Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உத்தமருக்குப் பலன்

    என் சகோதரனே, சகோதரியே, வானத்தின் மேகங்களிலே வருகிறவராகிய கிறிஸ்துவின் வருகைக்கு நீங்கள் ஆயத்தப்படுமாறு உங்களை நான் ஏவி எழுப்புகிறேன். உங்கள் இருதயங்களிலிருந்து உலக சிநேகத்தை அனுதுனமும் அகற்றுங்கள். கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதின் கருத்து இன்ன தென்று அனுபவத்தின் மூலமாக அறிந்து கொள்ளுங்கள். விசுவாசிக்கிறவர்கள் அனைவரிடத்திலும் ஆச்சரியப்பட்த்தக்கவராக கிறிஸ்து வரும்போது, அவரைச் சமாதானத்துடனே சந்திக்கிறவர்களோடு நீங்களும் காணப்படத்தக்கதாக நியாயத்தீர்ப்புக்கென்று ஆயத்தமாகுங்கள். அந் நாளிலே மீட்கப்பட்டவர்கள் பிதாவின் மகிமையையும் குமாரனின் மகிமையையும் அடைந்து பிரகாசிப்பார்கள். தேவ தூதர்கள் பொற் சுரமண்டலங்களை வாசித்து அரசருக்கும் அவருடைய வெற்றி சின்னங்களாகிய ஆட்டுக் குட்டியானவரின் இரத்தத்திலே தங்கள் அங்கிகளை அடித்துத் தோய்த்து வெளுத்தவர்களுக்கும் நல்வரவு கூறுவார்கள். ஓர் ஜெயகீதம் முழங்கி, பரலோகம் முழுவதையும் நிரப்பும். கிறிஸ்து ஜெயமடைந்திருப்பார். தமது பாடும் பலிகளும் வீணாகிவிடவில்லை என்பதற்கு அத்தாட்சியாக தம்மால் மீட்கப்பட்டவர்களுடனே பரலோக பிராகாரங்களிலே அவர் பிரவேசிப்பார்.CCh 757.2

    நமது ஆண்டவருடைய உயிர்த்தெழுதலும் பரமேறுதலும் மரணம், பாதாளம் என்பவைகள் மேல் தேவனுடைய பரிசுத்தர் அடையப் போகும் வெற்றிக்கு அத்தாட்சியாகவும், குணமாகிய தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியான வருடைய இரத்தத்திலே அடித்துத் தோய்த்து வெளுக்கிறவர்களுக்குப் பரலோகத்தில் இடமுண்டு என்பத்ற்கு உறுதியடையாளமாகவும் இருக்கின்றது. மனித் ஜாதியின் பிரதி நிதியாக இயேசுவானவர் பிதாவிடம் சென்றார். அவருடைய சாயலை யார் பிரதிபலிக்கின்றனரோ அவர்கள் அவருடைய மிகிமையைப் பார்க்கும் படியாகவும், அந்த மகிமையிலே அவருடனே பங்கடையுமாறும் அவர்களையும் அவர் எழுப்பி தம்முடனே வைத்துக்கொள்வார்.CCh 758.1

    பூமியின் பரதேசிகளுக்கு அவ்விடத்தில் நீதியான வாசஸ்தலங்கள் இருக்கும். நீதிமான்கள் மகிமையின் கிரீடங்களையும், வெண்மையான அங்கிகளையும் ஜெய ஓலைகளையும் பெறுவார்கள். தெய்வ நடத்துதலின்படியே நமக்குச் தத்தளிப்பை உண்டுபண்ணின யாவையும் குறித்து அவ்வுலகிலே விளக்கம் அடைவோம். அறிந்து கொள்வதற்கு அரிதானவை அங்கு தெளிவிக்கப்படும். கிருபையின் மறைபொருட்கள் பிரத்தியட்சமாகும். குறைந்த அறிவுடைய நமது மனதால் குழப்பமும் வாக்குத்தTHTHthத்தthaங்கள் தவறியதாகவும் நாம் கண்டறிந்தது அவ்வாறல்லவென்றும், மிகுந்த பூரணமும் அழகிய இசைவுமுடைய தெய்வ சித்தத்தின் வெளிப்பாடே அது வென்றும் காண்போம். மட்டற்ற தெய்வன்பே மிகுந்த கஷ்டமாக நமக்குத் தோன்றின அனுபவங்களை கட்டளையிட்டதாக நாம் அறிந்துகொள்வோம். சகலமும் நனமைக்கேதுவாக நடந்தேறும்படியாகச் செய்கின்ற அவருடைய உருக்கமுள்ள சிந்தையை நாம் விளங்கிக் கொள்ளும் போது சொல்லிமுடியாத ஆனந்தத்தையும் நிறைவான மகிமையையும் பெற்றுக் களி கூருவோம். CCh 758.2

    பரலோகத்தில் வேதனை இராது. மீட்கப்பட்டோரின் வாசஸ்தலங்களில் கண்ணீரும் பிரேத ஊர்வலங்களும் துக்கத்தின் அடையாளங்களும் தோற்றமளிப்பதில்லை. “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை, அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.” ஏசாயா 33:24. பெருகியோடும் ஆனந்தப் பெருக்கு நித்திய காலத்தின் போக்கில் அதிக ஆழமுடையதாகும். CCh 759.1

    நித்திய ஜீவனைப்பற்றிய நமது நம்பிக்கைகளுக்கு நடு நாயகமாகவிருக்கும் அவரை நாம் விரைவில் காண்போம். இந்த வாழ்வில் நாம் அடைந்த சோதனைகளும் துன்பங்களும் அவருடைய சமுகத்திலே ஒன்றுமில்லாமற் போகும். “ஆகையால் மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டு விடாதிருங்கள். நீக்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்கு பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” எபிரேயர் 10:35-37. வருகிறவர் இன்னும் கொஞ்சக் காலத்திலே வருவார். தாமதம் பண்ணார். மேல் நோக்கிப்பாருங்கள். மேல் நோக்கிப்பாருங்கள். உங்கள் விசுவாசம் எப்பொழுதும் பெருகுவதாக. அந்த விசுவாசம் உங்களைத் தேவனுடைய நகரத்தின் வாசல்கள் வழியாக மீட்கப்பட்டோர் வாசம் பண்ணப்போகிற மிகுந்த விஸ்தாரமும் அளவற்றதுமான மகிமைக்குள்ளே வழிகாட்டி நடத்துவதாக. “இப்படியிருக்க சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ பயிரிடுகிறவன் நற்பலனை அடைய வேண்டு மென்று முன்மாரியும் பின்மாரியும் வருமளவும் நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமை யோடிருந்து உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள். “கர்த்தரின் வருகை சமீபமாய் இருக்கிறதே.” யாக்கோபு 5:7,8. 9T 285-288.CCh 759.2

    “நாம் எவ்விதமாய் இருப்போம் என்று இன்னமும் வெளிப்படவில்லை. ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிற வண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால் அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.” 1 யோவான் 3:2.CCh 760.1

    அப்பொழுது கிறிஸ்துவானவர் தம்முடைய ஊழியத்தின் பலனால் நிறைவை அடைவார். “ஒருவரும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள் தமது மகிமையுள்ள சந்திதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே மாசற்றவர்களாய்” நிற்க, யாருடைய இரத்தத்தினாலே நாம் மீட்பை அடைந்து, (யூதா 24.) யாருடைய வாழ்கையிலிருந்து நாம் போதனை பெற்றோமோ “அவர் தமது ஆத்துமவருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்.” ஏசாயா 53:11. Ed 309.CCh 760.2