Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கனம் பண்ணுதலையும் மரியாதையையும் கற்பியுங்கள்

    முதியோரை அன்புடனே கனம் பண்ணுவதைத் தெய்வம் முக்கியப்படுத்திக் கூறியிருக்கிறார். நீதியின் வழியில் உண்டாகும் நரையிரானது மகிமையான கிரீடம், நீதி. 16:31. அந்நரைமயில் போராடிய போராட்டங் களையும் அடைந்த வெற்றிகளையும், எதிர்த்த சோதனைகளையும் பற்றிக் கூறுகின்றது. சோர்வடைந்த பாதங்கள் விரைவில் இளைப்பாறப்போவதையும், அவர்களின்றி வெறுமையாக இருக்கப் போகும் வீடுகளையும் பற்றி அது கூறுகின்றது. பிள்ளைகள் இதை நினைவிலே வைத்துக் கொள்ளுமாறு செய்யுங்கள். அப்பொழுது தங்கள் கனத்தினாலும் மரியாதையினாலும் வயதானவர்களுடைய பாதையை அவர்கள் மிருதுப்படுத்தி இலகு வாக்குவார்கள். அவர்களுடைய இளம் வாழ்விலே கிருபையும் அலங்காரமும் தோன்ற நரைத்தவருக்கு முன்பாக எழுந்து முதிர்வயதுள்ளவனைக் கனம் பண்ணு என்று கூறப்படுவதற்கு இணங்க நடந்து கொள்ளுவார்கள். லேவி. 19:32. Ed 244.CCh 532.2

    ஆவியின் கிருபை வரங்களிலே மரியாதைப் பண்பும் ஒன்று. அதை அனைவரும் பயில வேண்டும். அது சுபாவத்தை மிருதுவாக்கும் வல்லமை உடையது. அஃதில்லாமல் சுபாவம் கரடு முரடான வளர்ச்சியை அடையும். கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டு, அதே வேளையில் முரட்டுத்தனமாகவும் பட்சமின்றியும், மரியாதைக் குறைவாகவும் நடந்துகொள்ளுகிறவர்கள் கிறிஸ்துவைக் கற்றுகொள்ளவில்லை. அவர்களுடைய உண்மையும் நேர்மையும் சந்தேகத்திற்கு இடம் தராமலிருக்கலாம். ஆயினும் பட்சமும் மரியாதைப் பண்பும் குறைவாக இருப்பதற்கு இவற்றினால் பிராயசித்தம் உண்டாகாது. PK 237.CCh 533.1