Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாவசியமானவைகளை அலட்சியஞ் செய்வது சிக்கனமல்ல

    நம் சரீரம் அலட்சியம் செய்யப்பட்டு அல்லது துர்ப்பிரயோகப் பண்ணப்பட்டு, அவருடைய சேவைக்குத் தகுதியில்லாமர்போவதினால் கடவுள் கனம்பண்ணப்படுவதில்லை. உடலுக்குப் பலமும் விரும்பப்படத்தக்க ஆகாரமும் கொடுப்பது வீட்டெஜமானுடைய கடமைகளில் பிரதமக் கடமையாகும்.CCh 433.1

    விருந்தினர்களை டம்பமாக உபசரிக்க வசதி செய்யும்படி சிலர் தங்கள் குடும்ப ஆகாரங்களில் உலோபத்தனம் செய்கிறார்கள். இது ஞானமல்ல, விருந்தாளிகளை உபசரிப்பதில் மிக சாமானியம் காணப்பட வேண்டும். குடும்பத் தேவைக்கு முதல் இடங் கொடுக்கப்பட வேண்டும்.CCh 433.2

    அவசியமும், ஆசீர்வாதமுள்ள உபசரிப்பை ஞானமற்ற சிக்கனமும், செயற்கையான பழக்க வழக்கங்களும் அடிக்கடி தடுக்கின்றன. எதிர்பாராமல் விருந்தினருக்கு வேறு ஆயத்தமின்றி உடனே பரிமாறும்படியான முறையில் ஆகாரம் தயார் செய்யப்பட்டிருக்க வேண்டும். M.H. 322.CCh 433.3

    சிக்கனம் என்பது உலோபத்தனமாகாது. ஆனால் வருமானத்தை விவேகமாய்ச் செலவிடுவதாகும்; ஏனெனில் செய்யப்பட வேண்டிய பெரிய வேலை அதிலிருக்கிறது.CCh 433.4

    தங்கள் ஆரோக்கியத்திற்கும், வசதிக்கும் அவசியமானவைகளை அனுபவியாமலிருக்க வேண்டுமென கடவுள் திட்டமிடவில்லை; ஆனால் வீணான பகட்டு டம்பங்களை அவர் அங்கீகரிப்பதில்லை. A.H. 378, 379.CCh 433.5