Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஓய்வுநாட் பள்ளிக்கூடம்

    ஆத்துமாக்களை ஆதாயப் படுத்துவதே ஓய்வுநாள் பள்ளிக்கூட வேலையின் நோக்கமாயிருக்க வேண்டும். ஓய்வுநாள் பள்ளிக்கூட முறைமை பிழையில்லாதிருக்கலாம்; உபகரணங்கள் யாவும் விரும்பப்படத்தக்கவைகளாய் இருக்கலாம், ஆனால் இளைஞரும் வாலிபரும் கிறிஸ்துவினிடம் கொண்டு வரப்படாவிட்டால் ஓய்வு நாட்ப் பள்ளிக்கூடம் தோல்வியடையும். கிறிஸ்துவிடம் ஆத்துமாக்கள் இழக்கபடாவிட்டால் அவை வெறும் ஆசார மதக் கொள்கையின் செல்வாக்கால் மேலும் மேலும் உணர்வற்றுப்போம். உதவி தேவைப்படுகிறவர்களின் இருதயக் கதவை கிறிஸ்து தட்டும்பொழுது ஆசிரியரும் அவரோடு ஒத்துழைக்க வேண்டும். ஆவியின் சத்தத்திற்கு மாணவர்கள் செவிகொடுத்து, இயேசு உட்பிரவேசிக்க தங்கள் இருதயக் கதவைத் திறந்தால், அவர்கள் தேவனுக்கு கடுத்தவைகளை அறிந்துகொள்ளத் தக்கதாக அவர்கள் மனதை அவர் திறப்பார். ஆசிரியர் வேலை சாதாரணமானத்; ஆனால் இயேசுவின் ஆவியினால் செய்யப்படும் பொழுது தேவ ஆவியானவருடைய கிரியையின்மூலம் அதற்கு ஆழகும் திறமைய்ம் அருளப்படும்.CCh 96.1

    பெற்றோரே, நாள்தோறும் உங்கள் குழந்தைகளுடன் ஓய்வுநாட் பாடத்தைப் படிப்பதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். பரிசுத்த சரித்திரத்தின் சிறந்த பாடங்கள் படிக்கும் நேரத்தை விட்டுவிடுவதைப் பார்க்கிலும் அவசியமானால் நண்பர்களைச் சந்திப்பதை விட்டுவிடுங்கள். பெற்றோரும், பிள்ளைகளும் வேத பாடம் படிப்பதால் ஏகமாக பயன் அடைவர். பாடத்தின் முக்கிய வசனங்கள் மனப்பாடம் செய்யப்படட்டும். ஆனால் அது பாரமான வேலையாக அல்ல, ஒரு சிலாக்கியமாகக் கருதப்படட்டும். ஞாபக சக்தி முதலில் குறைவாக இருப்பினும் அப்பியாசத்தினால் அது பலம் அடையும். ஆக, சிறிது காலமான பின் இவ்விதம் தேவ வசனத்தை பொக்கிஷமாக சேர்த்து வைப்பதில் உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். இப்பழக்கம் ஆவிக்குரிய வளர்ச்சிக்குப் பெரும் பக்க உதவியாகும்.CCh 96.2

