Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-55

    வைத்திய ஊழியம்

    வைத்திய ஊழியம் சுவேசேஷம் செல்லுவதற்கான ஒரு வாசல். அதன் வழியாக இக்காலத்திற்குரிய சத்தியமானது அனேக வீட்டாருக்குச் செல்ல வேண்டும். தெய்வ மக்கள் மெய்யான வைத்திய ஊழியர்களாயிருக்க வேண்டும். ஆன்ம சரீர தேவைகளைப் பூர்த்தி செய்து ஊழியஞ் செய்வதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். தங்களுடைய அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி, வெளியே புறப்பட்டுப் போய், நோய்வாய்ப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கையிலே, அவர்கள் கலப்பற்ற தன்னலமின்மையைக் காண்பிக்க வேண்டும். வீடு வீடாகச் செல்லுகையிலே அவர்கள் அனேகருடைய இருந்தயங்களைக் கவர்ந்து கொள்ளுவார்கள். வேறு வழியில் சுவிசேஷத்தைக் குறித்து கேள்விப்படாதவர்கள் அனேகர் இவ்வாறு கவர்ந்து கொள்ளப்படுவார்கள். ஆரோக்கிய சீர்திருத்த தூதின் இலட்சியங்களை விளக்கித் திருஷ்டாந்தப்படுத்திக் காண்பித்தால், நம்முடைய சுவிசேஷ வேலையின் மீதுள்ள துவேஷம் நீங்கும். வைத்திய சுவிசேஷ ஊழியத்தின் கர்த்தாவாகிய பெரும் பரிகாரி இக் காலத்திற்குரிய சத்தியத்தை அறிவிக்க வகை தேடுகின்ற அனைவரையும் ஆசிர்வதிப்பார்.CCh 649.1

    சுவிசேஷ கட்டளையுடனே சரீர சொஸ்தமும் இணைக்கப்பட்டுள்ளது. தம்முடைய சீஷர்கள் சுவிசேஷத்தை அறிவிக்க பிரயாணம் செல்ல அனுப்பிய பொழுது, அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து, “போகையில், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்குங்கள். குஷ்டரோகிகளைச் சுத்தம் பண்ணுங்கள். மரித்தோரை எழுப்புங்கள். பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலாசமாய்க் கொடுங்கள்” என்றார். மத். 10:7,8.CCh 649.2

    சுவிசேஷக் கட்டளையைச் சீர்திருத்த அவசியமில்லை. சத்தியத்தை அறிவிப்பதற்குக் கிறிஸ்து கையாண்ட முறையை விடவும் சிறந்த முறையை நாம் கண்டு கொள்ள முடியாது. சத்தியத்திலே ஆத்துமாக்கள் மகிழ்ச்சியடையுமாறு ஊழியஞ்செய்வது எப்படி என்று விளக்கி, நடைமுறையில் பலனளிக்கும் விதத்தில் ஊழியஞ் செய்வதற்கு சீஷர்களுக்குக் கற்பித்தார். சோர்வடைந்து, பாரஞ்சுமந்து, ஒடுக்கப்பட்டிருந்தவர்களிடத்திலே அனுதாபம் காட்டினார். பசியுள்ளோரைப் போஷித்து, நோயடைந்தோரைக் குணமாக்கினார். எப்பொழுதும் நன்மை செய்கிறவராகச் சுற்றித் திருந்தார். அவர் செய்த நன்மைகளின் மூலமாகவும், அவருடைய அன்பும் பட்சமும் மிகுந்த வார்த்தைகளினாலும் சுவிசேஷத்தை மனிதருக்கு அவர் வியாக்கியானப்படுத்தினார். மனிதன் சார்பில் கிறிஸ்துவானவரின் கிரியை இன்னும் முடியவில்லை. அது இன்னும் தொடர்ந்து நடந்தேறுகின்றது. அவ்விதமாகவே அவருடைய பிரதிநிதிகள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அழிந்து போகிற ஆத்துமாக்களின் பொருட்டு அவருடைய இரக்கமுள்ள சினேகத்தை வெளிப்படுத்த வேண்டும். யாருக்கு உதவி தேவையாகின்றதோ அவர்களிடத்தில் போய், தன்னலமற்ற சிரத்தை காட்டி, சுவிசேஷ சத்தியத்தைத் திருஷ்டாந்தப்படுத்திக் காண்பிக்க வேண்டும். பிரசங்கம் செய்வதைப் பார்க்கிலும் அதிகம் இவ்வூழியத்தில் அடங்கியிருக்கின்றது. அவர்கள் கிறிஸ்துவின் உடன் ஊழியர்களாக விளங்கி, கெட்டுப்போக விருக்கிறவர்களுக்கு அவருடைய உருக்கமும் இரக்கமுமுள்ள அன்பை வெளிப்படுத்த வேண்டும். இக்காலத்திற்குரிய சத்தியத்தை அறிந்தவர்களுக்குப் பிரசங்கிப்பதிலே அல்ல, கடைசி இரக்கத்தின் தூதை ஒரு போதும் கேட்டிராதவர்களை எச்சரித்து, தமக்கு ஊழியஞ்செய்யும் படியாக ஆயிரக்கணக்கானவர்களைத் தெய்வம் அழைக்கின்றார். ஆத்துமாக்களின் பொருட்டு ஊக்கமுள்ள வாஞ்சையால் நிரம்பிய இருதயத்துடனே ஊழியஞ்செய்யுங்கள். வைத்திய மிஷனெரி ஊழியம் செய்யுங்கள். இவ்வாறு நீங்கள் மக்களுடைய இருதயங்களைக் கவர்ந்து கொள்ளுவீர்கள். அதிக திட்டமாகச் சத்தியத்தை அறிவிப்பதற்கும் வழி திறக்கப்படும். CH 497-499.CCh 650.1

