Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கிறிஸ்துவுக்குப் பின்னடியார் சாட்சிகளாயிருப்பார்கள்

    நீங்கள் ஓவ்வொருவருக்க்ம் கிறிஸ்துவுக்கு மிஷனெரிகளாக இருந்தால், இக்காலத்தின் தூது துரிதமாக ஓவ்வொரு ஜாதிக்கும், ஜனக்கூட்டத்திற்கும், பாஷைக்காரருக்கும், தேசத்தாருக்கும் அறிவிக்கப்படும். 6T. 438.CCh 110.2

    தேவ நகரத்திற்குள் பிரவேசிக்கிறவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் எல்லாச் செயல்களிலும் கிறிஸ்துவை தங்கள் முன் வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே கிறிஸ்துவுக்கு அவர்களை தூதுவர்களாகவும் சாட்சிகளாகவுமாக்கிறது. எல்லாத் தீமையான பழக்கங்களுக்கும் எதிராக அவர்கள் தெளிவான சாட்சி கூறி உலகத்தின் பாவங்களைச் சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டையைப் பாவிகளுக்குச் சுட்டிக் காட்ட வேண்டும். அவரை ஏற்றுக்கொள்ளுகிற யாவருக்கும் தேவ புத்திரர ஆகும்படி அவர் அதிகாரம் கொடுக்கிறார். மறு பிறப்பின் மூலமாகவே நாம் தேவ நகரத்தில் பிரவேசிக்கிறோம். அந்த வாசம் இடுக்கமும் வழி நெருக்கமானது. ஆனால் வழி நெடுகிலும், ஆண்களும் பெண்களும் சிறுவரும் இரட்சிப்படையத்தக்கதாக அவர்களுக்கு நவ இருதயமும், ஆவியும் வேண்டுமென்று போதிக்கப்படவேண்டும். பரம்பரையாக வரும் குணக்கேடுகள் மேற்கொள்ளப்படவேண்டும். ஆத்துமாவின் இயற்கை சுபாவம் மாறவேண்டும். எல்லா வஞ்சகமும், பொய்மையும், தீமை பேசுதலும் அகற்றப்பட வேண்டும். ஆண், பெண், யாவரையும் கிறிஸ்துவைப் போலாக்கும் மறுபிறப்பின் ஜீவியம் வேண்டும். 9T.23.CCh 110.3

    என் சகோதர, சகோதரிகளே, உங்களைப் பிடித்திருக்கும் மயக்கத்திலிருந்து விடுதலை அடைய விரும்புகிறீர்களா? மரணத்திற்கேதுவான சோர்புபோன்ற அசமந்தத்திலிருந்தும் விழித்து எழும்பமாட்டீர்களா? விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வேலை செய்யுங்கள். தனிப்பட்ட முறையில் ஆத்துமாக்களை இயேசுவண்டை கொண்டுவரவும், சத்தியத்தைப்பற்றிய அறிவை அவர்கள் அடையவும் முயலுங்கள். அவ்வகையான தொண்டு உங்களுக்கு ஊக்கமும், உடல் நலமும் அளிக்கும்; பலமும் உற்சாகமும் தரும். அப்பியாசத்தினால் உங்களுடைய ஆவிக்குரிய சக்திகள் அதிக சத்துவமடையும். உங்கள் சொந்த ரட்சிப்பையடைய பலத்த ஏதுவாகும். மரணத்திற்கேதுவான அசமந்தம் கிறிஸ்துவை விசுவாசிக்கிற அநேகரிடம் காணப்படுகிறது. அதிலிருந்து தட்டி எழுப்ப எல்லா பிரயத்தனமும் செய்யுங்கள். அவர்களை எச்சரியுங்கள், வேண்டிக்கொள்ளுங்கள், தடுத்துரையுங்கள். இயேசுவின் உருக்கமான அன்பு அவர்களின் உறைந்த பனி போன்ற தன்மையை அனல் பெறச் செய்து, அவர்கள் செவி கொடுக்க மறுத்தபோதிலும் உங்கள் ஊழியம் பயனற்றுப் போகாது. மற்றவர்களை ஆசிர்வதிக்க நீங்கள் முயலும் போதும், நீங்களும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். 5T.387.CCh 111.1

    கல்வி வாசனை இல்லாதவர்களாய் இருப்பதால் கடவுள் வேலையில் பங்கு பெற இயலாது என்று எண்ணலாகாது. கடவுள் உனக்கும் ஒரு வேலையை வைத்திருக்கிறார். ஒவ்வொருவனுக்கும் ஒரு வேலை உண்டு. வேதத்தை நீங்களே ஆராய்ச்சி செய்து பாருங்கள். உம்முடைய வசனத்தின் பிரசித்தம் (பிரவேசம்) வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். சங். 119:130. வேலை வளர்ச்சிக் காக நீ ஜெபிக்கலாம். உண்மையான விசுவாசத்தோடு ஏறெடுக்கும் ஜெபம் பரலோகத்தில் கேட்கப்படும். உன் திறமைக்க்குத் தக்கபடி ஊழியம் செய். 6T.433.CCh 111.2

