Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மெய்த் தீர்க்கதரிசியை பரிசோதிக்கும் முறைகள்

    முற்கூறிய வேதாகம பரிசோதனைகள் நான்கு தவிர தீர்க்கதரிசியின் ஊழியத்தில் தெய்வ நடத்துதல் காண்பதற்குரிய வேறு அத்தாட்சிகளும் உண்டு.CCh 61.3

    1. காலத்திற்கு ஏற்ற தூது: கடவுள் தம் மக்களுக்கு அவசியத்துக்குத் தக்க தூதை அப்போதுக்கப்போது அனுப்பு கிறார். அம்மையாருக்கு அருளப்பட்ட முதல் தரிசனம் இதற்கோர் அத்தாட்சி.CCh 61.4

    2. வாழ்க்கை அனுபவத்திற்கு பொருத்தமான தூதுகள்: அம்மையாருக்கு அருளப்பட்ட தூது வாழ்க்கை அனுபவத்திற்குப் பொருத்தமாயிருந்தது. கிடைத்த செய்திகள் வாழ்க்கை தேவையைப் பூர்த்தி செய்கின்றன. அன்றட வாழ்க்கைக்கு ஏற்ற முறையில் அமைந்தவை.CCh 62.1

    3. தூதுகளின் ஆவிக்குரிய உன்னத நிலை. தூதுகள் சிறு பிள்ளைத்தனம் உள்ளவை அல்ல. உயர்ந்த கருத்துக்கள் அடங்கியவை. பாஸை நடையும் மாட்சியுடையது.CCh 62.2

    4. தரிசனம் அளிக்கப்பெற்ற வகை: பெரும்பாலும் தரிசனங்களில் தீர்க்கதரிசியின் சரீர நிலை காணப்படும் வகைப்பற்றி ஆரம்பத்தில் முகவுரையில் கூறியுள்ளோம். வேதாகம தீர்க்கதரிசிகள் அடைந்த அந்த அனுபவத்தையே அம்மையார் அடைந்தார். இது பரிசோதனை ஆகாவிடினும், மற்ற அத்தாட்சிகளைப் போன்ற ஓர் அத்தாட்சியாகும்.CCh 62.3

    5. தரிசனங்கள் மனதில் உண்டான சிந்தனையல்ல்: திட்ப நுட்பமான அனுபவம். அம்மையார் தரிசனத்தில் கண்டும், கேட்டும், உணர்ந்தும் தேவ தூதரால் போதனை பெற்றார். தரிசனங்கள் உள்ளக் கிளர்ச்சியினாலும் மனத் தோற்றத்தினாலும் உண்டானவை அல்ல.CCh 62.4

    6. அம்மையார் பிறர் செல்வாக்கால் பாதிக்கப்படவில்லை: ஒருவருக்கு அவர் பின்வருமாறு எழுதியிருக்கிறார்:----------சிலர் என் மனதில் துவேஸங்களை உண்டாக்கி விட்டனர் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். நான் அப்படி துவேஸம் உடைய வளாயிருந்தால், கடவுளின் ஊழியத்திற்குரிய உத்தரவாதத்தைப்பெற பாத்திரமாக முடியாது.CCh 62.5

    7. அம்மையாரின் ஊழியத்தை அவர் காலத்தில் இருந்தவர்கள் அங்கீகரித்தனர். அக்காலத்தில் அவரோடு வாழ்ந்திருந்து உழைத்த பல பெரியோர்கள்------சபைக்கு உள் ளும் புறம்ப்ம் உள்ளவர்கள் - அவரைக் கர்த்தருடைய ஊழியக்காரி என்றே அழைத்தார்கள். அவரோடு நெருங்கிப் பழகினவர்கள் அவருடைய அழைப்பையும், ஊழியத்தையும் குறித்து அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்கள்.CCh 62.6

