Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பள்ளியின் மதிப்பைக் காப்பாற்றுவது மாணவரின் உத்தரவாதம்

    தெய்வத்தை நேசிப்பதாகவும் சத்தியத்திற்குக் கீழ்படிவதாகவும் கூறும் மாணவர் தங்களை ஆண்டுகொள்ளும் சக்தியையும் மார்க்க இலட்சியத்தின் பலத்தையும் உடையவர்களாக இருந்து, சோதனைகளின் நடுவே இயேசுவானவருக்கென்று நிலைதடுமாறாதவர்களாகக் கல்லூரியிலும், மாணவர் விடுதிகளிலும், அவர்கள் எங்கெங்கே இருந்தபோதிலும் சாட்சிகளாக இருக்க வேண்டும். மத பக்தி தேவனுடைய வீட்டில் அணிந்துகொள்ளும் ஆடையாக இருந்தால் மட்டும் போதாது. மார்க்க இலட்சியம் வாழ்வு முழுவதிலும் ஊடுருவிக் காணப்பட வேண்டும்.CCh 558.1

    ஜீவ ஊற்றிலே பானம் பண்ணுகிறவர்கள் உலகினர் போலவே வேடிக்கையான, விதவிதமான பொழுது போக்குகளிலும் உல்லாசத்திலும் நாட்டம் கொள்ளார். தங்களை விட்டு விடுகின்ற கவலைகளையும் பாரங்களையும் அவர்கள் இயேசுவானவருடைய பாதத்திலே வைத்துவிடுவதினால், அவரிலே அவர்கள் கண்டடைந்த சமாதானமும் சந்தோஷமும் அவர்களுடைய நடத்தையிலும் குணத்திலும் காணப்படும். கீழ்ப்படிதல், கடமை ஆகியவற்றின் பாதையிலே போதுமென்ற மனதையும் சந்தோஷத்தையும் அவர்கள் கண்டறிந்தார்கள் என்று வெளியாகும். மாணவர்கள் சிலர் மீது இவர்களில் சிலர் செல்வாக்குடையவர்களாவர். அத்தகைய நற் செல்வாக்கினால் பள்ளி முழுவதுமே பிரயோஜனமடையும்.CCh 558.2

    இந்த மெய்ப் படையின் உறுப்பினர் எத்தகைய உண்மைக் கேட்டையும் ஒற்றுமையின்மையையும் பள்ளியின் விதி முறைகளையும் கட்டுப்பாடுகளையும் அசட்டை செய்வதையும் தடுத்து, ஆசிரியர்களையும் பேராசிரியர்களையும் இளைப்பாற்றிப் பெலனடையச் செய்வர். அவர்களுடைய செல்வாக்கும் கிரியைகளும் இரட்சிப்பின் வாசனையுடையதாக விருந்து, தேவனுடைய மகா நாளில் நிலைபெற்று, வருங்கால உலகிலும், அவர்களைப் பின்செல்லும். இவ்வுலகில் அவர்கள் வாழுகின்ற வாழ்வின் செல்வாக்கு இடைவிடாத நித்திய காலத்தின் நெடுகிலும் விளங்கும். பள்ளியிலே பயிலும் வாஞ்சையும், மனச்சாட்சியின் உணர்வும் உண்மையுமுடைய ஒரு இளைஞன் பள்ளியின் விலை மதிக்கமுடியாத சொத்து. பரமதூதர்கள் அன்புடனே அவனைக் கடாட்சிக்கின்றனர். அவனுடைய அருமை இரட்சகர் அவனை நேசிக்கின்றார். பரலோக புஸ்தகத்திலே அவன் செய்த ஒவ்வொரு நீதியின் கிரியையும், எதிர்த்த ஒவ்வொரு சோதனையும், மேற்கொண்ட ஒவ்வொரு தீங்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவன் நித்திய ஜீவனைப் பற்றியக் கொள்ளத்தக்கதாக இவ்வாறு வருங்காலத்திற்கென்று பலத்ததோர் அஸ்தி வாரத்தைப் போடுகின்றான்.CCh 559.1

