Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம் 29

    திருமணம்

    கடவுள் மனுஷனுக்குத் தோழியாகவும், துணைவியாகவும், அவனுடன் ஒன்றாய் இருந்து அவனை மகிழ்ச்சி அடையப் பண்னவும், அவனுக்கு ஊக்கமுண்டாக்கவும் அவனுக்கு நல்வாழ்வு நல்கவும், அவனிடத்திலிருந்தே மனுஷியை உண்டாக்கினார். அவன் தன் கடமை முறையில் அவளுக்கு வலிமையுள்ள உதவியாளனாக இருக்கவேண்டும். தூய நோக்கத்துடன் திருமண உறவிற்குள் பிரவேசிக்கிறவர்கள் யாவரும், கணவன் மனைவியினுடைய உள்ளத்தின் தூய அன்பைப் பெற்றும், மனைவி தன் கணவனுடைய குணத்தை மிருதுவாக்கி வளர்த்து அதைப் பூரணப்படுத்தியும் இவ்விதமாய் அவர்கள் தங்களைக் குறித்துக் கடவுள் கொண்டிருக்கின்ற நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்.CCh 373.1

    கிறிஸ்து இந்த விவாக நியமத்தை அழித்துப் போடுகிறதற்காக வராமல், இதைத் தன் பழைய தூய்மைக்கும் மேன்மைக்கும் திருப்பிச் சிர்படுத்தவே வந்தார். அவர் மக்களுக்குக் கடவுளுடைய நல்லொழுக்கச் சாயலைத் திரும்பக் கொடுக்கும்படி வந்து திருமணத் தொடர்பிற்கு அனுமதி அளித்து, தம் ஊழியத்தைத் தொடங்கினார்.CCh 373.2

    ஆதாமுக்கு ஏவாளை ஏற்ற துணையாக கொடுத்தருளியவரே தம் முதல் அற்புதத்தைத் திருமண விழாவிலே செய்தருளினார். நண்பர்களும், உறவினர்களும் கூடி இருந்து மகிழ்ச்சி கொண்டாடிய விருந்து மண்டபத்திலே, இங்ஙனம் திருமணம் என்பது தாமே ஏற்படுத்திய நியமம் என்று அவர் ஒப்புக்கொண்டு, அதற்கு அனுமதி தந்தருளினால். ஆண்களும், பெண்களும் பரிசுத்த விவாக முறைமையினால் இணைக்கப்படவும், குடும்பத்தை ஆதரிக்கவும், அதன் உறுப்பினர் கனத்தினால் முடி சூட்டப்படவும், உன்னத குடும்பத்தின் உறுப்பினராய் அங்கீரரிக்கப்படவும் நியமித்தருளினார்.CCh 373.3