Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பரிசுத்தமாக்கப்படுதலுக்கு உணர்ச்சிகள் மட்டுமே அத்தாட்சிகள் ஆகா

    ஆனந்த உணர்ச்சிகளோ, அல்லது மகிழ்ச்சி குறைவோ ஒருவன் பரிசுத்தமாக்கப்பட்டவன் அல்லது அல்லவெனக் காட்டும் அத்தாட்சியாகாது. திடீரென பரிசுத்தமாக்கப்படுதல் என்ற விஷயமே கிடையாது. மெய்யான பரிசுத்தமாகுதல் தினசரி வேலை, ஜீவன் இருக்கும்வரை அது தொடர்ந்து நடைபெறவேண்டும். தினசரி சோதனைகளோடு போராடி, தங்கள் பாவ சுபாவங்களை மேற்கொண்டு, இருதயத்திலும் ஜீவியத்திலும் பரிசுத்தத்தை நாடுகிறவர்கள் அதைப்பற்றி வானளாவப் பேசுவதில்லை. அவர்கள் நீதியின் மேல் பசி தாகம் கொள்ளுகிறார்கள். பாவம் அவர்களுக்கு மிக பயங்கரமான அக்கிரமமாகத் தோன்றும். S.L. 10.CCh 191.1

    நமது பாவங்கள் நிமித்தம் அவர் நம்மைக் கைவிடுவதில்லை. நாம் தவறி அவர் ஆவியைத் துக்கப்படுத்தலாம். ஆனால் நாம் மனந்திரும்பி, நொறுங்குண்ட இருதயத்தோடு அவரண்டை வரும்போது, அவர் நம்மைப் புறக்கணிப்பதில்லை. நீக்கப்பட வேண்டிய தடைகள் உண்டு. தப்பெண்ணங்கள் பேணப்பட்டு, அகந்தை, சுயதிருப்தி, கோபம், முறுமுறுப்புகள் காணப்படுகின்றன. இவை யாவும் நம்மைத் தேவனிடமிருந்து பிரிக்கின்றன. பாவங்கள் அறிக்கை பண்ணப்பட வேண்டும், இருதயத்தில் கிருபையின் கிரியை ஆழமாய் நடக்க வேண்டும். தங்களைப் பலவீனராக உணர்ந்து அதைரியப்பட்டவர்களும் தேவனுக்கென மிகச் சிறந்த பணியாற்றலாம். ஆனால் அவர்கள் ஓர் உயர்ந்த குறிக்கோளுடன் உழைக்க வேண்டும்; சுயநல நோக்கங்களினால் அவர்கள் பாதிக்கப்படலாகாது.CCh 191.2

    சீர்த்திருத்தங்களுக்குத் தவணை வேண்டுமென்றும், அப்படிச் சீர்த்திருத்தமடைந்தாலன்றி ஆசீர்வாதங்களைப் பெற முடியாதென்றும் சிலர் எண்ணுகிறார்கள். இந்த அருமை யான ஆத்துமாக்கள் இப்பொழுதே தம் வாக்குகளை தேவன் நிறைவேற்றும்படி அவரிடம் உரிமை பாராட்டிக் கேட்கலாம். அவருடைய ஆவியையும் தங்கள் பலவீனங்களில் அவருடைய உதவியையும் பெற அவர்களுக்கு தேவ கிருபை அவசியம்; அல்லவென்றால் அவர்களில் கிறிஸ்தவக் குணம் கட்டப்பட்ட முடியாது. நாம் பாவிகளாக, கதியற்றவர்களாக, உதவி நாடியவர்களாக, நாமிருக்கும் வண்ணமே அவரிடம் வரவேண்டுமென அவர் விரும்புகிறார்.CCh 191.3

    மனந்திரும்புதலும், பாவ மன்னிப்பும், கிறிஸ்துவுக்குள் தேவன் அருளும் ஈவு, பரிசுத்த ஆவியின் ஏவுதலால் மட்டுமே நாம் நமது பாவங்களைக் குறித்து உணர்த்தப்பட்டு, மன்னிப்பு அவசியமென காண்கிறோம். நொறுங்குண்டவர்களல்லாதார் மன்னிக்கப்பட்டார்; தேவ தயவே நம் இருதயத்தை மனஸ்தாபத்திற்கு வழி நடத்துகிறது. அவர் நமது எல்லா பலவீனங்களையும் குறைகளையும் அறிந்தவராகையால் நமக்கு உதவுகிறார்.CCh 192.1

