Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்தவ கல்வியின் பலன்

    தேவாலயத்தின் பிரகாரங்களில் சிறு பிள்ளைகள் ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத் திரிக்கப்பட்டவர் (மாற் 11:9) என்று பாடிய பிரகாரமே, இந்தக் கடைசி நாட்களிலும் அழிந்து போகும் உலகத்திற்குக் கடைசி எச்சரிப்பின் தூதைக் கொடுப்பதற்குப் பிள்ளைகளின் குரல் உயர்த்தப்பட வேண்டும். சத்தியத்தை அறிவிப்பதற்கு மனிதரால் கூடாதென்று பரலோக சக்திகள் காணும்பொழுது, தெய்வ ஆவியானவர் பிள்ளைகளின் மேல் அமருவார். சத்தியதை வயது வந்தவர்கள் அறிவிக்கக் கூடாத படி அவர்களுடைய பாதை அடைக்கப்படும் பொழுது, இவர்கள் சத்தியத்தைக் கூறி அறிவிப்பார்கள்.CCh 555.2

    இந்தப் பெரிய வேலைக்குப் பிள்ளைகளை ஆயத்தம் செய்வதற்கென்றே நம்முடைய சபைப் பள்ளிகள் தெய்வத்தால் அமைக்கப் பெற்றுள்ளன. இக் காலத்திற்குரிய விசேஷித்த சத்தியங்களிலே இந்த பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகள் போதனை பெற்று, மிஷனெரி ஊழியத்தை நடைமுறையில் எப்படிச்செய்ய வேண்டுமென்பதைக் கற்கவேண்டும். வியாதியும், துன்பமும் அடைந்தவர்களுக்கு உதவுகின்ற ஊழியர் படையிலே இவர்களும் பெயர் பதியப் பெறுவார்கள். வைத்திய மிஷனெரி ஊழியத்திலும் குழந்தைகள் பங்கு பெற்று தாங்கள் நிறைவேற்றும் சிறியதும் கடுகத்தனையுமான ஊழியத்தால் அவ்வேலை முன்னேறும்படி செய்யலாம். அவர்கள் செய்வது சொற்பமாக இருக்கலாம். ஆயினும் சொற்பமான அவ்வுதவிகளாலும், அவர்களுடைய முயற்சியினாலும் அனேக ஆத்துமாக்கள் சத்தியத்திற்கென்று ஆதாயப்படுத்தப்படுவார்கள். அவர்கள் மூலமாக கடவுளின் தூது அறிவிக்கப்பட்டு, அவர்களிடத்தில் இரட்சிக்கும் ஆவி உண்டென்று யாவரும் அறிவர், எனவே சபையானது மந்தையின் ஆட்டுக்குட்டிகளுக்காக்ப் பாரமுடையதாக இருக்க வேண்டும். குழந்தைகள் தேவனுடைய ஊழியத்தைச் செய்வதற்கு அறியும் பயிற்சியும் அடையட்டும். ஏனெனில் அவர்கள் கர்த்தருடைய சுதந்தரமானவர்கள். நல்ல முறையில் சபைப் பள்ளிக்கூடங்களை நடத்தும் பொழுது, அவை நிலைவரம் ஆகிவிட்ட இடங்களிலே சத்திய கொடியை உயரப் பறக்க விடுவதற்கு துணையாகின்றன. ஏனெனில் கிறிஸ்தவ கல்வியை பெறுகின்ற பிள்ளைகள் கிறிஸ்துவானவருக்காகச் சாட்சிகளாக இருப்பார்கள். தேவாலயத்திலே அதிகாரிகளும் பிரதான ஆசாரியர்களும் அறிந்துகொள்ளாத தெய்வ இரகசியங்களைக் கிறிஸ்துவானவர் வெளிப்படுத்தினது போல், இந்தப் பூமியில் வேலை முடிவடையும் பொழுது, சரியான அறிவுப் பயிற்சி அடைந்த சிறுவர் எளிமையாகப் பேசும் வார்த்தைகள் உயர்கல்வி யைக் குறித்து இப்பொழுது பேசும் மனிதருக்கு வியப்பைத் தரும். 6T 202, 203.CCh 556.1

    நம்முடைய கல்லூரி, ஆத்துமாக்களை இரட்சிக்கும் பெரிய வேலைக்காக தெய்வத்தினால் அமைக்கப்பட்டது என்று எனக்குக் காட்டப்பெற்றது. தெய்வ ஆவியினால் முழுவதுமாக ஆண்டு நடத்தப்படும் பொழுது மாத்திரமே ஒரு தனி நபரின் தாலந்துகள் பிரயோஜனமடைந்து, அவைகளின் முழு உபயோகமும் வெளிப்படும். மார்க்க இலட்சியங்கள், போதனைகளை அறிவதே அறிவுத் தேடுவதற்கு முதல் படிகளாகும். மெய்க் கல்வியின் அஸ்திபாரம் இதுவே. உன்னதமான நோக்கங்களுக்குப் பயன்படுவதற்கு அறிவும் விஞ்ஞானமும் தெய்வ ஆவியினாலே பலமடைய வேண்டும். அறிவை சரியாகப் பயன்படுத்துவதற்கு கிறிஸ்தவனால் மாத்திரமே கூடும். விஞ்ஞானத்தை நாம் முற்றறுமாக அறிந்து, அதைப் பாராட்டுவதற்கு ஆவிக்குரிய கண்ணேக்குடனே நாம் அதைக் கற்க வேண்டும். தெய்வ கிருபையினாலே மேன்மையடையும் இருதயம் கல்வியின் மதிப்பை மிகவும் நன்றாக அறிந்து கொள்ளக் கூடும். தெய்வ படைப்பில் காணப்படுகின்ற தெய்வீக லட்சணங்களை நாம் பாராட்டக் கூடியவர்களாவதற்கு சிருஷ்டிகரைப் பற்றிய அறிவு நமக்கு இருக்க வேண்டும். சத்தியத்தின் ஊற்றாக விருப்பவரிடத்தில், உலாத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டியாயிருப்பவரிடத்தில் இளவயதினறைக் கொண்டுவருவதற்கு ஆசிரியர்கள் சத்தியக் கொள்கையை மட்டும் அறிந்திருந்தால் போதாது. அத்துடனே பரிசுத்த பாதையை ஒட்டிய அனுபவ ஞானம் அவர்களுக்கு இருக்க வேண்டும். மெய்யான தேவதாபக்தியுடனே அறிவு ஒன்று சேரும் பொழுது அது வல்லமையுடையதாயிருக்கிறது. 4T 427.CCh 557.1