Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கீழ்ப்படிதல் நமது கடமை

    நமது சரீரங்களாகிய உயிருள்ள இயந்திரவியக்கத்தை மனிதனைப் படைத்தவர் ஒழுங்குபடுத்தியிருக்கின்றார். அதின் ஒரொரு இயக்கமும் அற்புதமாகவும் ஞானம் பொருந்தியதாகவும் அமையப் பெற்றுள்ளது. மனிதன் அவருடைய பிரமாணங்களுக்குக் கீழ்ப்படிந்து, கடவுளுடனே ஒத்துழைப்பானாகில், இந்த மனித இயந்திரத்தை ஆரோக்கியமான கிரியை செய்யக்கூடிய விதத்தில் வைத்திருப்பதாக அவர் உறுதிமொழி அளித்திருக்கின்றார். மனித இயந்திரவியக்கத்தை நிர்வகிக்கும் பிரமாணங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் தன்மையிலும் உற்பத்தியிலும் முக்கியத்துவத்திலும் தெய்வத் திருமொழி போன்றே தெய்வீகமானது. உயிர் உடலில் வாழ அவர் குறிப்பிட்டிருக்கும் பிரமாணங்களை ஒதுக்கித் தள்ளி கர்த்தருடைய அற்புதமான இயந்திரவியக்கத்தைப் பழுதாக்கும் அசட்டையும் கவலையீனமுமான ஒரொரு கிரியையும் அவருடைய பிரமாணத்தின் மீறுதலேயாகும். தேவனுடைய கிரியையை இயற்கை உலகத்திலே நாம் கண்டு அதிசயிக்கிறேம். மனிதர் உயிர் வாழும் உடலியக்கமே மிகவும் அற்புதமானது. CD 17.CCh 565.3

    இயற்கைப் பிரமாணங்கள் யாவும் கடவுளுடைய பிரமாணங்களேயாதலால், அவற்றை நன்றாகக் கற்பது நம்முடைய கடமை என்று தெளிவாகின்றது. அக்கட்டளை நமது உடல் சம்பந்தமாகக் கூறுவது யாது என்று நாம் ஆராய்ந்தறிந்து அவற்றிற்கேற்ப நடந்துகொள்ள வேண்டு. இவற்றை அறியாதிருப்பது பாவமே.CCh 566.1

    ஆண்களும் பெண்களும் மெய்யான மனந்திரும்புதலை அடைகின்ற பொழுது, கடவுள் அவர்களுடைய உடலில் அமைத்திருக்கின்ற ஜீவ பிரமாணங்களை மனச் சாட்சியின் மெய்யுணர்வுடனே மதித்து நடந்து, சரீரத்திலும் மனதிலும் சன்மார்க்கத்திலும் பெலவீன முடையோராக இல்லாதிருக்க வகை தேடுவர். இந்தப் பிரமாணங்களுக்குக் கீழடங்குவது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமையாகும். பிரமாணத்தின் மீறுதலால் ஏற்படுகிற வியாதிகளை நாமே பெற்று அனுபவிப்போம். நம்முடைய வழக்க பழக்கங்களைக் குறித்து நாம் தேவனுக்கு உத்தரவாதம் பண்ண வேண்டும். எனவே நாம் உலகம் என்ன சொல்லும்? என்ற கேள்விக்கல்ல, நான் கிறிஸ்தவனாயிருக்கிறபடியால் கடவுள் எனக்கு அளித்த உடலை நான் எவ்வாறு வைக்க வேண்டும்? பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணத்தக்கதாக நான் என்னுடைய சரீரத்தை ஓர் ஆலயமாகப் பாவித்து, என்னுடைய சரீர ஆவிக் குரிய பெரும் நன்மைக்காக கிரியை நடப்பிப்பேனா? அன்றி உலகினரின் கருத்துகளையும் பழக்கங்களையும் பின்பற்றுவதற்காக என்னைத்தத்தஞ் செய்வேனா? என்பதற்கே நாம் விடை கூற வேண்டும். CT 369,370.CCh 566.2