Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மாந்திரீகமும் மூட நம்பிக்கையும்

    எபேசுவில் மனந்திரும்பியவர்கள் தங்கள் மாய வித்தைக்கான நூல்களைச் சுட்டெரித்ததானது, முன்பு மகிழ்ச்சியாக உபயோகித்தவைகளை இப்பொழுது அருவருத்தார்கள் எனக் காட்டுகிறது. அவர்கள் மாய வித்தையினால் தேவனை வருத்தப்படுத்தினார்கள். தங்கள் ஆத்துமாக்களைக் கேட்டிற்குள்ளாக்கினார்கள். இப்பொழுது அந்த மாய வித்தைக்கு விரோதமாகத் தங்கள் கோபத்தைக் காட்டினார்கள். இவ்விதம் செய்து, மெய் மனந்திரும்புதலுக்கான சாட்சி கொடுத்தார்கள்.CCh 699.1

    இருபதாம் நூற்றாண்டின் நாகரீகத்தின் காரணமாக அஞ்ஞான மூட நம்பிக்கைகளெல்லாம் மறைந்து விட்டன என்று எண்ணிக்கொள்ளுகின்றனர். ஆனால் பண்டை கால மாய வித்தைக்காரர்களைப் போலவே இந்த யுகத்திலும் பில்லி சூனியம் கையாளப்படுகிறது என்று தேவ வசனமும், உறுதியான சத்தியச் சாட்சிகளும் அறிவிக்கின்றன. பூர்வ கால மாந்திரீக மாய வித்தைகள் தற்கால ஆவேச மார்க்கக் கொள்கைகள் என அறியப்படுகின்றன. மரித்துப்போன நண் பர்கள் என்ற வேஷத்தில் சாத்தான் ஆயிரக் கணக்கானவர்களின் மனதில் தன்னைத் தென்படச் செய்கிறான். “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என வேதம் கூறுகிறது. பிர. 9:5. அவர்களது யோசனைகள், அன்பு, பகையாவும் அழிந்து விட்டன. உயிரோடிருப்பவர்களுடன் மாண்டோர் சம்பாஷிப்பதில்லை. ஆனால் சாத்தான் தனது ஆதித் தந்திரத்திற்கேற்ப, மானிடர் மனதை தனது ஆதீனத்திற்குள் ஆதாயப்படுத்திக்கொள்ள இந்த சாதனத்தை கையாளுகிறான்.CCh 699.2

    ஆவேச மார்க்கத்தின் மூலம் நோயுற்றார், துயரப்படுபவர்கள், மரித்தோரைக் காண ஆசைப்படுகிறவர்கள் பொல்லாத ஆவிகளுடன் சம்பாஷிக்கின்றனர். இவைகளைச் செய்யத் துணிகிறவர்கள் ஆபத்தான இடத்தில் இருக்கின்றனர். இவைகளைத் தேவன் எங்ஙனம் மதிக்கிறார் என சத்திய வார்த்தைகள் அறிவிக்கின்றன. பூர்வ நாட்களில் அந்நிய தேவனிடம் ஆலோசனை கேட்க ஆட்களை அனுப்பிய அரசனுக்குத் தேவன் கண்டிப்பான நியாயத் தீர்ப்பைக் கூறினார். “இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப் போகிறீர்கள்? இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” 2 இரா. 1: 3-4.CCh 700.1

    அஞ்ஞான காலங்களின் மாய வித்தைக்கு ஒத்த ஆவேச மார்க்க சாதன்ங்கள், சுகனம் பறக்குதல், குறி சொல்லுதல், இன்றும் உள்ளன. எந்தோரிலும். எபேசுவிலும் கேட்ட மாய சப்தம் இன்றும் பொய்யான வார்த்தைகளால் மானிட மக்களை வழி தப்பி நடத்துகின்றது. நமது கண்களை மறைக்கும் திரை நீக்கப்படக் கூடுமானால், பொல்லாத தூதர்கள் தங்கள் கலைகளை எல்லாம் உருட்டித் திரட்டி அழிக்கவும், மோசம் போக்கவும் உபயோகிப்பதை நாம் காணலாம். தேவ்னை மறக்கச் செய்யும்படி எங்கே எல்லாம் செல்வாக்கு பிரயோகிக்கப்படுகிறதோ, அங்கு சாத்தான் தன் அஞ்சன சக்தியை அப்பியாசிக்கிறான். அவனது செல்வாக்கிற்கு மானிடர் இணங்கும்போது ஆத்துமா கறைப்பட்டு, மனது குழம்பி இருப்பதை அறிவார்கள். எபேசு சபைக்கு அப்போஸ்தலன் கொடுத்த புத்திமதிகளைத் தற்காலத்தில் தேவனுடைய ஜனம் கவனிக்க வேண்டும். “கனியற்ற அந்தகார கிரியைகளுக்கு உடன்படாமல் அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள்.” எபே. 5:11. AA 288-290.CCh 700.2