Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    மனித உணவுக்கான கடவுளின் ஆதித் திட்டம்

    நல்ல உணவுப் பொருட்கள் எவையென அறிய, மனிதனுடைய ஆகாரத்தைப் பற்றிய கடவுளுடைய ஆதித் திட்டத்தை நாம் படிக்க வேண்டும். மனிதனைப்படைத்து, அவனுடைய தேவைகளை அறிகிறவர் ஆதாமுக்கு அவனுடைய ஆகாரத்தை ஏற்படுத்தினார். பின்னே தேவன் இதோ, பூமியின் மே எங்கும் விதை தரும் சகல விதப் பூண்டுகளையும், விதை தரும் கனிமரங்களாகிய சகல வித விருட்சங்களையும் உங்களுக்கு ஆகாரமாய்க் கொடுத்தேன் என்றார். (ஆதி. 1:29.) மனிதன் பாவ சாபத்தின் கீழ் தன் ஆகாரத்திற்கு நிலத்தைப் பண்படுத்த ஏதேனை விட்டுப் போன போது, வெளியின் பயிர் வகைகளை புசிக்க அனுமதி பெற்றான். (ஆதி. 3:18)CCh 577.1

    தானியங்கள், பழங்கள், கொட்டைகள் காய்கறிகள் நமது சிருஷ்டிகரால் நமக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட ஆகாரம். இந்த உணவுகள், கூடுமானவரை இயற்கையான எளிய முறையில் ஆயத்தப்படுத்தபடும் பொழுது, மிகுந்த சத்தும் ஆரோக்கியமும் தருகின்றன. மிகுதியான கலப்பும் கிளர்ச்சியுமுண்டாக்கும் ஆகாரத்தை விட இவை பலமும், தாங்கும் சக்தியும், அறிவுத்திறனையும் அளிக்கும். சுகத்தைப் பேண போதுமான நல்ல சத்துள்ள உணவு அவசியம்.CCh 578.1

    ஞானமாகத் திட்டமிட்டால், சுகத்துக்கேற்ற உண்வுப் பொருட்களை ஏறக்குறைய எல்லா நாடுகளிலும் வாங்களாம். அரிசி, கோதுமை, சோளம், ஓட்ஸ், மொச்சை, பயறு, பருப்பு முதலியன பற்பல விதமாக பக்குவப்படுத்த்ப்பட்டு, பிற நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இவை ஒவ்வொரு பகுதியில் உண்டாகும் பலவித காய்கறிகளோடும், உள் நாட்டு அல்லது பிறநாடுகளிலிருந்து வரும் பழவர்க்கங்களோடும், மாமிச உணவை உபயோகிக்காமல் சத்துள்ள உணவைத் தெரிந்தெடுக்குபடி ஒரு வாய்ப்பை அளிக்கின்றது. அப்பிரிக்காட்ஸ், பீச்சஸ், ஆப்பிள், திராட்சை பழவற்றல்கள், இன்னும் பழவற்றல்கள் எங்கெங்கே குறைந்த விலையில் கிடைக்குமோ அவைகளைப் பலதரப்பட்ட தொழிலாளிகளுக்கு சுகமும் ஊக்கமும் அளிக்க அதிக ஏராளமாய் வழக்கமான ஆகாரமாக உபயோகிக்கலாம். MH 299.CCh 578.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents