Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வீட்டுத் தலைவன் கிறிஸ்துவைப்போலிருக்க விரும்புதல்

    குடும்பத்திலுள்ள யாவருக்கும் நடு நாயகம் தந்தை. அவனே சட்டம் பிறப்பிப்போன். ஊக்கம், நேர்மை , உண்மை, பொறுமை, தைரியம், சுறுசுறுப்பு, உபயோகமான வாழ்க்கை நட்த்துதல் ஆகிய பெரும் நற் பண்புகளுக்கு அவன் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஒரு வகையில் காலை மாலை பலி செலுத்தும் குடும்ப ஆசாரியனாக இருக்கிறான். மனைவியும் மக்களும் இந்தக் குடும்ப பீட ஆராதனையில் பங்கெடுத்து துதி கீதங்களை ஏறெடுக்க ஊக்கப்படுத்தப்பட வேண்டும் . குடும்ப ஆசாரியனாக தந்தை காலை மாலை தன் குடும்பத்தில் அன்று செய்யப்பட்டிருக்கும் பாவத்தை தனக்காகவும் பிள்ளைகளுக்காகவும் தேவனிடம் அறிக்கை செய்ய வேண்டும். தன் அறிவுக்கு எட்டிய பாவங்களையும், கடவுள் கண்கள மட்டுமே கண்ட இரகசியப் பாவங்களையும் அறிக்கையிட வேண்டும். வீட்டிலிருக்கையில் தந்தையும், இராவிடில் தாயும் இம்முறையை தவறாமல் மேற்கொண்டு நடந்தால் குடும்பத்திற்கு ஆசீர்வாதம் பெருகும்.CCh 414.4

    தந்தையும் புருஷனுமாயிருக்கிற ஒருவனுக்கு நான் சொல்லுகிறதாவது : பரிசுத்த உன்னத நிலை உன் ஆத்துமாவை சூழ்ந்திருக்கட்டும். கிறிஸ்துவை தினமும் கற்று நட. ஒருபோதும் வீட்டில் கொடுமையான ஆவியோடு நடக்காதே. இப்படி நடப்பவன் சாத்தானுடைய ஏவலாளாக அவனுடன் ஒத்துழைக்கிறான். உன் சித்தத்தை கடவுள் சித்தத்திற்கு ஒப்புவி உன் மனைவியின் வாழ்க்கை இனிமையும் இன்பமுமாயிருக்க உன்னால் கூடுமான யாவும் செய். தேவ வசனத்தை உன் ஆலோசனைக்காரனுக்கு. தேவ வசனத்தை உன் வீட்டு ஜீவியத்தில் அப்பியாசி, அப்பொழுது நீ சபையிலும் உன் தொழிற்சாலையிலும் அவ்வித நல் வாழ்க்கை நடத்துவாய். பரலோக லட்சியங்கள் உன் எல்லா நடவடிக்கைகளிலும் காணப்படும். உலகத்துக்கு கிறிஸ்துவை வெளிப்படுத்த தூதர்கள் உனக்கு ஒத்தாசையாக இருப்பார்கள்.CCh 415.1

    உன் தொழிலிலுள்ள்ச் எரிச்சல்கள் குடும்ப ஜீவியத்திற்குள் நுழைய விடாதே. சம்பவிக்கும் ஒரு சிறிய காரியத்தால் பொறுமை, பட்சம், நீடிய சாந்தம், அன்பு ஆகிய சற்குணங்களை கையாட்த் தவறினால், தம்முடன் நீ ஒன்றாயிருக்க தம் ஜீவன் தந்தவரை நீ உன் நண்பராக தெரிந்துகொள்ளவில்லை என்று காட்டுகிறாய்.CCh 415.2

    குடும்பத் தலைவன் தான் என அடிக்கடி சொல்லுகிறது ஒரு புருஷ இலட்சணத்தின் அத்தாட்சியாகாது. தன் அதிகாரத்தை நிலை நாட்ட அடிக்கடி வேத வசனத்தை எடுத்து கூறுவதனால் ஒருவருக்கு மதிப்பு அதிகரிக்காது. தன் பிள்ளைகளுக்கு தாயும் தனக்கு மனைவியுமானவளை தான் தவறாதவன் போல் தன் திட்டப்படி அவள் நடக்க வேண்டுமென்று கட்டளை போடுவது புருஷ தத்துவமல்ல. மனைவிக்கு பாது காவலனாக விளங்கும்படி புருஷனை மனைவிக்குத் தலையாக கடவுள் ஏற்படுத்தினார்; சபையாகிய அதிசய உடலுக்கு கிறிஸ்து தலைவராகவிருந்து அதை அவர் காப்பது போல குடும்பத்தைக் கட்டுப்படுத்தி நடத்துவது புருஷன் கடமையாகும். கடவுளை நேசிக்கிறேன் என்று சொல்லும் ஒவ்வொரு புருஷனும் தன் நிலையில் எதைக் கடவுள் எதிர் நோக்கிறாரென ஆராய்வானாக. கிறிஸ்துவின் அதிகாரம் ஞானத்தோடும், சகல பட்சதாபத்தோடும் மென்மையோடும் செலுத்தப்படுகிறது; எனவே புருஷனும் சபையின் பெரிய தலைவர் போல் தன் அதிகாரத்தைப் பிரயோகிக்கட்டும். A.H. 212-215.CCh 415.3