    உங்கள் குடும்பத்தில் வேதம் படிக்க ஒழுங்கு திட்டத்தை அனுசரியுங்கள். லெளகீக வேலைகளையும், அனாவசியமான தையல்களையும், அபரிமிதமான உணவு ஆயுத்தங்களையும் தள்ளிவிடுங்கள். ஜீவ அப்பத்தினால் ஆத்துமா போஷிக்கப்படுகிற தென்கிற நிச்சத்தை உடையவர்களாயிருங்கள். தேவ வசனத்தை ஆராய அனுதினமும் மனமகிழ்ச்சியுடன் ஒருமித்து செலவிடும் அரை மணி அல்லது ஒரு மணி நேரத்தின் நற் பலன்களை மதிப்பிட இயலாது. ஒரு பொருள் பற்றி பல சமயங்களில் பல சூழ் நிலைகளில் சொல்லப்பட்ட சகல காரியங்களையும் ஒன்று திரட்டி, வேதம் தன்னையே விளக்கும்படி இடமளிக்க வேண்டும். குடும்ப வகுப்பு, உங்களைச் சந்திக்க வருகிறவர்கள் நிமித்தம் சிதைந்துபோக விடாதிருங்கள். வகுப்பு நடத்தப்படும் சமயத்தில் அவர்கள் வர நேரிடின் அவர்களையும் அதில் கலந்துகொள்ளச் செய்யுங்கள். உலக இன்பங்களையும் ஆதாயங்களையும் விட கடவுள் வசனத்தையே பெரிதும் நீங்கள் பேணுவதை அவர்கள் காணட்டும்.CCh 97.1

    சில ஓய்வுநாட் பள்ளிக்கூடங்களில் பாடத்தாட்களிலிருந்து பாடத்தைப் புரட்டி வாசிப்பதே பழக்கமாயிருப்பதைக் கண்டு வருந்துகிறேன். அப்படிச் செய்யலாகாது. அனாவசியமாகவும் பாவத்திற்கேதுவாகவும் செலவிடப்படும். வேளைகளை வேத வசனங்கள் கற்றுக்கொள்வதில் பயன்படுத்தினால் இந்தத் தவறுகள் நேரிட அவசியமில்லை. பகற் பள்ளிக்கூடத்துப் பாடங்களை படிப்பதை விட ஓய்வுநாட் பள்ளிக் கூடப் பாடத்தை ஆசிரியரும், மாணவரும், குறைந்த அக்கரையுடன் படிக்கக் காரணம் இல்லை. மட்டில்லா அதிமுக்கியம் வாய்ந்த பொருட்களைப் பற்றிய இப்பாடங்களை மிக கருத்தாய்ப் படிக்க வேண்டும். இவ்விஷயத்தில் அசதி காட்டுவது கடவுளுக்கு அருவருப்பு.CCh 97.2

    ஓய்வுநாட் பள்ளி ஆசிரியர்களின் உள்ளம் தெய்வ சத்தியத்தால் பலமும் அனலும் அடையவேண்டும். அவர்கள் திருவசனத்தைக் கேட்கிறவர்களாக மட்டுமின்றி அதின்படி செய்கிறவர்களாகவும் இருக்கவேண்டும். திராட்சக் கொடிகள் செடியிலிருந்து போஷணைப் பெறுவது போல அவர்கள் கிறிஸ்துவின் போஷணைப்பெறவேண்டும். பரம கிருபையாகிய பனி அவர்கள் மேல் பெய்வதினால் அவர்கள் உள்ளம் உயர் குலச் செடியின் மொட்டு மலர்வது போன்று விரிந்து கடவுள் தோட்டத்துப் பூக்கள் போல் நன்றியின் நறுமணம் வீசவேண்டும். ஆசிரியர்கள் கருத்தாக வேத வசனத்தைக் கற்பவர்களாக இருக்கவேண்டும். மேலும், கிறிஸ்துவின் பாடசாலையில் அனுதினமும் கற்று, மா பெரிய ஆசிரியரும் உலகத்தின் ஒளியுமாகிய கிறிஸ்துவிடம் தாங்கள் பெறும் ஒளியை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கக் கூடியவர்கள் என்னும் சத்தியத்தை சதா வெளிப்படுத்துகிறவர்களாக இருக்க வேண்டும்.CCh 98.1

    உத்தியோகஸ்தர்களைத் தெரிந்தெடுக்கையில் ஆளுக்கு முக்கியத்துவம் கொடாமல், பொறுப்பான இடங்களில், தெய்வத்தை நேசிக்கிறவர்களையும், அவருக்குப் பயப்படுகிறவர்களையும், தெய்வ யோசனை தேடுகிறவர்களையும் நியமியுங்கள் 2 T.T. 557 - 566.CCh 98.2