Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தராசிலே நிறுக்கப்படுதல்

    தெய்வம் நமது குணத்தையும், நடத்தையையும், நமது நோக்கங்களையும் பரிசுத்த ஸ்தலத்தின் தராசுகளில் நிறுத்தப் பார்க்கிறார். நம்முடைய இருயங்களை தம் மண்டையில் சேர்க்குமாறு நமக்காகச் சிலுவையில் அறையுண்ட நமது மீட்பரின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளினால் நமது அன்பிலும், கீழ்ப்படிதலிலும் நாம் குறைவுள்ளவர்கள் என்று தீர்க்கபப்டும் பொழுது, அத்தீர்ப்பு மிகவும் பயங்கரமாயிருக் கும். பெரியது, அருமையானதுமான ஈவுகளைத் தேவன் நமக்கு அருளியிருக்கிறார். நாம் தவறு புரியாமலும், இருளில் நடவாமலும் இருக்குமாறு நமக்கு வெளிச்சத்தையும், அவருடைய சித்தத்தைப்பற்றிய அறிவையும் நல்கினார். முடிவான தீர்ப்பும் பலனும் கூறப்படும் அந்நாளிலே தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாகக் காணப்படுதல் பயங்கரமானது. திருத்தப்பட முடியாத பெரும் பிசகு செய்து விட்டதாக உனருவோம். வாலிப நண்பர்களே, தெய்வத்தின் புஸ்தகத்தில் உங்கள் பேர் இல்லாதே போகுமோ? அதைத் தேடி வீணே அலுக்க வேண்டியதாகுமோ?CCh 500.2

    தமக்கெண்று செய்வதற்கு ஒரு வேலையைத் தெய்வம் உங்களுக்கு நியமித்துள்ளார். அதின் மூலம் நீங்கள் அவருடைய உடன் ஊழியராகின்றீர்கள். இரட்சிக்கப்பட வேண்டிய ஆத்துமாக்கள் உங்களை சூழ இருக்கின்றார்கள். நீங்கள் ஊக்கமளிப்பதினாலும், மெய்யாக முயற்சிப்பதினாலும் அவர் ஆசீர்வாதம் அடையச் செய்வது கூடும். பாவத்திலிருந்து ஆத்துமாக்களை நீதிக்கு உட்படுத்துவதர்கு உங்களால் ஆகும். கடவுளுக்குக் கணக்கு கொடுக்க வேண்டுமென்ற உணர்வு உங்களுக்கு இருக்கும் பொழுது உண்மையுடனே ஜெபிப்பதும், சாத்தானின் சோதனைகளை விழிப்புணர்வுடனே எதிர்த்து உண்மையாக இருப்பதும் அவசியமென்று தோன்றும். உள்ளபடியே நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், அசட்டையாக நடந்து, ஆடம்பர உடை தரிப்பதை விட, உலகைச் சூழ்ந்திருக்கும் ஒழுக்கச் சீர்கேடாகிய அந்த காரத்தினிமித்தம் துக்கித்துப் புலம்பத் தோன்றும். மாயையிலும் ஆடம்பர அலங்கார மோகத்திலும் உங்களுக்கு ஈடுபாட்டை உண்டுபண்ணி, சோதனைகளை சாத்தான் கொண்டு வரும்பொழுது, அவற்றை எதிர்ப்பீர்கள். தேசத்திலே செய்யப்படுகிற அருவருப்புகளினிமித்தம் துக்கித்து அழுகிறவர்களுடனே நீங்களும் இருப்பீர்கள். அற்ப மதிப்புடையவற்றில் மனதை ஈடுபடுத்தி, பெரும் பொறுப்புகளை உதறித்தள்ளும் பொழுது மனம் குறுகி, புத்தி கட்டையாகிவிடுகின்றது.CCh 501.1

