Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    தகாத வாசிப்பின் செல்வாக்கு

    எதினால் மனசு போஷிக்கப்படுகிறதோ அதனால் அது பெரிதும் பக்குவப் படுகிறது என்பதைச் சாத்தான் அறிவான். வாலிபர் பெரியோர் யாவரும் கதைப் புத்தகங்களையும், வேறு நூல்களையும் வாசிக்க வழி நடத்த சாத்தான், வகை தேடுகிறான். இப்படிப்பட்ட புத்தகங்களை வாசிப்பவர்கள் தங்கள் கடமைகளைச் செய்ய தகுதியற்றவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் போலி வாழ்க்கை நடத்தி, வேதத்தை வாசித்து பரலோக மன்னாவை புசிக்க ஆசையற்றுப் போகிறார்கள். பலப்பட வேண்டிய மனசு பலமிழந்து, அவர்கள் மனதைக் காத்து, உள்ளத் தோற்றங்களை எழுப்பி கிறிஸ்துவைப் போல் ஜெபிக்கும் பலமும் ஊக்கமுமான ஆவலை அவர்களில் உண்டாக்கும் மாபெரும் சத்தியங்களாகிய கிறிஸ்துவின் ஊழியம், சேவை ஆகியவைகளை ஆராய விடாதபடி மனசு தன் சக்தியை இழந்து போகிறது.CCh 458.3

    பிரசுரமாகும் பெரும் பகுதியான நூல்கள் எரிக்கப்பட்டால், மனசிலும் இருதயத்திலும் செய்யப்படும் பயங்கர வேலையின் கொள்ளை நோய் தடுக்கப்படும். காதற் கதைகளும், மூடத்தனமானதும், இச்சைகளைப் பிறப்பிப்பதுமான கட்டுக் கதைகளும் மட்டுமல்ல, மார்க்க சம்பந்தமான நாவல்களில் ஆசிரியர் தன் சன்மார்க்க படிப்பினையை முடிவுரையாக எழுதும் கதைகளுங்கூட வாசிப்போருக்குச் சாபமாக இருக்கின்றன. கதைப் புத்தகம் முழுவதும் மார்க்கக் கருத்துகள் விரவிக் கிடக்கலாம், மிகவும் வன்மையுடன் ஏமாற்றவும், வசீகரிக்கவும் தக்கதாக அனேகமாக சாத்தான் ஒளியின் தூதனுடைய ஆடையில் வெளிப்படுவான். இந்த நூல்களை வாசித்து பத்திரமாக இருக்கத்தக்க அளவில் எவரும் நல்ல இலட்சியங்களில் ஊன்றக் கட்டப்படவுமில்லை, சோதனைக்கு விலக்காகி விடவுமில்லை.CCh 459.1

    பரிசுத்த பக்கங்களின் அலங்காரத்தை மறைக்கும்படி கட்டுக் கதையை வாசிப்பவர்கள் ஆவிக்குரிய தன்மையை நாசப்படுத்தும் தீமையில் மூழ்கி விடுகிறார்கள். அது ஆரோக்கிய மற்ற கிளர்ச்சியை உண்டாக்கி மனத் தோற்றங்களை கொதிக்கச் செய்து மனதை உபயோகிக்கத் தகுதியில்லாமல் ஆக்கி, ஜெபஞ்செய்வதற்கு ஆத்தும வாஞ்சையைத் தணித்து ஆவிக்குரிய அப்பியாசங்களுக்குத் தகுதியில்லாதபடி செய்து விடுகிறது.CCh 459.2

    நமது வாலிபர் அனேகருக்கு மிக சிரேஷ்ட திறமைகளைக் கடவுள் அருளியிருக்கிறார்; ஆனால் அவர்கள் தங்கள் ஞானமற்ற வாசிப்புகளால் பல ஆண்டுகளாக தேவ கிருபையிலும், நமது விசுவாசத்திற்குரிய காரணங்களைப் பற்றிய அறிவிலும் வளராமல் தங்கள் சக்திகளைத் துர்பிரயோகஞ்செய்து தங்கள் மனசுகளைக் குழப்பிப் பலவீனப்படுத்தியுமிருக்கிறார்கள். கர்த்தருடைய அதி சீக்கிர வருகையை எதிர் நோக்கி, அழிவுள்ளதாகிய இது அழியாமையையும் தரித்துக்கொள்ளும் என்ற மாறுதலை எதிர் நோக்கியும் தவணையின் காலத்திலிருக்கிற அனைவரும் கிரியையில் மிக உயர்ந்த படியில் நிற்க வேண்டும்.CCh 460.1

    என் பிரிய இளம் நண்பர்களே, உள்ளத்தைக் கிளரும் கதைகளின் செல்வாக்கில் உங்கள் சொந்த அனுபவங்கள் எப்படி என்பதுபற்றி கேட்டுக்கொள்ளுங்கள். அப்படிப்பட்டவைகளை வாசித்த பின் வேதத்தை திறந்து ஜீவ வசனங்களை வாஞ்சையோடு உங்களுக்கு வாசிக்க முடியுமா? தேவனுடைய புத்தகம் உங்களுக்கு இனிமையற்றுக் காணப்படவில்லையா? அக் காதல் கதையின் வசீகரம் மனதில் இரைந்து கொண்டிருந்து மனதின் அரோக்கியத்தை நாசப்படுத்தி, நித்தியத்திற்கான முக்கியமும் பக்தி வினயமுமான சத்தியங்களைக் கவனிக்க விடாமல் தடுக்கின்றது.CCh 460.2

    முழுத் தீர்மானத்துடன் எல்லா நாசகர வாசிப்புகளையும் விட்டுவிடு, அது உன் ஆவிக்குரிய தன்மையை பலப்படுத்தாது, ஆனால் அதன் மூலம் உன் மனசுக்குள் நுழையும் கருத்துக்கள் உள்ளத் தோற்றங்களைக் கெடுத்து, இயேசுவையும், அவரது விலை யேறப்பெற்ற கற்பனைகளையும் சிந்தக்கவும் ஆராயவும் மனதைச் செலுத்துவிடாது. தவறான பாதையில் செலுத்தும் ஒவ்வொன்றிலுமிருந்து, மனதைக் காத்துக்கொள், மன சக்திகளைப் பலப்படுத்தாத குப்பைக் கதைகளைப் போட்டு மனதைக் கெடுக்காதே. மனசுக்குக் கொடுக் கப்படும் ஆகாரத்தைப் பொறுத்தே அதன் சிந்தனைகளின் தரமுமிருக்கும். M.Y.P. 271-273.CCh 460.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents