்கள் ஆகலாம்.CCh 267.1

    சாத்தானின் வல்லமையைக் குறித்துப் புலம்பி, நமது பெலவீனங்களையும், மருள விழுதலையும் குறித்து சதா சிந்தனை செய்வதால் ஆவிக்குரிய பெலன் நமக்கு வருவதில்லை. நமக்காக செலுத்தப்பட்ட பலியின் சக்தியைக் குறித்த இப்பெரும் சத்தியம் உயிருள்ள இலட்சியமாக நமது மனதிலும், இருதயங்களிலும் நிலை பெறச் செய்தல் வேண்டும்; அவரது வசனத்தில் தெளிவாகக் குறிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி நாம் செய்தல் தேவன் நம்மை முற்றும் முடிய இரட்சிக்கக் கூடும், அவர் அப்படி இரட்சிக்கிறவராயிருக்கிறார். தேவனுடைய சித்தத்திற்கு இசைவாய் நமது சித்தத்தை வைப்பதே நமது வேலை. பாவ நிவிர்த்திக்கான இரத்தத்தின் மூலம் நாம் தெய்வீக சுபாவத்தில் பங்கு கொள்கிறவர்களாகிறேம்; கிறிஸ்துவின் மூலம் தேவனுடைய பிள்ளைகளாகிறேம்; தேவன் தமது குமாரனை நேசிப்பது போன்று நம்மையும் நேசிக்கிறார் என்ற நிச்சயமும் நமக்கு அருளப்படுகிறது. நாம் கிறிஸ்துவுடன் ஐக்கியப் படுகிறோம். கிறிஸ்து நடத்தும் பாதையில் நாம் நடக்கிறோம். சாத்தான் நம் வழியில் வீசும் இருள் நிழலை அகற்றுவதற்கு கிறிஸ்து வல்லமையுடையவர், இருள், அதைரியம் இவைகளுக்குப் பதிலாக நமது இருதயங்களில் அவரது மகிமையின் சூரிய ஒளி பிரகாசிக்கிறது.CCh 267.2

    சகோதர, சகோதரிகளே, நாம் நோக்கிப் பார்ப்பதால் மாறுதலடைகிறோம். தேவனுடையதும், இரட்சகருடையதுமான அன்பைப் பற்றி பேசுவதினாலும், தெய்வீக குணம் பூரணமடைவதினாலும், விசுவாசத்தினாலே கிறிஸ்துவின் நீதி நமதென்று உரிமை பாராட்டுவதினாலும், நாம் அவருக்கொப்பாக மறுரூபமடைகிறோம். ஆகவே நாம், அக்கிரமம், அசுத்தம், ஏமாற்றம், சாத்தானின் வல்லமையின் அடையாளங்கள் போன்ற இனிமையற்ற சித்திரங்களை நமது மன மண்டபத்தில் தொங்க விடாமலும், நமது ஆத்துமாக்கள் அதைரியத்தால் நிரம்பத்தக்கக்கதாக் அவைகளைப்பற்றி பேசிப் புலம்பாமலுமிருப்போமாக. அதைரியப்பட்ட ஆத்துமா, ஒளியற்ற சரீரமாக தேவ ஒளியை ஏற்பதில் தவறிப் போவது மட்டுமின்றி, பிறரும் அதையடையாதபடித் தடைசெய்கிறது. சாத்தான் தனது வெற்றிச் சித்திரங்களின் பலனைக்காண, விழைந்து மானி டரை இளைக்கரித்தவர்களும், உண்மையற்றவர்களுமாக்க பிரியப்படுகிறான். 5T. 741-745.CCh 268.1