    இருளும் அதைரியமும் நம் ஆத்துமாவை மேற்கொண்டு நம்மைப் பயமுறுத்தும்; ஆனால் நாம் நமது நம்பிக்கையை இழந்துவிடக்கூடாது. உணர்ச்சியோ உணர்ச்சியில்லாமையோ எதானாலும் சரி, நாம் இயேசுவையே நோக்க வேண்டும். நாம் அறிந்த எல்லாக் கடமைகளையும் உண்மையாய்ச் செய்து பின்பு கர்த்தருகென அமர்ந்து காத்திருக்கவேண்டும்.CCh 192.2

    சில சமயங்களில் நாம் அபாத்திரரென்ற சிந்தை நமக்குள் உண்டாகி, நம் ஆத்துமாவில் திகிலை உண்டாக்கும். ஆனால் தேவனோ, நாமோ பரஸ்பரம் மாறிவிட்டோமன்பதற்கு இது அத்தாட்சியாகாது. உள்ளக்கிளர்ச்சியை ஓரளவுக்கு அழுத்தமாக்க நம் மனதைக்கட்டும் எம் முயற்சியும் எடுக்கலாகாது. நேற்றிருந்த சமாதானம் சந்தோஷம் இன்றி நமக்கில்லாது போகலாம்; ஆனால் நாம் ஒளியில் அவரை நம்பினது போலவே இருளிலும் நம்பி, விசுவாசத்தினால் கிறிஸ்துவின் கரத்தைப் பற்றிக்கொள்ள வேண்டும்.CCh 192.3

    வெற்றியடைவோர் பெறவிருக்கும் கிரீடங்களை விசுவாசத்தினால் நோக்கிப்பார். தேவனுக்கென்று தம்முடைய இரத்தத்தினாலே நம்மை மீட்டுக் கொண்ட ஆட்டுக்குட்டுயானவர் பாத்திரர் என ஆரவாரமாய்ப் பாடும் கீதம் கேள்! இக்காட்சிகள் மெய்யென மனத்திற்கோள்.CCh 193.1

    கிறிஸ்துவைப் பற்றியும், மேலுலகைப் பற்றியும் நம் மனது சிந்திக்க இடமளித்தால், கர்த்தருடைய யுத்தங்களை ஆதரிக்க வல்லமையான தூண்டுதல் உண்டாகும். அதி சீக்கிரத்தில் நமக்கு வாசஸ்தலமாக கிடைக்கவிருக்கும் மேல் நாட்டு மகிமைகளைப் பற்றி சிந்திப்பது, அகந்தையையும் உலகப் பற்றையும் தகர்த்தெறியும். கிறிஸ்துவின் அழகுக்கு உலக வசீகரங்கள் ஒன்றுமில்லையென்று தோன்றும்.CCh 193.2

    பவுல் கடைசியாக ரோமைச் சிறையில் அடைப்பட்டு, பரம ஒளியும் சுவாசமுமின்றி, சுவிசேஷ ஊழியஞ் செய்யத்தடைப்பட்டு, மரணம் வரக்காத்திருந்தபோதிலும், அவன் சந்தேகத்திற்கும் கலக்கத்திற்கும் இடங்கொடுக்கவில்லை. பின்னுள்ள சகல யுகங்களிலும் எழுந்த பரிசுத்தவான்களையும், இரத்தச் சாட்சிகளையும் ஊக்கி எழுப்பிய மகா வல்லமையான சாட்சி அவன் சாகுந்தருவாயில் அந்த துக்ககரமான சிறைக்கூடத்திலிருந்து வெளி வந்தது. இப்பக்கங்களில் நாம் கூற முயலும் பரிசுத்தமாக்கப்படுதலின் பலன் தக்க முறையில் விவரிக்கப்பட்டிருக்கிறது: ஏனென்றால், நான் இப்பொழுதேபான பாலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை வீட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன். இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். (2 தீமோ. 4:6-8). S.L. 89-96.CCh 193.3