Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    அஸ்தமன ஆராதனை

    ஓய்வுநாளை பெயரளவில் ஆசரிப்போர் எண்ணுவதர்கும் அதிகமான பரிசுத்தம் ஓய்வு நாளில் அடங்கியிருக்கிறது. கர்த்தருடைய ஓய்வுநாளை எழுத்தின்படியாகிலும் ஆவியின்படி யாகிலும் கற்பனையில் கண்டபடி ஆசரியாதவர்களால் கர்த்தர் மிகவும் கனவீனமடைகிறார். ஓய்வுநாள் ஆசரிப்பில் ஒரு சீர்திருத்தம் செய்யும்படி அவர் தம்மை அழைக்கிறார். சூரிய அஸ்தமனத்திற்கு முன் குடும்ப அங்கத்தினர்கள் கூடி வேத வசனம் வாசித்து, பாடி, ஜெபிக்க வேண்டும். இக்காரியத்தில் சீர்திருத்தம் தேவை; ஏனெனில் அநேகர் அசட்டையாக இருக்கிறார்கள். நாம் தேவனிடத்திலும் ஒருவருக்கொருவரும் தப்பிதங்களை அறிக்கை செய்யவேண்டும். கர்த்தர் ஆசீர்வதித்து பரிசுத்தப் படுத்திய அந்நாளை குடும்பத்திலுள்ள யாவரும் கனப்படுத்தும்படியாக புது முயற்சியுடன் விசேஷித்த ஒழுங்குகள் செய்யவேண்டும்.CCh 91.1

    குடும்ப ஜெபத்தில் சிறுவர் பங்கு பெறட்டும். எல்லாரும் அவரவர் வேதாகங்களைக் கொண்டுவந்து ஒன்றிரண்டு வசனங்களை வாசிக்கட்டும். எல்லாருக்கும் தெரிந்த ஒரு பாட்டைப் பாடவேண்டும், பின்பு ஜெபிக்க வேண்டும். இதற்கு கிறிஸ்துவே மாதிரி தந்துள்ளார். கர்த்தருடைய ஜெபம் ஏதோ ஒரு பாடமாக சொல்லுவதற்காக கொடுக்கப்பட வில்லை. ஆனால் நம்முடைய ஜெபங்கள் எளிதும் ஊக்கமுள்ளதும், பொருள் செறிந்ததாகவுமிருக்க வேண்டும் என்பதற்கு அதுஓர் எடுத்துக் காட்டாகும். எளிய மன்றாட்டின் மூலமாக உன் தேவைகளைத் தேவனிடம் எடுத்துக் கூறி, அவரது இரக்கங்களுக்காக நன்றி செலுத்து. உன் வீட்டிலும் இருதயத்திலும் வரை வாஞ்சையுடன் விருந்தினராக ஏற்றுக்கொள். CCh 91.2

    குடும்பத்தினருக்கு சம்பந்தமில்லாதவைகளைப் பற்றிய நீண்ட ஜெபங்கள் தகுதியானவையல்ல. ஜெபவேளை சிலாக்கியமும் ஆசீர்வாதமுமாய் இருப்பதற்குப் பதிலாக அவை அதனை சோர்வுள்ளதாக்கும், ஜெப வேளை இன்பமும் எழுப்புதலுமாயிருக்கட்டும். ஓய்வுநாள் முடிவில், சூரிய அஸ்தமனத்தின் போது, துதியின் பாடலும், ஜெபிக்கும் சத்தமும் பரிசுத்த நேரத்தின் முடிவை சுட்டிக்காட்டட்டும்; பின்னும், தொடர்ந்து வருகிற வாரத்தின் வேலை கவலைகளுக்காக தேவ பிரசன்னத்தை மன்றாடி அழைக்கட்டும்.CCh 92.1

    கர்த்தருக்கென்று ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பதே நித்திய இரட்சிப்பு என கருதப்படுகிறது. என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 1 சாமு. 2:30. 6T, pp. 353-359.CCh 92.2