Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிளர்ச்சியூட்டும் மார்க்கத்திற் கெதிரான எச்சரிக்கைகள்.

    தற்சமயம் தேவனுடைய வேலைக்குச் சத்தியத்தை தெளிவாக அறிந்தவர்களும், கொள்கைகளில் உறுதியானவர்களும், ஆவிக்குரிய மனதை உடையவர்களும் தேவை.CCh 687.3

    ஜனங்களுக்கு அவசியமான போதனைகள் புதியனவாகவும் அலங்காரமாகவும் இருக்க அவசியமில்லையென போதிக்கப்பட்டேன், மானிட அபிப்பிராயங்கள் அவர்களுக்கு அவசியமில்லை. சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசாங்கம் பண்ணு. எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடு கண்டனம் பண்ணி. கடிந்துகொண்டு, புத்தி சொல்லு. ஏனெனில் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைக்கேற்ற போதகர்களை தங்களுக்குத் திரளாய்ச் சேர்த்துக்கொண்டு சத்தியத்திற்கு செவியை விலக்கி, கட்டுக் கதைக்கு சாய்ந்து போகும் காலம் வரும்.” ( II தீமோத் 4: 2-4) என்று தீமோத்தேயுவுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையை விளங்கிக் கொண்டவர்களும், சத்தியத்தை அறிந்து அதன்படி செய்கிறவர்களும் கொடுக்கும் சாட்சிகள் தான் அவர்களுக்கு அவசியம். சமாதானத்தின் சுவிசேஷ ஆயத்தமென்னும் பாத ரட்சைகளை அணிந்தவர்களாக தீர்மானத்துடன் திடமாக ஜீவியுஙகள். சுத்தமான கறைப்படாத மார்க்கம் என்பது கிளர்ச்சி உண்டாக்கும் மார்க்கம் அல்ல என்பதை நீங்கள் நிச்சயமாக அறிந்துகொள்ளலாம். யூகமாக பிணைக்கப்படும் போதனைகள், கோட்பாடுகளின் பேரில் நாட்டம் கொள்ளச்செய்ய வேண்டும் என்ற பாரத்தை தேவன் ஒருவரின் பேரிலும் சுமத்தவில்லை. என் சகோதரரே, இவைகளை உங்கள் உபதேசங்களிலிருந்து நீக்கி விடுங்கள். உங்கள் அனுபவங்களில் அவை உட் பிரவேசிக்க இடம் கொடாதேயுங்கள். இவைகளினால் உங்கள் ஊழியம் கறைப்படவேண்டாம். 8T 294, 295.CCh 688.1