Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பிள்ளைகளுக்குக் கற்பிப்பதில் பெற்றோர் கடமை

    அவர்களுக்கு இருக்கும் யாவின் மேலும் கடவுளுக்கு உரிமையுண்டென உங்கள் பிள்ளைகளுக்குப் போதியுங்கள்; எக்காரியமும் அதை ரத்துச் செய்ய முடியாது; அவர்கள் கீழ்ப்படிதலைக் காட்டும்படி அவர்கள் வசம் பொறுப்பளிக்கப்பட்டிருக்கிறது. பணம் அவசியமான பொக்கிஷம்; தேவைப் படாதவர்களுக்கு அதை விரையஞ் செய்யக்கூடாது. உங்கள் மனப்பூர்வ நன்கொடைகள் ஒரு சிலருக்கு அவசியப்படும். விரயஞ் செய்யும் பழக்க மிருந்தால் அதை ஜீவியத்திலிருந்து உடனே நீக்கப்போடு. இப்படிச் செய்யாவிடில், நீ நித்தியமாய் ஆண்டியாவாய். C.G. 134.CCh 434.1

    இக்கால இளைஞர்கள் சிக்கனத்தை பிசினித்தனம் என ஏளனமாய் பேசி அலட்சியமாய் வெறுப்பது இயல்பு, ஆனால் சிக்கனம் மிகத் தாராள சிந்தை என்பதோடு இணைந்தது; இது அப்பியாசிக்கப்படாத இடத்தில் மெய்யான பரோபகாரம் காணப்பட்டது. சிக்கனத்தைக் கற்று, துணுக்குகளைப் பேண முயலுவது தனக்குக் குறைவு என எவரும் எண்ணக் கூடாது. 5T 400.CCh 434.2

    ஒவ்வொரு சிறுவரும் கற்பனா சிக்கல்களை மட்டும் தீர்க்கப் பழகுவது போதாது. தங்கள் வரவு செலவுகளைக் குறித்து திட்டமான கணக்குகள் வைக்கவும் கற்பிக்கப்பட வேண்டும். சரியாகப் பயன் படுத்த பணத்தை அவர்கள் செலவழிக்க வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். பெற்றோர் கொடுப்பதிலிருந்தோ, அல்லது தங்கள் சம்பாத்தியத்தினாலோ சிறுவர் சிறுமிகள் தங்கள் ஆடைகளையும், புஸ்தகங்களையும், வேறு தேவைகளையும் வாங்கப் பழகட்டும். செலவுகளுக்குக் கணக்கு வைக்கப் பழகுவதினால் வேறெந்த வகையிலும் அறியாத அளவில் பணத்தின் மதிப்பையும், உபயோகத்தையும் அறிந்து கொள்வார்கள். C. S. 294.CCh 434.3

    நம் பிள்ளைகளுக்கு ஞானமற்ற உதவி கொடுப்பது என்று ஒன்றுண்டு. கல்லூரிகளில் படிக்க பிறர் கொடுப்பதிலும் சுய முயற்சியால் சம்பாதிப்பதில் ஓர் அலாதி நன்மையுண்டு, ஏனெனில் அதில் மதிப்பு தெரியும். உதவியற்ற பார ஆகும் வரை நாம் நம் பிள்ளைகளைச் சுமக்கக்கூடாது.CCh 435.1

    பிரயோஜனம், சிரமமுள்ள வேலையின் அனுபத்தைப் பெறுமின் சரீர பெலமுள்ள வாலிபருக்குத் தாராளமாகப் பணம் கொடுத்து தேவ ஊழியனாகவோ, டாக்டர் ஆகவோ படிக்கச் செய்வது பெற்றோர் செய்யும் தவறு. A. H. 387.CCh 435.2

    சுய தேவைகளைப் பூர்த்தி செய்யும் பழக்கங்களும், யுகமற்ற மனைவியின் போக்குகளும் செலவை வாரிக்கொண்டு போகலாம்; ஆயுனும் வீட்டுக் காரியங்களில் தனக்குக் கிடையாதென்றும், தன் காரியங்களிலும் தன் பிள்ளைகள் காரியங்கள்லும் மட்டும் செட்டுமாக இருக்கக் கற்பிக்கப்படவில்லையெனத் தாய் எண்ணலாம். எனவே இது போன்ற இரு குடும்பத்திற்கு ஆகும் செலவு ஒரே குடும்பத்திற்கு அவசியப்படுகிறது.CCh 435.3

    பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கண்டிப்பான சிக்கனம் கற்பிக்கப் பழக்கும்படி, நான் போதிக்குமாறு வீண் செலவு செய்யும் பழக்கத்தின் தீமைகளை எனக்குக் காட்ட கர்த்தர் சுத்தங்கொண்டார். தேவையில்லாக் காரியங்களுக்குச் செலவு செய்து தகாதென அவர்களுக்குக் கற்பியுங்கள். A. H. 374, 375.CCh 435.4