    தம்முடைய வேலை முன்னேறும்படியாகத் தெய்வம் தமது கருவிகளாக ஏற்படுத்தியிருக்கும் ஸ்தாபனங்களை நிலைப்படுத்தி, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பு பெரும் அளவில் கிறிஸ்தவ இளைஞரின் மேலேயே சார்ந்திருக்கின்றது, செயல் புரிய வேண்டியவர்களாக விருக்கின்ற இன்றைய இளைஞரின் பேரிலேயே இந்தப் பக்தி வினயமான பொறுப்பு சாரும். இந்நாள்போல மகா முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தும் பொறுப்பு ஒரு காலும் மனுஷ ஜாதியின் ஒரு தலைமுறை யாரைச் சாரவில்லை. அங்ஙனமாகில், தம்முடைய உப கரணங்களாகத் தெய்வம் பயன்படுத்துமாறு பெரும் ஊழியத்திற்கென்று இளைஞர் பயிற்றுவிக்கப்படுவது எத்தனை முக்கிய மானது? நமது இளைஞர்கள் பேரில் வேறுயாரையும் விட அதிகமான உரிமை அவர்களின் சிருஷ்டிகருக்கே உண்டு.CCh 559.2

    அவர்களுடைய சரீர மனோ சக்திகளாகிய ஈவுகளுக்குப் பிரதியாக அவர்களுடைய ஜீவனும் அவரால் அவர்களுக்குக் கையளிக்கப்பட்டவை நித்திய காலத்தைப் போலவே நிலை நிற்கின்ற ஒரு அலுவலை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடுமாறு, நல்ல அபிவிருத்தி செய்யுமாறு அவர்களுக்கு அவர் திறமைகளை அளித்திருக்கின்றார். அவருடைய பெரும் ஈவுகளுக்குப் பிரதியாக அவர்களுடைய மானத, சன்மார்க்கத்திறனை உரிய முறையில் அவர்கள் பயன்படுத்த வேண்டுமென்று விரும்புகின்றார். அவர்கள் அவற்றை இன்ப நாட்டத்தில் ஈடுபடுத்தவோ, அல்லது அவருடைய சித்தத்திற்கும் கட்டளைக்கும் விரோதமாக விரயம் செய்து அழிப்பதற்கோ அன்றி, இவ்வுலகில் சத்தியத்தையும் பரிசுத்தத்தையும் பற்றிய அறிவை வளர்ப்பதற்குப் பயன்படுத்துமாறு அவற்றை அளித்தார். அவர் தொடர்ந்து பாராட்டுகிறதும் எல்லையற்றதுமான பட்சங்களுக்கும் இரக்கங்களுக்கும் பிரதியாகி, அவர்களுடைய நன்றியறிவையும் வணக்கத்தையும் அன்பையும் உரிமை பாராட்டுகின்றார். தம்முடைய பிரமாணங்களுக்கும் ஞானமுடைய சகல ஒழுங்குகளுக்கும் அவர்கள் நியாயமாகக் கீழ்ப் படிந்து சாத்தானின் தந்திரங்களினின்று அவர்களை விலக்குவது சமாதான வழிகளிலே நடத்துவதுமான கட்டுப்பாட்டை அவர்கள் அடைய விரும்புகின்றார்.CCh 560.1

    நம்முடைய பள்ளிகளில் ஏற்பட்டிருக்கும் பிரமாணங்கள் கட்டுப்பாடுகளை அனுஷ்டிக்கும் பொழுது சமுதாயத்திலே சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்வதாகிய கட்டளைகளையே கைக்கொள்ளுவதாக இளைஞர் அறிந்தால், நியாயமான விதிகளுக்கும் பிரயோஜனமுடைய கட்டளைகளுக்கும் எதிர்த்து நிற்கவோ, அன்றி இந்த ஸ்தாபனங்களுக்கு எதிராக சந்தேகத்தையும் துவேஷத்தையும் உருவாக்கவோ மாட்டார்கள். அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்படுபவற்றை அவர் கள் அளிக்கத்தக்கதாக நமது இளைஞர் ஊக்கமும் உண்மையுமுள்ள ஆவியை உடையவர்களாயிருக்க வேண்டும். இது அவர்களுடைய சித்திக்கு அடி கோலுவது உறுதி. உலகில் இந்த யுகத்தில் வாழும் இளைஞரின் காட்டுத்தனமும் நிலையற்றதுமான சுபாவம் நமது இருதயத்திலே வேதனையை உண்டு பண்ணுகின்றது. வீட்டிலே வாளாவிருக்கும் அவர்களுடைய பெற்றோரே இதற்குப் பெரும் பொறுப்புடையோர். தெய்வ பயம் இல்லாவிட்டால், ஒருவனும் மெய்யான சந்தோஷமுடையவனாகான். 4T 432-435.CCh 560.2