    நமது இளவயதினர் விரும்புனால், அவர்கள் கிறிஸ்துவின் உடன் ஊழியராகலாம். அவ்வாறு உழைக்கும் பொழுது, அவர்கள் விசுவாசம் பலமடைந்து தெய்வ சித்தத்தைப் பற்றிய அவர்களுடைய அறிவு, பெருகும். ஒவ்வொரு உண்மையான நோக்கமும் நீதியுள்ள கிரியையும் ஜீவ புஸ்தகத்தில் பதிவு செய்யப்படும். தங்கள் சுய திருப்திக்கென்று வாழ்ந்து, புத்தியைக் குறுக்கிக்கொண்டு, வீணான அற்ப மதிப்புடைய இவ்வுலக காரியங்களை நாடுவதைப் பாவமென்று இளைஞருக்குக் காட்டி அவர்களை எழுப்புதலடையச் செய்ய நான் ஆசிக்கின்றேன். அவர்கள் தங்கள் நினைவுகளையும் வார்த்தைகளையும் அற்பமான இவ்வுலக கவர்ச்சிக்கு மேலானவைகளில் வைத்து, கடவுளை மகிமைப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டால் எல்லாப் புத்திக்கும் மேலான அவருடைய சமாதானம் அவர்களுடையதாகும். 3T 370, 371.CCh 502.1

    இளவயதினர் வாஞ்சையுடைய மனதுடனே அவருடைய மேன்மையான ஊழியத்தில் செயல் புரியவும், பொறுப்புடையவர்களாக நடந்துகொள்ளவும், ஆயுத்தப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர். இருதயங்களில் கறைப்படாதவர்களும், பலவான்களும், தைரியமான நெஞ்சம் உடையவர்களுமாகத் தங்களுக்கு முன் இருக்கும் போராட்டத்திலே தைரியமாய்ப் போராடி, தேவனை மகிமைப்படுத்தி, மனிதவர்க்கத்தை ஆசீர்வதிக்குமாறு இளைஞரைத் தேவன் அழைக்கின்றார். வேதாகமத்தைக் கற்பதை இளவயதினர் விரும்பித் தங்களுடைய பலத்த ஆசைகளை அமரச் செய்து, தங்களுடைய சிருஷ்டிகரும், இரட்சகருமாகியவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், தேவனுடனே ஒப்புரவாகி மேன்மையையும் உணர்வையும் அடைவார்கள்.CCh 502.2

    நீங்கள் போகும் இடமெல்லாம் வெளிச்சத்தை பரவச் செய்யுங்கல். உங்களுடைய நோக்கம் உறுதியுடையதென் றும், பொல்லாத நண்பர்கள் உங்களைத் தங்களுக்கு இணங்க வைக்க முடியாதென்றும் காட்டுங்கள். தேவனைக் கனவீனம் பண்ணுகிறவர்கள் பேசுகிறதற்குச் சம்மதம் தெரிவிக்காதீர்கள். பொல்லாங்கிலிருந்து ஆத்துமாக்களைக் காக்கவும், திரும்பக் கொண்டு வந்து சேர்க்கவும் திருத்தவும் வகை தேடுங்கள்.CCh 502.3

    பிரார்த்தனையில் தரித்திருந்து, எதிர்க்கிறவர்களை சாந்தத்துடனும், தாழ்மையுடைய ஆவியோடும் இணங்கச் செய்யுங்கள். தவறுதலினின்று காக்கப்பட்டு, கிறிஸ்துவின் கொடியின் கீழ்சந்த ஒரு ஆத்துமாவினிமித்தம் பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகி, உங்களுடைய மகிழ்ச்சியின் கிரீடத்திலோ நட்சத்திரம் பதியப் பெறும். இரட்சிக்கப்பட்ட ஒரு ஆத்துமா தன்னுடைய தேவபக்தியினால் பிற ஆத்துமாக்கள் இரட்சிப்பின் அறிவை அடையுமாறு செய்யும். இவ்வாறு இரட்சிப்பின் ஊழியம் பெருகி, நியாயத்தீர்ப்பின் நாளின் வெளிப்படுத்தல்களே அத்தகைய ஊழியத்தின் பெருக்கத்தை வெளிப்படுத்தும்.CCh 503.1

    நீங்கள் செய்யக்கூடியது குறைந்த அளவான ஊழியமே என்ற நினைவினால் ஊழியஞ் செய்வதர்கு தயக்கம் கொள்ளாதீர்கள். உண்மையுடனே நீங்கள் செய்யத்தக்கதை நிறைவேற்றுங்கள். ஏனெனில் உங்கள் முயற்சியுடனே கடவுளும் முயற்சிப்பார். எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்க பாத்திரமானவர் என்று குறிப்பிட்டு, உங்கள் பெயரை ஜீவ புத்தகத்தில் எழுதுவார். MYP 21-23.CCh 503.2