    அழிவுக்கேதுவாகச் செல்லும் மக்களை ரட்சிப்பதற்கு மனிதர் என்ன செய்யக்கூடுமென்றும், அவர்களின் செல்வாக்கினால் என்ன மாறுதல் அடையக்கூடும் என்றும் காட்ட பரலோகவாசிகள் மனித ஏதுக்களுடன் சேர்ந்து உழைக்கும்படி காத்துக்கொண்டிக்கிறார்கள். பாலைவன ஓரங்களில் கிடக்கும் உடைவுபட்ட துண்டுப் பொருட்களைப் போல, எல்லா நாடுகளிலும் நாசத்திற்கேதுவாக தங்கள் பாவங்களில் அமிழ்ந்து கிடக்கும் மக்களை மீட்க, பொறுமையோடும், விடாமுயற்சியோடும் உழைக்கும்படி இயேசு நம்மை அழைக்கிறார்.CCh 112.1

    கிறிஸ்துவின் மகிமையில் பங்குபெறப் போகிறவர்கள், பெலவீனப்பட்டோருக்கும், நிர்ப்பந்தமானவர்களுக்கும், சோர்ந்து போனவர்களூக்கும் உதவி செய்து, அவருடைய ஊழியத்தில் பங்கு பெறவேண்டும். 9T. 30-31.CCh 112.2

    ஒவ்வொரு விசுவாசியும், மனப்பூர்வமாகச் சபையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். சபையின் வாழ்வே அவரின் முதல் வாஞ்சையாயிருப்பதாக. தனக்கானவைகளை விட சபைக்கான கடமைகளை முதற் காரியமாக அவன் எண்ணுவிட்டால், சபையில் அவன் இல்லாமலிருப்பதே நலம். தேவனுக்கென்று ஏதாவது, செய்யக்கூடிய ஆற்றல் ஒவ்வொருவருக்கும் உண்டு. அநேகர் அவசியமற்ற டாம்பீக வாழ்க்கைக்கு அபரிமிதமாகச் செலவிடுகின்றனர். இவ்விதம் தங்கள் ஆசாபாசங்களை திருப்தி செய்துகொள்ளுகின்றனர். சபையை ஆதரிப்பதற்கு கொடுப்பதைப் பளுவான வரியாக எண்ணுகின்றனர். சபையின் சகல சிலாக்கியங்களையும் பெற விரும்புகிறார்கள். ஆனால் அதன் செலவைப் பிறர் பொருப்பில் விட்டுவிடுகிறார்கள். 4T.18.CCh 112.3

    தேவனுடைய சபை ஓர் படைக்கு ஒப்பு. ஒவ்வொரு வீரனின் வாழ்க்கை உழைப்பு, கஷ்டம், ஆபத்து நிறைந்தது. தன் இடத்தை விட்டு அகலாமலும், சற்றும் அயர்ந்திடாமலுமிருக்கும் அந்தகார அதிபதி சதா விழிப்புள்ள நம் சத்துருக்களை எப்பக்கமும் நடத்திச் செல்லுகிறான். கிறிஸ்துவன் சற்று அஜாக்கிரதையாயிருக்கும்போது, பலத்த சத்துரு திடீரென கடூரமாய்த் தாக்குகிறான். சபை அங்கத்தினர் சுறுசுறுப்பாகவும் விழிப்பாகவும் இல்லாவிடில் எதிரியின் சூழ்ச்சிகளில் சிக்கிக்கொள்ளுவார்கள். தீவிர போராட்டத்தில் ஈடுபடவேண்டிய சைனியத்தில் பாதிபேர் உறங்கியும் சோம்பியுமிருந்தால் கதி என்னவாகும்? அதன் முடிவு தோல்வி, சிறை, அல்லது மரணமாகும். அல்லாமல், தப்பி ஓடுகிற எவனுக்காவது பரிசு கிடைக்குமா? கிடைக்காது. மரணதண்டனையே அடுத்துக் கிடைக்கும் பங்கு. கிறிஸ்துவின் சபை உண்மையின்றி கலவைத் தாழ்ச்சியாயிருந்தால், மிகக்கோடானவைகள் சம்பவிக்கும். கிறிஸ்துவின் வீரர்கள் நித்திரை செய்து கொண்டிருப்பது எவ்வளவு ஆபத்தானது! அந்தகார அதிபதியின் ஆதிக்கத்திற்குள்ளிருப்பவர்களை விடுவிக்க இவர்கள் எவ்வாறு முன்னேறமுடியும். அக்கரையும் பொறுப்புமின்ற், நிர் விசாரமாக போரில் பின்தங்கி நிற்பவர்கள், ஒன்று அவர்கள் போக்கை மாற்றவேண்டும், அல்லது அணியிலிருந்து விலகிக்கொள்ளவேண்டும். 5T. 394.CCh 113.1