Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பன்றி உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக

    பன்றியின் சதைகளில் தொற்று நோய்க் கிருமிகள் நிரம்பியிருக்கின்றன. பன்றியைப்பற்றி தேவன் சொன்னது: CCh 592.4

    “அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாமிசத்தைப் புசியாமலும், இவைகளின் உடலைத்தொடாமலும் இருப்பீர்களாக உபா. 14:8. பன்றியின் மாமிசம் உணவுக்குத் தகுதியல்ல என்பதினால் இக்கட்டளை கொடுக்கப்பட்டது. பன்றி தோட்டிகளுடைய வேலையைச் செய்யும் உபயோகத்திற்காகவே வைக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சந்தர்ப்பத்திலும், ஒருபோதும், அதன் மாமிசம் மானிடரால் புசிக்கப்படக்கூடாது. எந்த உயிர்ப் பிராணியும் அருவருக்கத்தக்கவற்றை ஆகாரமாக உட்கொண்டு, அசுத்தமே அதன் உடலாக அமைந்திருக்கும்போது அதன் மாமிசம் சுகத்துக்கேதுவாக இருப்பது கூடாத காரியம். MH 313, 314.CCh 593.1

    பன்றி இறைச்சி, அதிக சர்வ சாதாரண உணவாயிருப்பினும், மிகவும் தீங்கு செய்கிற வற்றில் ஒன்றாகும். தேவன் தம்முடைய அதிகாரத்தைக் காட்டுவதற்கல்ல, பன்றி இறைச்சி மனிதனுக்கு பொருத்தமான உணவு அல்ல என்பதினால், எபிரேயர் அதைச் சாப்பிடக்கூடாது என்று விலக்கினார். அது சரீரத்தை விரணங்களினால் நிரப்பி, உஷ்ண பிரதேசத்திலிருப்பவர்களுக்குக் குஷ்டரோகத்தையும் பலவித நோய்களையும் உண்டாக்குகிறது. குளிர் பிரதேசத்தில் இருப்பவர்களைவிட உஷ்ணப் பிரதேசத்தில் இருப்பவர்களுடைய சரீரத்தில் அது அதிக கேடு செய்கிறது. மற்ற எல்லா மாமிசங்களைப் பார்க்கிலும் பன்றி இறைச்சி இரத்தத்தை கெட்ட தன்மையுடையதாக்குகிறது. பன்றி இறைச்சியைத் தாராளமாய் உண்பவர்கள் நோய்ப்படாமல் இருக்க முடியாது. CD 392, 393.CCh 593.2

    முக்கியமாக மூளையிலுள்ள மெல்லிய உணர்ச்சி நரம்புகள் பலவீனப்பட்டு, பரிசுத்தமானவைகளைச் சாதாரணமானதாக மதிக்கச் செய்யும் அளவிற்கு மூளை மந்தமடைகிறது. 2T 96.CCh 593.3

    மூளை வேலை செய்கிறவர்களைப் போலவும், வீட்டுக்குள்ளே அடைப்பட்டு, இருந்த இடத்திலேயே வேலை செய்கிறவர்களைப்போலவும் திறந்த வெளியில் வேலை செய்கிறவர்கள் பன்றி இறைச்சி உண்பதின் கேடுகளை உணர்வதில்லை. CD 393.CCh 594.1