Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இசைவும் ஐக்கியமுமே மகா பலத்த சாட்சி

    நம் பேராபத்டு உலகந்தரும் எதிர்ப்பல்ல; விசுவாசிகளென சொல்லிக்கொள்பவர்கள் உள்ளத்தி காணப்படும் தீமையே பேராபத்துகளை விளைவித்து, தேவனுடைய ஊழிய முன்னேற்றத்தைத் தடுக்கிறது. பொறாமை, பிறரைப் பற்றிய சந்தேகம், குற்றங் கண்டு பிடித்தல், தீங்கு பேசுதல் இவைகளால் நிறைந்திருப்பதை விட, ஆவிக்குரிய ஜிவியத்தை அதிக நிச்சயமாகப் பலவீனப் படுத்துவது வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கி வருகிற ஞானமாயிராமல், லெளகீக சம்பந்தமானதும், ஜென்ம சுபாவத்துக்குரியதும் பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும், சகல துர்ச் செய்கைகளுமுண்டு. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளா தாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாய மற்றதாயுமிருக்கிறது. நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. யாக். 3:15-18.CCh 166.2

    பலவித சுபாவங்களுடைய மனிதர்களுக்குள் இசைவும் ஐக்கியமும் காணப்படுவது, பாவிகளை இரட்சிக்க தேவன் தமது குமாரனை உலகத்திற்கு அனுப்பினாரென்பதற்குச் சாட்சியாகும். இப்படிச் சாட்சி பகருவது நம் சிலாக்கியமாகும். ஆனால், இப்படிச் செய்வதற்கு நாம் நம்மைக் கிறிஸ்துவின் கட்டளைக்குட்படுத்த வேண்டும். நமது குணம் அவர் குணத்தோடு உருவாக்கப்பட்டு, நம் சித்தம் அவர் சித்தத்திற்கு ஒப்புவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாம் சற்றும் முரண்படாத சிந்தையுடன் சேர்ந்துழைப்போம்.CCh 167.1

    சின்னஞ் சிறு பேதங்களைப்பற்றி நாம் சிந்தித்துக்கொண்டிருப்பது நம் கிறிஸ்துவ ஐக்கியத்தை நாசமாக்க ஏதுவாகும். இவ்விதமாக சத்துரு நம்மை மேற்கொள்ள இடங்கொடுக்கலாகாது. நாம் தேவனோடும் ஒருவரோடொருவரும் நெருங்கி ஒன்று படுவோமாக. அப்பொழுது நாம் கர்த்தரால் நடப்பட்டு, ஜீவநதியால் நீர்ப்பாய்ச்சப்படும் நீதியுள்ள விருட்சங்களைப் போலிருப்போம். நாம் எவ்வளவு மனிதரக்கூடும்! நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார் - (யோவா. 15:8.) என்று கிறிஸ்து சொன்னாரல்லவா?CCh 167.2

    கிறிஸ்துவின் ஜெபம் முழுவதும் விசுவாசிக்கப்பட்டு, தேவனுடைய ஜனங்கள் அதன் போதனையைத் தங்கள் அனுதின ஜீவியத்தில் அப்பியாசிக்கும்போது, ஒத்துழைப்பு நமக்குள் காணப்படும். சகோதரன் சகோதரனோடு கிறிஸ்துவின் அன்பாகிய பொற்கயிற்றால் கட்டப்படுவான். தேவ ஆவியானவர் மட்டுமே இந்த ஒற்றுமையைக் கொண்டு வர முடியும். அவரோடு ஐக்கியப்படுவதால், மகா பரிசுத்தமான விசுவாசத்தில் ஒருவர் மற்றவர்களோடு ஐக்கியப்படமுடியும். தேவன் விரும்புகிறபடி நாம் அந்த ஐக்கியத்தை அடைய சிரமத்துடன் முயன்றால், அதை நாம் அடைவோம். 8 T. 242, 243.CCh 167.3

    பெருவாரியான ஸ்தாபனங்களோ, பெரிய கட்டடங்களோ, வெளிப்படையான ஆடம்பரமோ அல்ல, ஆனால் விசேஷித்த ஜனத்தின் ஒன்றுபட்ட உவைப்பும், தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களின் ஐக்கியமும், தேவனுக்குள் கிறிஸ்துவோடு மறைந்த ஜீவியமுமே காரியம். ஒவ்வொருவனும் தன்தன் இடத்தில் நின்று தன் சிந்தை, சொல், செயல்களால் தகுந்த செல்வாக்கை உபயோகிக்க வேண்டும். எல்லா ஊழியரும் இப்படிச் செய்யும்போது அவருடைய வேலை பூரணமும் இசைவானதுமாயிருக்கும். 8T. 183.CCh 167.4

    மெய் பொய் இரண்டையும் துல்லியமாய்க் கண்டு கொள்ளக்கூடிய உண்மையான விசுவாசமும் தெளிந்த புத்தியுமுள்ள மனிதர்களைத் தேவன் அழைக்கிறார். ஒவ்வொருவனும், தன்னைக் காத்து, யோவான் பதினேழாம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து அப்பியாசித்து, இக்காலத்துக்குரிய சத்தியத்தில் ஜீவனுள்ள விசுவாசத்தைக் காத்துகொள்ளவேண்டும். கிறிஸ்துவின் ஜெபத்தில் சொல்லப்பட்ட பழக்கங்களுக்கு நம்மை வழி நடத்தும் தன்னடக்கம் நமக்குத் தேவை. 8 T. 239.CCh 168.1

    தேவ நோக்கத்தை அதன் உயரமும் ஆழம் இவைகளுக்கிசைய நிறைவேற்ற வேண்டுமென்பதே இரட்சகருடைய இருதயவாஞ்சை. உலகமுழுவதும் அவர்கள் சிதறியிருந்த் போதிலும், அவர்கள் ஒன்றாயிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் வழிகளை விட்டு, அவர் வழியைப் பின்பற்ற ஆசித்தாலன்றி, தேவன் அவர்களைக் கிறிஸ்துவுக்குள் ஒன்றுபடுத்த முடியாது. 8 T. 243.CCh 168.2