Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம்-51

    சுகாதார சீர்திருத்தத்தில் உண்மையாயிருத்தல்

    அனேகர் சுகாதார சீர்திருத்தத்தின் இலட்சியங்களை விட்டுப் பின் வாங்கிப்போனபடியால், அப்பொருள் மீது எல்லா மக்களுக்கும் ஒரு தூது கொடுக்க நான் கற்பிக்கப்பட்டேன்.CCh 598.1

    தமது பிள்ளைகள் கிறிஸ்துவுக்குள் பூரண ஸ்திரி புருஷர்களாக வளர வேண்டுமென்பது தெய்வ நோக்கம். இதைச் செய்ய, அவர்கள் தங்கல் சரீர, ஆத்தும, மன சக்தி ஒவ்வொன்றையும் சரியாக உபயோகிக்க வேண்டும். அவர்கள் மானத அல்லது சரீர பலத்தில் எதையாகிலும் வீணாக்குதல் கூடாது.+CCh 598.2

    ஆரோக்கியத்தைப் பேணுவது அதிக முக்கியம். நமது சரீர ஆவிக்குரிய அபிவிருத்திக்காக ஆகாரத்தில் எளிய முறையைக் கையாள தெய்வ பயத்தோடு படிக்கும்போது, அதுவே மிகவும் சிறந்ததென்று நாம் அறிந்து கொள்வோம்; இதை நாம் பொறுமையுடனே ஆராய்வோமாக. இந்த விஷயத்தில் ஞானமாய் நடந்துகொள்ள நமக்கு அறிவும் நிதானமும் வேண்டும். இயற்கைப் பிரமாணங்களை எதிர்க்காமல் அவைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். மிதமிஞ்சிய ஆரோக்கிய மற்ற ஆகாரத்தை ஆயத்தம் செய்து, தேயிலை, காப்பி, மாமிச உணவு முதலியவைகளை உபயோகிப்பதாலுண்டாகும் தீமைகளைப்பற்றி உபதேசம் பெற்றவர்களும், பலியினால் தேவனேடு உடன்படிக்கை பண்ணத் தீர்மானித்தவர்களும் ஆரோக்கியமல்லாதவையென தாங்கள் அறிந்த போஜனத்தை அவர்கள் தொடர்ந்து உபயோகிக்க மாட்டார்கள். நன்மைக் கேதுவல்லாதவைகளே உபயோகிப்பதில் சுய வெறுப்பு நடை முறைக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றும், போஜனப்பிரியம் அகற்றப்பட வேண்டுமென்றும் கடவுள் எதிர் பார்க்கிறார். அவருடைய பிள்ளைகள் அவருக்கு முன் பூரணமாக்கப்பட்ட ஒரு ஜனமாக நிற்கு முன், இப்படிப்பட்ட ஒரு வேலை செய்யப்பட வேண்டும்.CCh 598.3

    தேவனுடைய மீதியான மக்கள் மனந்திரும்பின ஒரு ஜனமாக இருக்க வேண்டும். இந்தத் தூதைக் கொடுப்பதின் பயனாக ஆத்துமாக்கள் மனந் திரும்பி பரிசுத்தமடைய வேண்டும். இந்த இயக்கத்தில் நாம் பரிசுத்த ஆவியின் வல்லமையை உணர வேண்டும். இது ஆச்சரியமும் திட்டமுமான ஒரு தூது; அதைப் பெற்றுக்கொள்ளுகிறவனுக்கு அதுவே சகலமுமாயிருக்க வேண்டும், அது உரத்த சத்தமாய் கூறி அறிவிக்கப்பட வேண்டும். காலம் முடியும் வரை, இத்தூது முன்னேறும் முக்கியத்துவமுடையதாய்ப் போகும்படி, நாம் உண்மையும், நிலையான விசுவாசமும் உடையவர்களாயிருக்க வேண்டும்.CCh 599.1

    விசுவாசிகள் என்று சொல்லிக்கொள்ளுகிற சிலர் சாட்சி யாகமங்களில் சொல்லப்பட்ட சில பாகங்களைத் தேவனுடைய தூதாக ஏற்றுக்கொண்டு, தங்கள் சுகபோக விருப்பங்களைக் கண்டிக்கிற மற்றப் பாகங்களைப் புறக்கணிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் சபையின் நலத்துக்கும், தங்கள் நலத்துக்கும் விரோதமாக வேலை செய்கின்றனர். ஒளி நம்மிடத்திலிருக்கும் போது, நாம் வெளிச்சத்தில் நடப்பது அத்தியாவசியம். ஆரோக்கிய சீர்திருத்தத்தில் நம்பிக்கையுண்டு என்று கூறுவோர், அனுதின வாழ்க்கை அனுபவத்தில் அதன் இலட்சியங்களுக்கு எதிராக வேலை செய்து, தப்பெண்ணங்களைப் பதியச் செய்து, தங்கள் சொந்த ஆத்துமாவுக்கே தீங்கை விளைவிக்கிறார்கள்.CCh 599.2

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents