Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தெய்வ ஆசீர்வாதம்

    போஜனப் பிரியத்தைப் பேண சுயாதீனமுண்டு என்று உணருகிற போதகர்கள் குறிக்கோளை விட்டு வெகு தூரம் நழுவி விடுகின்றனர். அவர்கள் ஆரோக்கிய சீர்திருத்தவாதிகளாயிருக்க வேண்டுமென தேவன் விரும்புகிறார். இப்பொருளின் பேரில் கொடுக்கப்பட்ட வெளிச்சத்திற்குத் தக்கபடி அவர்கள் ஜீவ்க்க வேண்டுமென்றும் எதிர் பார்க்கிறார். ஆரோக்கிய திட்டங்களுக்காக வைராக்கியம் பாராட்ட வேண்டியவர்கள் சரியான விதமாய் ஜீவிக்க இன்னும் மனத்திரும்பாததை நான் காணும்போது, என் மனம் வருந்துகிறது. அவர்கள் பெரும் நஷ்டம் அடைகிறார்கள் என்பதைக் கர்த்தர் அவர்களுடைய இருதயங்களில் பதியச் செய்ய வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். நமது சபையார்களின் வீடுகளில் காரியங்கள் இருக்க வேண்டிய பிரகாரமாக இருக்குமானால், நாம் கர்த்தருக்காக இருமடங்கான வேலை செய்யக் கூடும்.CCh 610.1

    ஏழாம் நாள் வருகையினர் சுத்திர்கரிக்கப்பட்டு தூய்மையாயிருக்க வேண்டுமானால், பரிசுத்த ஆவியைத் தங்கள் வீடுகளிலும் இருதயங்களிலுமுடையவர்களாயிருத்தல் வேண்டும். தற்கால இஸ்ரவேலர் எல்லா அசுத்தத்திலிருந்தும் ஆத்தும ஆலயத்தை சுத்திகரித்து, தேவனுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தினால், நோயாளிக்களுக்காக ஏறெடுக்கப்படும் ஜெபத்தை அவர் கேட்டு, வியாதிக்காகக் கையாளப்படும் அவர்களுடைய சிகிச்சைகளை ஆசீர்வதிப்பார் என்று எனக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டது. மனிதன் தேவன் அருளிய எளிய சிகிச்சை முறைகளை உபயோகித்து தன்னால் கூடியவரை விசுவாசத் தோடு, வியாதியுடனே போராடும் பொழுது, அவனுடைய முயற்சிகளைத் தேவன் ஆசீர்வதிப்பார்.CCh 611.1

    இவ்வளவு அதிகமான வெளிச்சங்கொடுக்கப்பட்ட பின் தேவ மக்கள் சுயத்தைப் பேணி சீர்திருத்தமடைய மறுத்து, கெட்ட பழக்கங்களை வளரவிட்டால், மீறுதலின் பலா பலன்களை நிச்சயமாய் அனுபவிப்பார்கள். மாறுபாடான போஜனப்பிரியத்தை எவ்வகையிலும் திருப்தி செய்ய அவர்கள் தீர்மானித்தால், அவற்றால் விளையும், தீமையான பலன்களிலிருந்து அவர்களைக் கடவுள் அற்புதமாகப் பாதுகாக்க மாட்டார். அவர்கள் வேதனையில் கிடப்பார்கள். ஏசா. 50:11.CCh 611.2

    ஆ! ஆரோக்கிய ஆவிக்குரிய ஈவுகளில் கடவுள் அவர்களுக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிற பெரிய ஆசீர்வாதங்களை எத்தனை பேர் இழந்து விடுகின்றனர்! தாங்கள் ஒரு சில பெரிய காரியங்களைச் செய்யத்தக்கதாக, விசேஷித்த வெற்றிகளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் போராடுகின்ற ஆத்துமாக்கள் அனேகர் இருக்கின்றனர். இதைச் செய்து முடிக்க ஜெபத்தோடும், கண்ணீரோடும் ஒரு வியாகுலமான போராட்டம் நடத்த வேண்டுமென அவர்கள் எப்பொழுதும் உணருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேவ னுடைய தெளிவான சித்தத்தை அறிய, ஜெபத்தோடு வேத வாக்கியங்களை ஆராய்ந்து, பின்பு தங்கள் இருதயங்களில் சுய பிரியத்தையும் வேறு ஒன்றையும் வைக்காமல் அவருடைய சித்தத்தின்படி செய்தால், அப்பொழுது இளைப்பாறுதலைக் கண்டடைவர். எல்லா வியாகுலமும், எல்லா கண்ணீர்களும், போராட்டங்களும்க் அவர்கள் விரும்புகிற ஆசீர்வாதத்தை அவர்களுக்குக் கொண்டு வராது. சுயம் முற்றிலுமாய் ஒப்படைக்கப்படவேண்டும். விசுவாசத்தோடு கேட்கிறயாவருக்கும் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற தேவனுடைய பூரண கிருபையை பகிருமாறு தங்களுக்கு முன்னால் வைக்கப்படுகிற வேலையை அவர்கள் செய்யட்டும்.CCh 611.3

    ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக் கடவன் என்று இயேசு மொழிந்தார். லுக். 9:23. நாம் இரட்சகருடைய எளிமையையும் சுய வெறுப்பையும் பின்பற்றுவோமாக. நமது வார்த்தையினாலும், பரிசுத்த ஜீவியத்தினாலும் கல்வாரி இரட்சகரை உயர்த்திக் காட்டுவோமாக. யார் தங்களைத் தேவனுக்குத் தத்தம் பண்ணுகிறார்களோ அவர்களிடத்தில் இரட்சகர் அதிகமாய் நெருங்கி வருகிறார். நமது இருதயங்களிலிலும் ஜீவியங்களிலும் தேவ ஆவியானவர் கிரியை செய்ய வேண்டிய ஒரு காலம் நமக்கு அவசியப்படுமானால், அக்காலம் இப்பொழுதே. நம்மை நாம் தத்தம் செய்து, பரிசுத்த ஜீவியஞ் செய்ய பெலத்திற்காக இந்த தெய்வ வல்லமையைப் பற்றில் கொள்வோமாக. 9T 153-166.CCh 612.1