Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    தேவனால் கனம் பெறுவோரை அவர் பரீட்சிக்கிறார்

    நாம் துன்பங்களைச் சகிக்கும்படி அழைக்கப்படுவதினால், கர்த்தராகிய இயேசு ஏதோ தாம் நம்மில் விருத்தி செய்ய விரும்பும் ஓர் உயர்ந்த காரியத்தைக் காண்கிறார் என்று காட்டுகிறது. அவரை மகிமைப்படுத்தும் யாதாமொனௌ நம்மில் காணப்படாவிடில், நம்மைச் சுத்தப்படுத்த அவர் நேரத்தைச் செலவிடமாட்டார். முட்செடிகளைக்கத்தரிக்கும்படி நாம் விசேஷித்த சிரமம் எடுப்பதில்லை. ஒன்றுக்கும் உதவாதவைகளை அவர் தம் உலைக்களத்தில் போடுவதில்லை விலையேறப்பெற்ற தாதுப்பொருளைத்தான் அவர் பரீட்சிக்கிறார். 7 T. 214.CCh 187.1

    பொறுப்பான பதவிகளில் வைக்கும்படி அவர் திட்டமிட்டிருப்பவர்களை அவர்கள் தங்கள் மறைவானக் குறைகளைக் காணும்படி தம் இரக்கத்தால் வெளிப்படுத்துகிறார்; இதனால் அவர்கள் தங்கள் சொந்த இருதயங்களின் சிந்தைகளையும் உள்ளக் கிளர்ச்சிகளையும் நுட்பமாக ஆராய்ந்து தவறுகளைக் கண்டுகொள்ளவும் அப்படி வெளிப்படுத்துகிறார். இப்படியாக அவர்கள் தங்கள் மனப்பான்மைகளை மாற்றியமைத்து, ஆசாரங்களைப் பண்படுத்திக்கொள்ள ஏதுவாகிறது. தேவன் தமது கடாட்சத்தால், மனிதர் தங்கள் சன்மார்க்க சக்திகளைப் பரிசீலனைச் செய்யத்தக்க இடங்களில் அவர்களை வைத்து, அவர்களுடைய செயல்களின் நோக் கத்தை வெளிப்படுத்துகிறார்; அதனால் அவர்கள் தங்களிலுள்ள தவறுகளைக் களைந்து நற்காரியங்களை விருத்திபண்ண ஏதுவாகிறது. தேவன் தம் ஊழியர்கள் தங்கள் உள்ளத்தின் சன்மார்க்க சாதனங்கள் பற்றி அறிந்திருக்க வேண்டுமென விரும்புகிறார். இதைக் கொண்டுவரும்படி, உபத்திரமாகிய அக்கினி அவர்களைச் சுத்திசெய்யும்படி அனுமதிக்கிறார். ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப் போலவும், வண்ணருடைய சவுக்காரத்தைப் போலவும் புடமிடுவார். மல்கி. 3:2,3. 4T. 85.CCh 187.2

    படிப்படியாக தேவன் தம் பிள்ளைகளை வழி நடத்துகிறார். அவர்கள் இருதயங்களிலிருப்பதை வெளிப்படுத்தும்படி பற்பல நிலைகளில் அவர்களைக் கொண்டு விடுகிறார். சிலர் ஒரு காரியத்தைச் சகிக்கிறார்கள். ஆனால் வேறொன்றில் விழுந்து போகிறார்கள். முன்னேறும் ஒவ்வொரு குறிகளிலும் இருதயம் சற்று அதிகமாய்ப் பரீட்சிக்கப்படுகிறது. இந்த நேர் முறையான வேலை தங்கள் மனதுக்குப் பிடித்தமில்லாதிருந்தால், தாங்கள் கர்த்தருடைய வாயிலிருந்து வாந்திபண்ணிப் போடப்படாத படிக்கு, ஜெயங்கொள்ளும்படி தங்களுக்கு ஏதோ ஒரு வேலையிருக்கிறதென்பதை அது உணர்த்திக்காட்ட வேண்டும். 1T. 187.CCh 188.1

    கர்த்தருடைய வேலையைச் செய்ய திறமை நமக்கில்லை என உணர்ந்து, அவருடைய ஞானத்தால் வழி நடத்தப்பட்ட நாம் நம்மை அவருக்கு ஒப்புவிக்கும்போது, தேவன் நம்மைக் கொண்டு வேலை செய்யக்கூடும். நம் ஆத்துமாவைத் தன் னலமின்றி வெறுமையாக்கினால், அவர் நம் தேவைகளையெல்லாம் நிறைவாக்குவார். 7T. 213.CCh 188.2