Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    பெற்றோரே, பிள்ளைகளைக் கிறிஸ்துவினிடமாக நடத்துங்கள்

    பிள்ளைகள் சரியான காரியத்தைச் செய்வதற்கு விருப்பமுடையவர்களாயிருக்கலாம். பெற்றோர், பாதுகாவலருக்கு கீழ்ப்படித்திருக்கவும் அவர்களிடம் பட்சமுடையவர் களாயிருக்கவும் தங்கள் இருதயங்களில் எண்ணமுள்ளவர்களாயிருக்கலாம். என்றபோதிலும் அவர்களுக்கு உதவியும் ஊக்கமும் அவசியமாகும். அவர்கள் நல்ல தீர்மானங்களைச் செய்யலாம். ஆயினும் அவர்களுடைய இலட்சியங்கள் மார்க்க அப்பியாசத்தினால் பலமடைந்து, அவர்களுடைய ஜீவியம் கிருபையினால் புதுப்பிக்கப்பட்டா லன்றி, அவர்கள் இலக்கை அடைவதற்குத் தவறுவார்கள்.CCh 517.1

    தங்களுடைய பிள்ளைகளின் இரட்சிப்பின் பொருட்டு பெற்றோர் முன்னிலும் இரு மடங்கு முயற்சி செய்ய வேண்டும்; உண்மையுடனே அவர்களுக்குப் போதனை செய்ய வேண்டும்; ஆயினும் தங்களால் இயன்றவாறு தாங்களே கல்விப் பயிற்சியைத் தேட அவர்களை விட்டு விடக்கூடாது. நன்மையையும் தீமையையும் ஒன்றாகக்கற்றுப் பின்னொரு காலத்தில் நன்மையே மேற்கொள்ளும், தீமைய்ன் செல்வாக்கு அற்றுப் போகும் என்ற எண்ணத்திலும் நாம் இருந்துவிடக்கூடாது. நன்மை வளருவதைப் பார்க்கிலும் தீமை துரிதமாக வளர்ந்து பெருகும்.CCh 517.2

    பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் முடிவு பரியந்தம் கிறிஸ்தவர்களாயிருக்கும்படி இளமையிலே அவர்காளுக்குப் பயிற்சி கொடுங்கள். உங்கள் முயற்சிகளை அனைத்தும் அவர்கள் இரட்சிப்பின் பொருட்டே இருப்பதாக. தேவனுடைய இராஜ்யத்தில் பிரகாசிக்கும் அருமையான இரத்தினங்களாகப் பதிக்கப்படுவதற்கு அவர்கள் உங்களுடைய கரங்களில் ஒப்புவிக்கப்பட்டனர் என்று எண்ணி நடந்துகொள்ளுங்கள். அழிவின் படுகுழியில் அவர்கள் விழத்தக்கதாக அவர்களுக்கு நித்திரை மயக்கம்மேற்படும் விதமாக அவர்கள் இன்னமும் புத்தியறியாததாலும், தங்கள் பாவங்களை விட்டு மனந்திரும்பி கிறிஸ்துவானவரை அறிக்கையிடுவதற்கு வயதாகிவிடாததாலும் அவர்கள் காரியங்களைக் குறித்து அவர்களிடம் நீங்கள் கணக்கு கேட்க வேண்டியதில்லை என்று தப்பான எண்ணமுடையவர்களாக இருந்துவிடாதீர்கள்.CCh 518.1

    பெற்றோர் இரட்சிப்பின் திட்டத்தைப் பிள்ளைகளுடைய முதிராத மனதும் அறிந்து கொள்ளத் தக்கதாக சுருங்கச் சொல்லி விளங்க வைக்கவேண்டும். எட்டுப்பிராயம, பத்துப் பிராயம் அல்லது பன்னிரண்டு பிராயமுடையவர்களாகிய பிள்ளைகளுக்கு அவர்களுடைய சொந்த பய பக்தியைக் குறித்துப் போதனை செய்யலாம். வருங்காலத்தில் வயது நிறைவகையில் மனந்திரும்பி சத்தியத்தை விசுவாசித்துக் கொள்ளலாம் என்று அவர்களிடம் பேசாதிருங்கள். சரியாகப் போதனை செய்தால், மிக்க இள வயதினரும் பாலகராயிருக்கிற தங்கள் நிலையையும் கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்படை வதையும் குறித்து சரியான கருத்துக்களை உடையவராவர். தேவ ஊழியர்கள் பொதுப்படையாக பிள்ளைகள் இரட்சிப்படைவதைக் குறித்து அசட்டையாகவும், அவர்கள் மத்தியில் தனியாள் ஊழியஞ் செய்யாதும் இருந்து வருகின்றனர். பிள்ளைகளின் மனதில் பதியத்தக்கதாக இவற்றை எடுத்துக் கூறத் தக்கதான பொன்னை சந்தர்ப்பங்கள் பயன் படுத்தப் படுவதில்லை. 1T 396-400.CCh 518.2

    தந்தையாரே, அன்னையாரே, உங்கள் மீது சுமந்திருக்கும் பொறுப்பின் முக்கியத்தை உணருகின்றீரா? உங்கள் பிள்ளைகளை அஜாக்கிரதையான, ஒழுக்கக் கேடான பழக்கங்களிலிருந்து பாதுகாக்கும் அவசியத்தை உணருகிறீர்களா? தங்கள் குணத்தின் மீது நற் செல்வாக்கு உடையதாக விளங்கும் சகவாசங்களை வைத்துக்கொள்ள மாத்திரம் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள். மாலை வேளையில் அவர்கள் எங்கு இருப்பார்கள், என்ன செய்வார்கள் என்று அறியக்கூடுமானாலொழிய, மற்றபடி அவர்களை மாலையில் வீட்டை விட்டு வெளியே புறப்படுவதற்கு அனுமதிக்க வேண்டாம். சன்மார்க்க சுத்தத்தின் அவசியத்தை அவர்களுக்குப் போதியுங்கள். பிரமாணத்தின் மேல் பிரமாணமும். இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக அவர்களுக்குப் போதனை செய்ய நீங்கள் தவறியிருந்தால், உடனே உங்கள் கடமையைச் செய்ய ஆரம்பியுங்கள். உங்கள் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு, நித்தியத்திற்கென்று, தற்காலத்திலே கிர்யை நடப்பியுங்கள். உங்கள் பிள்ளைகளைக் கவனியாமற்விட்ட குற்றத்தை அறிக்கை செய்யாமல் மற்றுமொரு நாளைக் கடத்தி விடாதீர்கள். கடவுள் நியமித்த உங்களுடைய வேலையை இப்பொழுதே செய்யப் போவதாக அவர்களிடம் தெரிவியுங்கள். சீர்திருத்தம் செய்வதில் அவர்களும் ஒத்துழைக்குமாறு கேளுங்கள். இழக்கப்பட்ட காலத்தை மீட்டுக்கொள்ளுமாறு கேளுங்கள். இழக்கப்பட்ட காலத்தை மீட்டுக் கொள்ளுவதர்குக் சுறுசுறுப்பாக வேலை செய்யுங்கள். வவோதிக்கேயா சபையின் நிலையில் இனியொருபோதும் இருந்து வராதீர்கள். குடும்பங்கள் ஒவ்வொன்றும் தங்கள் தனிப் பண்புகளை காண்பிக்கப்படும். உங்கள் சொந்த வீட்டிலே சபையின் சீர்திருத்தம் துவங்குவதாக. 7T 66, 67.CCh 519.1