    இந்த நான்கு வேதாகம பரிசோதனைகளும், இதர தெளிவான அத்தாட்சிகளும் தமது ஜனங்கள் அதின் மேலும் தமது ஊழியக்காரி மேலும் நம்பிக்கை வைக்கத்தக்கதாக ஊழியம் தெய்வச் செயலால் நடைபெறுகிறதென்ற சந்தேகமற்ற நிச்சயத்தை அளிக்கின்றது.CCh 63.1

    அம்மையார் இயற்றிய நூல்கள் பெரும்பாலும், சபைகளுக்கு நிரந்தரமான நன்மை பயக்கும் ஆலோசனைகளும் போதனைகளும் நிறைந்தவை. அவருடைய சாட்சியங்கள் பொதுத் தன்மை உடையவைகளும் தனிக் குடும்பத்திற்கும் தனி ஆளுக்கும் உரியவகளுமாய், எவ்வகைப் பட்டதாயிருந்தாலும், அவை இன்று நமக்கு பெரும்பயன் அளிக்கக்கூடியவைகளாய் இருக்கின்றன. அவற்றைக் குறித்து அம்மையார் தாமே சொல்வது:-CCh 63.2

    “எச்சரிப்புகளும், போதனைகளும், குறிப்பிட்ட சில தனி மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், அவை அவர்களுக்கு மட்டுமே அல்ல, பிறருக்கும் பயன்படக்கூடியவைகளே. ஆதலால் சபையின் நன்மைக்காகத் தனி மக்களுக்கு அளித்த சாட்சிகளையும் வெளியிடுவது என் கடமை ஆகும் ... பொதுவாக நேரிடக்கூடிய அபாயங்களையும், பிழைகளையும் கடவுளை நேசிக்கிறவர்களும் அவர் வாக்கைக் கைக்கொள்ளுகிறவர்களும் ஆகிய மக்களின் கடமைகளையும் குறித்துள்ள என் நோக்கத்தை வெளியிடுகிறதற்காக இந்த சாட்சிகளை பிரசுரிப்பதே சிறந்த வழி என எண்ணுகிறேன்.”CCh 63.3

    ஒரு சகோதரைக் குற்றப்படுத்துவதற்கு மேற்கொள்கள் கண்டுபிடிக்கும் நோக்கத்தோடு சாட்சியாகமங்களை வாசிப்பது தவறு. நாம் நினைக்கிறதுபோல பிறரும் நினனக்கச் செய்வதற்கு, இச்சாட்சியங்களை சவுக்காக உபயோகிக்கக் கூடாது. தனி ஆட்கள் நேர்முகமாய்க் கடவுளிடம் ஒழுங்கு படுத்திகொள்ளவேண்டிய காரியங்கள் உண்டு. அவைகளை அவர்கள் பொறுப்பில் விட்டுவிட வேண்டும்.CCh 63.4

    நமது இன்றைய வாழ்க்கைக்கு அவசியமான அடிப்படைக்கொள்கைகள் எவை என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும் என்னும் விருப்பதோடு, இந்நூலின் போதனைகளப் படிக்க வேண்டும். சில தூதுரைகள் குறிப்பிட்ட இடத்திற்கு அல்லது காலத்திற்கு ஏற்றவாறு, எச்சரிப்பாகவோ கண்டனமாகவோ கூறப்பெற்றவை, எனினும் அவற்றின் கொள்கை பொது நோக்குடையது, அது எந்த நாட்டிற்கும் பொருந்தும். இன்ன காலத்திற்குத்தான் உரியது என்று சொல்லமுடியாது. உலகம் எங்கும் எக்காலத்தும் உள்ள மக்கள் இருதயம் ஏறக்குறைய ஒன்று போலவே இருக்கிறது. ஒருவருக்கு இருக்கும் பிரச்சினையே சாதாரணமாக - இன்னொருவருக்கும் இருந்துவருகிறது. ஒருவருடைய பிழையைக் கண்டுபிடிப்பது மூலம் கடவுள் அநேகரைச் சீர்திருத்த முயலுகிறார் என அம்மையார் சொல்லுகிறார். ஒருவர் செய்யும் பிழையைத் தெளிவாக எடுத்துக் காட்டி பிறரை எச்சரிக்கிறார்.CCh 64.1

