Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    குடும்பத்தாரின் மிகப் புனித நேரம்

    ஓய்வுநாள் பள்ளிக்கூடமும், ஆராதனைக்காக ஒன்று கூடுவதும் ஓய்வுநாளின் ஓர் அம்சம், எஞ்சிய நேரம் மிக அருமையும் திவ்ய பக்திக்கடுத்த வேளையுமாக குடும்பத்திற்குப் பயன்படவேண்டும். இதில் அதிகமான நேரத்தைப் பெற்றோர் பிள்ளைகளுடன் செலவிட வேண்டும். அநேக குடும்பங்களில் சிறுவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடி பொழுது போக்க விடப்படுகிறார்கள். இப்படித் தனியாக விடப்படுவதினால் பிள்ளைகள் அமைதியர்றவர்களாகி பல கேளிகைகளிலும் விஷமங்களிலும் ஈடுபடுகின்றனர். இவ்விதமாக ஓய்வுநாள் அவர்களுக்குப் பரிசுத்த நாளாகக் காணப்படுகிறதில்லை. இன்பகரமான வேளைகளில் பெற்றோர் தம் பிள்ளைகளுடன் வயல் வெளிகளிலும் சோலைகளிலும் உலாவட்டும். இயற்கையின் மனோகரமான காட்சிகளுக்கிடையே ஓய்வுநாள் ஸ்தாபனம்பற்றி அவர்களுக்குச் சொல்லுங்கள். சிருஷ்டிகரின் மாபெரும் கிரியையை அவர்களுக்கு விளக்குங்கள். அவர் கரத்திலிருந்து உலகம் உருவாகி வந்தபோது அது பரிசுத்தமும் அழகும் பொருந்தியிருந்ததென அவர்களுக்குக் கற்பியுங்கள். ஒவ்வொரு மலரும், ஒவ்வொரு செடியும், விருட்சமும், சிருஷ்டிகரின் நோக்கத்தை வெளிப்படுத்தின. கண்கண்டயாவும் இரமணியமாயிருந்ததுடன் தேவ அன்பைப்பற்றிய எண்ணங்களால் மனதை நிரப்பின. ஒவ்வொரு ஒலியும் தேவ சத்தத்தோடு பொருந்திய இன்பநாதமாக விருந்தது. தேவனுடைய பூரண படைப்பைப் பாவமே பங்கப்ப்டுத்தியது என்றும், முள்ளு, குருக்கு, துன்பம், நோவு, சாவு, யாவும் கீழ்ப்படியாமையின் பலன் என்றும் காட்டுங்கள். பாவ சாபத்தால் பூமி கறைப் பட்ட போதிலும் அது தேவ தயவை வெளிப்படுத்துகிறதென்பதை இவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். பச்சைப்பசேலேனத்துலங்கும் வயல்வெளிகளும், உயர்ந்து கிளர்ந்த மரங்களும், மகிழ்ச்சியூட்டும் சூரிய வொளியும், தவழ்ந்து செல்லும் மேகங்களும், பனியும், அமைதி நிலவும் இரவும், வான்வீதி செல்லும் நட்சத்திர மகிமையும், அழகுகக்கும் நிலவும் சிருஷ்டிகரின் மாட்சிக்கு சாட்சிகள். பெய்யும் துளி மழையும், வீசும் கதிரொளியும் நன்றி கெட்ட இவ்வுலகத்திற்குத் தேவனுடைய சகிப்பையும், அன்பையும் காட்டுகிறது. இரட்சிப்பின் வழியை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார் (யோவான் 3:16) என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். பெத்லெகேமின் இனிய சரிதையை மீண்டும், மீண்டும் அவர்களுக்குச் சொல்லுங்கள். பெற்றோருக்குக் கீழ்படிந்த சிறுவனாகவும், குடும்பத்தை ஆதரிக்க மெய் வருந்தியுழைத்த வாலிபனாகவும் இயேசு இருந்தாரென பிள்ளைகளுக்கு விளக்கிக் கூறுங்கள். இவ்விதமாக, நமக்கு வரும் பாடுகள், சோதனைகள், இளைஞரின் நாட்டங் கள், நம்பிக்கைகள் யாவும் இரட்சகர் அறிகிறாரென்றும் அவர் அவர்களுக்கு அனுதாபம் காட்டி உதவக் கூடுமென்றும் சிறுவர்களுக்குக் கற்பியுங்கள். அவ்வப்போது வேத சரித்திரத்திலுள்ள சுவை தரும் கதைகளை அவர்களோடு சேர்ந்து வாசியுங்கள். ஓய்வுநாட் பள்ளிக்கூடத்தில் கற்றவைகளைப் பற்றி அவர்களிடம் ஆராய்ந்து கேளுங்கள். மேலும் அடுத்த வாரப் பாடத்தை அவர்களுடன் சேர்ந்து படியுங்கள். 6 T.358-359.CCh 92.3

    ஓய்வுநாளில் குடும்ப சகிதமாக யாவரும் கர்த்தருக்கு ஒப்புவிக்கப்படவேண்டும். கற்பனையின்படி நம் வாசல்களிலிருக்கிற யாவரும் கர்த்தருக்கு ஒப்புகொடுக்கப்பட வேண்ட்ம். குடும்பத்தினர் யாவரும் உலக அலுவலக்ளாஇ விட்டு ஓய்ந்து பக்திக் கடுத்தவைகளில் நேரத்தைச் செலவிட வேண்டும். அப்பரிசுத்த நாளில் மகிழ்ச்சியுடன் பணியாற்றி கடவுளை கனப்படுத்துவதில் யாவரும் ஒன்று சேர வேண்டும். 2TT.185.CCh 94.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents