Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வெற்றியின் நிச்சயம்

    நாம் இக் காலத்தில் செய்யும் ஊழியமானது மனதிலும் இருதயத்திலும் ஆத்துமாவிலும் ஆழந்து பதியத்தக்கதாக நான் ஊக்கமுடனே ஜெபிக்கிறேன். தொல்லைகள் அதிகமாகும். ஆயினும், தெய்வத்தை நம்புகிறவர்களாகிய நாம் ஒரு வருக்கொருவர் ஊக்கம் அளிப்போமாக. கொடியை நாம் தாழ்த்தாமல், விசுவாசத்தை துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கினவர்களாய் உயர்த்திப்பிடிப்போமாக. இரவு வேளைகளில் எனக்கு நித்திரை வராமலருக்கும் பொழுது நான் என்னுடைய இருதயத்தில் பிரார்த்தனை செய்கிறேன். அப்பொழுது அவர் என்னைப் பலப்படுத்தி, உள் நாட்டிலும் வெளி நாட்டிலுமிருக்கிற தமது ஊழியர்களுடனே தாம் இருப்பதாக உறுதியளிக்கிறார். இஸ்ரவேலின் தெய்வம் தமது ஜனத்தை இன்னமும் வழி காட்டி நடத்துவதையும், இன்னமும் முடிவு வரைக்கும் அவர்களுடனே அவர் இருப்பார் என்பதையும் நான் உணரும் பொழுது ஊக்கமும் ஆசீர்வாதமும் அடையப் பெறுகிறேன்.CCh 754.2

    மூன்றாம் தூதனுடைய தூதை அதிகமான திறமையுடனே நாம் கூறியறிவிக்க வேண்டுமென்று கர்த்தர் விரும்புகின்றார். சகல யுகங்களிலும் தம்முடைய ஜனத்திற்கு அவர் வெற்றிகளை அளித்திருப்பது போலவே, இந்த யுகத்திலும் தம்முடைய சபைக்கென்று தாம் கொண்டிருக்கும் நோக்கங்களை வெற்றியுடனே நிறைவேற்றுவதற்கு அவர் வாஞ்சையாய் இருக்கிறார். விசுவாசமுடைய தம்முடைய பரிசுத்த வான்கள் ஒன்றுபட்டு, அதிக பலமடைந்து விசுவாசமும் நிச்சயமும் சத்தியத்தின் பேரிலும் தம்முடைய நீதியான ஊழியத்தின் பேரிலும் நம்பிக்கையுடையவர்களாக நாம் முன்னேறிச் செல்ல வேண்டுமென்று அவர் கட்டளையிடுகின்றார். கடவுளுடைய திரு வசனத்தின் இலட்சியங்களைப் பொருத்த் மட்டிலும் நாம் கற்பாறை போன்ற உறுதியுடன் நின்று, தெய்வம் நம்முடனே இருந்து, ஒவ்வொரு புது அனுபவத்தையும் நாம் சந்திப்பதற்கு பலமளிக்கின்றார் என்று நினைவில் கொள்ள வேண்டும். நாம் கர்த்தருடைய நாமத்தினாலே பலத்தின் மேல் பலம் அடைந்து முன்னேறிச் செல்லத்தக்கதாக நீதியின் இலட்சியங்களை நம்முடைய வாழ்விலே நாம் நிலைப்படுத்த வேண்டும். நம்முடைய ஆதி அனுபவத்திலிருந்து இந் நாள் வரைக்கும் தெய்வ ஆவியின் போதனையினாலும் அங்கிகாரத்தினாலும் ஆதரவுடையதாக விளங்கும் நம்முடைய விசுவாசத்தை மிகவும் புனிதமாக எண்ணி நாம் காத்துக்கொள்ள வேண்டும். கற்பனைகளைக் கைக்கொள்ளுகின்ற தம்முடைய ஜனத்தின் மூலமாக கர்த்தர் நடப்பித்து வரும் ஊழியத்தை நாம் மிகவும் அருமையாகப் பேணிக்காப்பாற்ற வேண்டும். காலப் போக்கில் அவ்வூழியமானது அவருடைய கிருபையின் வல்லமையாலே அதிகப் பலமும் திறமையுமுடைதாக விளங்கும். மந்தாரப்படுத்துவதற்கும் தேவனுடைய ஜனத்தின் தீர்க்க திருஷ்டியை இருட்டடிப் பதற்கும் அவர்களுடைய திறமையின் பெலனை குறைப்பதற்கும் சத்துரு வகை தேடுகின்றான். தெய்வ ஆவியானவர் வழிகாட்டுகிற பிரகாரமாக அவர்கள் ஊழியஞ் செய்வார்களேயாகில், பாழாய்க் கிடக்கிற ஸ்தலங்களைக் கட்டுவதற்கு வாசல்களை அவர் அவர்களுக்குத் திறப்பார். அவர்களுடைய அனுபவமானது பரத்திலிருந்து வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் கர்த்தர் இறங்கி வந்து, தமக்கு உண்மையாய் இருந்தவர்கள் பேரில் தமது முடிவான வெற்றியின் முத்திரையைத் தரிக்குமட்டாக இடைவிடாத வளர்ச்சியை அடையும்.CCh 755.1