    ஸ்தாபனங்கள் நிறுவப்பட வேண்டும். அனேக இடங்களிலே சுவிசேஷ வைத்திய ஊதிய தேவையாகின்றது. அவ்விடங்கலிலே சிறிய ஸ்தாபனங்களையும் நிறுவ வேண்டும். நம்முடைய ஆரோக்கிய சாலைகள் உயர்ந்தவர்களுக்கும், தாழ்ந்தவர்களுக்கும், ஐசுவரியமுள்ளவர்களுக்கும் எளியவர்களுக்கும் ஏற்றபடி இருக்க வேண்டுமென்று தெய்வம் திட்டம் செய்திருக்கின்றார். அவை நிர்வகிக்கப்படும் விதத்தினாலே கடவுள் உலகத்திற்கு அனுப்பிய தூதிலே மக்கள் கவனம் செல்ல வேண்டும். CH 501.CCh 651.1

    ஆவிக்குரிய ஊழியமும் சரீரத்துக்குரிய ஊழியமும் ஐக்கியமாகி, துன்பமடைந்தவர்களைப் பரம பரிகாரியின் வல்லமையிலே நம்பிக்கை வைக்குமாறு வழி நடத்த வேண்டும். சரியான சிகிச்சைகளை அளித்து, சொஸ்தமளிக்கிற கிறிஸ்துவானவரின் கிருபைக்காகவும் பிரார்த்திக்கின்றவர்கள் நோயாளியின் மனதிலே விசுவாசத்தை தூண்டுகின்றார்கள். தங்களுடைய நிலை நம்பிக்கையற்றது என்று எண்ணியிருப்பவர்களுக்கு இவர்களுடைய ஊழியத்தின் போக்கே நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். CCh 651.2

    ஏற்ற சிகிச்சையுடனே விசுவாசமுள்ள ஜெபத்தினாலும், ஆவிக்குரிய, சரீர பிரகார நல்வாழ்வை நடத்துவதற்குப் போதனை அளித்து, நம்பிக்கையற்றோருக்கு தைரியமூட்டுவதற்காகவே நமது வைத்திய ஸ்தாபனங்கள் ஏற்பட்டன. நம்முடைய ஸ்தாபனங்களில் இருக்கும் வைத்தியர்கள் ஆன்ம சுகத்தை அடைவதாகிய தெளிவான சுவிசேஷத்தை அறிவிக்க வேண்டும். MM 248. CCh 651.3