Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    ஜெபத்தில் அதிகமான துதி தேவை

    “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக.” நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டுமென்பதை நம்மி யாராவது கணக்கிட்டிருக்கிறோமா? அவருடைய இரக்கங்கள் காலைதோறும் புதியவை யென்றும், அவருடைய உண்மைகள் மாறாதவை என்றும் நினைவு கூருகிறோமா? நாம் அவரைச் சார்ந்திருப்பதை உணர்ந்து, அவருடைய தயவுகள் யாவற்றிறகாகவும் நன்றி செலுத்துகிறோமா? அதற்குமாறாக, நன்மையான எந்த ஈவும் பூர்ணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி ஜோதிகளின் பிதாவிடத்திலிருந்து இறங்கி வருகின்றது என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.CCh 317.1

    நல்லாரோக்கியமுடையவர்கள் நாளுக்குநாள், வருடத்துக்கு வருடம் தொடர்ந்து அவர்களுக்கருளப்படுகிற இரக்கங்களை எவ்வளவு சடுதியாய் மறந்து விடுகின்றனர்! கர்த்தர் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அவர்கள் எவ்விதத் துதியும் செலுத்துவதில்லை. ஆயினும், நோய் வாய்ப்படுகையில் தெய்வத்தை நினைக்கின்றனர். குணமாக வேண்டுமென்ற பலத்த விருப்பத்தின் காரணமாக ஊக்கமான ஜெபம் ஏறெடுக்கப்படுகின்றது. இது நியாயமே. நல்லாரோகியமுடையவர்களாகி இருக்கும்பொழுதும், நோய் வாய்ப்பட்டிருக்கும்பொழுதும் அவர் நமது அடைக்கலமே. ஆயினும், அனேகர் தங்கள் காரியங்களை அவரிடத்தில் ஒப்படைப்ப தில்லை. தங்களைப்பற்றிய கவலைகொண்டு முன்னிலும் மிகுந்த பலவீனமும் வியாதியும் அடைகின்றனர். அவர்கள் மனங்குறாவுவதைத் தவிர்த்து மனச் சோர்வுக்கும், இருளுக்கும் மேலாக எழும்புவார்களானால் அவர்கள் குணமாக்கப்படுவது அதிக நிச்சயம். எவ்வளவு காலம் உடல் நலனைப் பெற்று மகிழ்ந்திருந்தார்களென்பதை அவர்கள் நன்றியுடன் நினைவு கூரவேண்டும். அருமையான அவ்வரம் திரும்பவும் அருளப்படுமானால் அவர்கள் தங்கள் சிருஷ்டிகருக்குச் செலுத்த வேண்டிய புதிய கடமைகள் உண்டென்பதை மறக்கக்கூடாது. பத்து குஷ்ட ரோகிகள் சுகமானபோது, ஒருவன் மட்டும் திரும்பி வந்து, இயேசுவைக் கண்டு, அவருக்கு மகிமையைச் செலுத்தினான். தெய்வ இரக்கத்தால் தொடப்பெறாத், சிந்தனையற்ற இருதயங்கள் படைத்த மற்ற ஒன்பது பேரைப் போல நாம் இராதிருப்போமாக, 5T. 315.CCh 317.2

    தீமையானவை சம்பவிக்கும் என்று வியாகுலத்துடன் எதிர்பார்ப்பது புத்தியீனமும், கிறிஸ்தவ குணத்திற்கு மாறானதுமான பழக்கம். இவ்வாறு செய்யும்பொழுது ஆசீர்வாதங்களைப் பெறவும்; இன்றைக்குரிய தருணங்களைப் பயன்படுத்தவும் தவறுகின்றோம். இன்றையத்தினம் நாம் செய்து நிறைவேற்ற வேண்டிய கடமைகளைச் செய்யவும், இந்நாளின் சோதனைகளைச் சகிக்கவும் வேண்டும். இன்று நாம் நமது வாக்கிலும் செய்கையிலும் இடர் உண்டாக்காமல் விழிப்பாயிருக்க வேண்டும். இன்று நாம் கடவுளைத் துதித்துக் கனம் பண்ணவேண்டும். குன்றாத விசுவாசத்தை அப்பியாசித்து, சத்துருவை ஜெயிக்க வேண்டும், இன்று நாம் கடவுளைத்தேடி, அவருடைய பிரசன்னமில்லாமல் நாம் அமர்ந்திருக்க மாட்டோமென்ற உறுதியுள்ளவர்களாய் இருக்க வேண்டும். இது தான் நமக்களிக்கப் படுகின்ற நமது ஆயுளின் முடிவான நாள் என்பது போல, நாம் வேலை செய்து, விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். அங்ஙனமாகில் எத்தகைய தீவிரமான ஊக்கத்துடனே நாம் வாழ்க்கை நடத்துவோம்! நமது வாக்கிலும், செய்கையிலும் எவ்வளவு நெருக்கமாக கிறிஸ்துவைப் பின் தொடருவோம்!CCh 318.1