    நமக்கு முன்பாக விருக்கின்ற ஊழியமானது மனிதனின் சகல சக்திகளையும் உயிரடையச் செய்யும். அதை நடப்பிப்பதற்கு பலத்த விசுவாசமும் நீங்காத விழிப்பும் தேவையாயிருக்கின்றது. அவ்வப்பொழுது நாம் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்கள் இதயத்தை மிகவும் தளரச் செய்யும். ஊழியத்தின் பரிமாணமே நம்மைத திகைப்படையச் செய்யும். என்ற போதிலும் கடவுள் துணைகொண்டு அவருடைய ஊழியக்காரர் முடிவாக வெற்றியுறுவர். ஆகையால் உங்கள் முன்பாக இருக்கும் உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்து போகாதிருக்க வேண்டிக்கொள்கிறேன். எபே. 3 : 13. இயேசுவானவர் உங்களுடனே இருப்பார். தம்முடைய பரிசுத்த ஆவியினாலே உங்களுக்கு இருப்பார். தம்முடைய பரிசுத்த ஆவியினாலே உங்களுக்கு வழியை ஆயத்தம் செய்து. அவர் உங்களுக்கு முன்னே செல்லுவார். ஒவ்வொரு இக்கட்டிலும் அவரே உங்களுக்கு உதவுவார்.CCh 756.1

    “நாம் நினைக்கிறதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின் படியே நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய் தலைமுறை தலைமுறைக்கும் சதா காலங்களிலும் மகிமை உண்டாவதாக ஆமென்.” எபே. 3: 20, 21. 3TT 439-441CCh 756.2

    சமீப காலத்தில் இராத் தரிசனத்திலே எனக்கு முன்பாகக் கடந்து சென்ற சாட்சிகள் என் மனதில் ஆழமாய் பதிந்தன. ஒரு பெரிய இயக்கம் தோன்றினது. ஆவிக்குரியபுத்துயிர் அளிக்கும் ஊழியம் அனேக இடங்களில் முன்னேறியது. தெய்வ அழைப்பிற்குச் செவி கொடுத்து நம்முடையவர்கள் வரிசையிலே வந்தனர். என் சகோ தரரே, கர்த்தர் நம்மடத்திலே பேசுகின்றார். நாம் அவருக்குச் செவி கொடுப் போமாக. தங்களுடைய கர்த்தருடைய வருகைக்காகக் காத்திருக்கிறவர்களைப் போலவே, நம்முடைய விளக்குகளை நாம் ஆயத்தப்படுத்துவோமாக. வெளிச்சத்தை நாம் வீசுவதற்கு செயல் புரியவும் காலம் இதுவே.CCh 756.3

    “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்ன வெனில் நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பிற்கு பாத்திரவான்களாக நடந்து மிகுந்த மனத் தாழ்மையும், சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய் அன்பினால் ஒருவரை யொருவர் தாங்கி சமாதானக் கட்டினால் ஆவியின் ஒரு மையைக்காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரைதயாய் இருங்கள் .” எபே. 4:1 -3. 3TT 441, 442.CCh 757.1