Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அத்தியாயம்-27

    கணவனை அல்லது மனைவியைத் தெரிந்து கொள்ளுதல்

    பரிசுத்த விவாகம் இம்மை மறுமை இரண்டிலும் உங்கள் வாழ்க்கையைப் பாதிக்கிறது. மெய்க் கிறிஸ்தவன் கடவுள் தன் போக்கை ஒப்புக்கொள்ளுகின்றார் என்று அறிந்தால் அல்லாமல், அந்நெறியில் தன் திட்டங்களை முன்னேறவிடான். அவன் தனக்குத் தானே தெரிந்துகொள்ள விரும்பான். கடவுளே தனக்காகத் தெரிந்தெடுக்க வேண்டுமென்ரு உணர்வான். நாம் நமக்கே பிரியமாய் நடக்கக் கூடாது. கிறிஸ்து தமக்கே பிரியமாய் நடக்கவில்லை. எவராவது தாம் நேசியாதவர் ஒருவரை மணம் செய்யலாம் என்பது என் கருத்து என்று எண்ணலாகாது. அது பெருந் தவறு. கவர்ச்சியும், உணர்ச்சி வசப்பட்ட சுபாவமும், அழிவுக்கு வழிநடத்த இடங் கொடுக்கக் கூடாது. கடவுள் நம் முழு இருதயத்தையும், உன்னத அன்பையும் உரிமையுடன் வேண்டுகின்றார்.CCh 343.1

    மணம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றவர்கள் தாங்கள் நிறுவப் போகும் குடும்பத்தின் தன்மையும் செல்வாக்கும் எவ்வாறு இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்கள் பெற்றோர் ஆகின்றபொழுது புனித பொறுப்பு அவர்களிடம் ஒப்புவிக்கப் படுகின்றது. தங்கள் பிள்ளைகளைன் இம்மை நலமும், மறுமை இன்பமும் எல்லாம், பெரும்பாலும், அவர்களையே சார்ந்துள்ளன. தங்கள் சிறுவர் அடைகின்ற உடல் நலம், ஒழுக்க நலம் இரண்டையும், மிகப் பெரும்பான்மையாய் அவர்களே வகையறுத்து, முத்திரையிட்டு விடுகின்றனர். சமுதாய நிலைமை இல்லத் தின் நல்லொழுக்கத்தைச் சார்ந்துள்ளது. சமுதாயத்துலாக்கோல் தட்டு உயர்வதும் தாழ்வதும் குடும்பச் செல்வாக்கின் மதிப்பைப் பொறுத்தது.CCh 343.2

    கிறிஸ்தவ இளைஞர் நட்புக் கொள்வதிலும், வாழ்க்கைத் துணைவர்களைத் தெரிந்து கொள்வதிலும், மிகவும் விழிப்பாய் இருக்க வேண்டும். நாம் இன்று பசும்பொன் என்று நினைப்பது நாளை வெறும் பித்தளையாக மாறி விடக்கூடாது. ஆதலால் கவனம் வேண்டும். உலகத்தோழமைகள் கடவுளுக்குத் தொண்டு செய்யும் வழியில் நமக்கு இடையுறாதல் கூடும். எக்காலத்தும் உயர்வும் மேன்மையும் அடையக்கூடாத மக்களுடன் தொழில் துறையில் அல்லது திருமணத்தில் வைத்துக் கொண்ட நிர்பாக்கியமுள்ள தொடர்பினால் கெட்டழிந்த ஆத்துமாக்கள் பலர்.CCh 344.1

    உன் வாழ்க்கை நலத்தை எவருடன் பிணைத்துக்கொள்ள நினைக்கின்றாயோ அவரது உணர்ச்சிக் கருத்து ஒவ்வொன்றையும் நிறுத்துப்பார்; அவரது ஒழுக்க வளர்ச்சி ஒவ்வொன்றையும் உற்றுநோக்கு. உன் வாழ்க்கையில் நீ அடி எடுத்து வைக்கப் போகிற காரியம் மகா முக்கியமானது; ஆத்திரப் பட்டு அடி எடுத்து வையாதே. காதல் கொண்டாலும் குருட்டுத்தனமாய் காதல் கொள்ளாதே.CCh 344.2

    உன் மண வாழ்க்கை இன்பமாய் இருக்குமோ, பொருத்தமின்றி நிர்ப்பாக்கியமுள்ளதாய் இருக்குமோ என்று கருத்தாய் ஆராய்ந்து பார். இந்த ஐக்கியம் பரலோக வழியில் எனக்கு உதவியாகுமோ? இது கடவுள் மீதுள்ள என் அன்பை விரிவாக்குமோ? இவ் வினாக்களை பயன் படும் எல்லையை விரிவாக்குமோ? இவ் வினாக்களை எழுப்பி இவற்றிற்கு விடை தேடு. இக்கருத்துக்களில் இடர்பாடு தோன்றாவிடின், தெய்வ பயத்துடன் முன்னேறு.CCh 344.3

    வாழ்க்கைத் துணையைத் தெரிந்து கொள்வதினால் பெற்றோராகிய தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் உடன் நலம், மனநலம், ஆன்ம நலம் ஆகியவை முதலிடம் பெற வேண் டு. இவற்றினால் பெற்றோர் பிள்ளைகள் இருதிறத்தினரும், தம் உடன் மக்களுக்கு நல்வாழ்வும், தம் சிருஷ்டிகருக்கு மகிமையும் விளைவிப்பார்கள்.CCh 344.4