    அம்மையாரின் கடைசிக் காலத்தில் அவர் தந்தருளிய ஆலோசனை இது:-CCh 64.2

    “கடவுள் பரிசுத்த ஆவியைக் கொண்டு தொடர்ந்து நம்மை எச்சரித்ததும், போதித்தும் வருகிறார்... கால்மோ சோதனையோ அவருடைய போதனைகளைப் பயனற்றவை ஆக்கிவிடவில்லை... இந்தக் கடைசி நாட்களில் நாம் பின்பற்றுவதற்கு அவசியமான தூதுரைகளை அவர் ஆரம்பத்திலேயே தந்தருளியிருக்கிறார். நாம் அவைகளைப் பத்திரமாகப் பேணி அவைகளின் படி நடக்கவேண்டும்.”CCh 64.3

    இந்நூலின் அறிவுரைகளும் பிறவுரைகளும், போதனைகளும் அம்மையார் எழுதிய பல நூல்களிலிருந்து திரட்டி எடுத்துத் தொகுக்கப்பட்டிருப்பினும், அவை பெரும்பாலும் சாட்சியாகமங்களில் (Testimony Treasures) உள்ளவை.CCh 64.4

    சபை உறுப்பினர் தொகை குறைந்துள்ள பகுதிகளில், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகள் வெளியிடுவது மிகவும் அரிய செயல். ஆகையால் முக்கியமான கருத்துக்களை தொகுத்து, சபையின் நன்மைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும், இந்த நூலை இப்பொழுது வெளியிடுகிறோம். இந்நூலின் அறிவுரை முதலியவைகளைத் தெரிந்தெடுத்துத் தொகுத்து ஒழுங்குப்படுத்துவதற்குச் சில உறுப்பினரடங்கிய ஒருகுழு நியமிக்கப்பெற்றது. அக்குழுவினர் எலன் ஜி.உவைட் அம்மையார் வெளியீடுகளின் பொறுப்பாளர் குழுவின் அதிகாரம் பெற்றுள்ளார். அக்குழு தீர்க்கதரிசன ஆவியின் நூல்களைப் பாதுகாக்கவும், தேவையானபொழுது அவைகளை வெளியிடவும், பொறுப்பு உடையது. இந்நூலில் அடங்கியவைகள் சுருக்கமானவை எனினும், அனுபவ அடிப்படைக் கொள்கைகளுக்கு ஏற்ற பற்பல அரிய பொருட்கள் அடங்கு உள்ளன.CCh 65.1

    “உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதிரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள்.” 2 நாளா. 20:20.CCh 65.2

    இங்ஙனம்CCh 65.3

    வாஷிங்கடன் டி.சி. எலன் ஜி. உவைட்CCh 65.4

    ஜூலை 22, 1957 அம்மையார் வெளியீடுகளின்CCh 65.5

    பொறுப்பாளார்.CCh 65.6

    இப்பக்கங்களை எழுதியவருக்குக் கடவுள் நீண்ட காலமாக நன்மைக்கும், தீமைக்கும் நடக்கும் போரைப்பற்றி பரிசுத்த ஆவியினால் வெளிப்படுத்தியிருக்கின்றார். நமது இரட்சிப்பின் காரணரும் ஜீவாத்பதியுமாகிய கிறிஸ்துவுக்கும், பாவத்திற்கு காரணனும் கடவுளின் பரிசுத்த கற்பனையை முதன்முதலாக மீறினவனும் தீவினைகளுக்கு அதிபதியுமாகிய சாத்தானுக்கும் இடையே நடக்கும் மாபெரும் போராட்டத்தைப் பற்றி இடைக்கிரையே அம்மையாருக்கு காட்சிகள் அளிக்கப்பட்டன.CCh 65.7

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents