Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    இயற்கையைத் தேவனாக்கும் சாத்தானின் திட்டம்

    திடப்பொருள் பிரமாணம், இயற்கைப் பிரமாணம் இவைகளைப் பற்றி பேசும் பொழுது, அனேகர் தேவனுடைய நேரடியானதும் தொடர்ந்து நடைபெறுவதுமான கிரியையைக் காணத் தவறி விடுகிறார்கள். இயற்கைத் தன்னிலுள்ள சக்தியைக்கொண்டு தன் எல்லைக்குள் தன்னில் தானே கிரியை செய்கின்றது என்றும், இயற்கை தேவனின்று தனிப்பட்ட்தாக அங்ஙனம் கிரியை செய்கிறது என்றும் போதிக்கிறார்கள். அவர்களது மனதில் இயற்கைக்கும் தெய்வீகத்திற்கும் இடையே திட்டமான வேற்றுமை இருப்பதாக எண்ணுகின்றனர். இயற்கையானதென்பதை சாதாரண காரணங்களாக, தேவனுடைய வல்லமையினின்று தொடர்பற்றதாக எண்ணுகின்றனர். ஜடப்பொருளுக்கு விசேஷித்த சக்தி இருப்பதாகச் சொல்லி, இயற்கையைக் கடவுளாக்கி விடுகின்றனர். கடவுள் தாமே குறுக்கிடாத அளவில் மாறா பிரமாணப்படி இயங்க ஜடப்பொருள் ஒரு குறிப்பிட்ட நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது என்றும், இயற்கைக்குக் குறிப்பிட்ட சக்திகள் வழங்கப்பட்டு இயற்கை விதிகளுக்கு கீழ்ப்பட்டிருக்கிறது என்றும், அது ஆதியில் கட்டளையிடப்பட்ட தன் கிரியைத் தொடர்ந்து நடப்பிக்கும்படி விடப்பட்டிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.CCh 685.1

    இது பொய்யான விஞ்ஞானம். இதை ஆதரிப்பதற்கான சான்று வேததிதில் இல்லை. தேவன் தமது பிரமாணங்களை ஒன்றுமில்லையாக்குவதில்லை. அவைகளைக்கொண்டு அவர் சதா கிரியை செய்கிறார். அவைகள் அவரது ஆயுதங்கள். தேவனுடைய இயற்கைப் பிரமாணங்கள் தம்மில் தாமே கிரியை செய்பவை அல்ல. தேவன் நித்திய காலமாக இயற்கையை நடப்பிக்கிறார். அவர் விருப்பப்படி செய்யும் தொழிலாளியாக இயற்கை இருக்கிறது. சர்வ ஞானமுள்ள ஒருவர் அவரது கரத்தின் கிரியைகளிலெல்லாம் செயல் புரிந்து, தமது சித்த்த்தை நிறைவேற்றி வருகிறார் என இயற்கை தனது கிரியைகளில் சாட்சி கூறுகின்றது. தன்னில் தானே கொண்டுள்ள சக்தியினால் பூமி சூரியனைச் சுற்றி வந்து, ஆண்டுதோறும் தன் பலனைத் திரளாக கொடுத்துக்கொண்டு வருகிறது என்றல்ல; சர்வ வல்லவரின் கரம் சதாகிரியை செய்து பூமியை அதன் கதியில் வழி நடத்துகின்றது. பூமி அதன் நிலையிலேயே இருந்து தன்னைச் சுற்றி வருவது தேவனுடைய வல்லமை வினாடி தோறும் அதை இயங்கச் செய்வதினாலேயே.CCh 686.1

    மானிட சரீரமாகிய யந்திரம் பூரணமாக ஆராய்ந்து அறிந்து கொள்ளக்கூடாத்தாக இருக்கிறது. அதன் இரகசியங்கள் மிகுந்த அறிவாளியையும் மலைக்கச் செய்கின்றன. ஒரு முறை ஆரம்பித்து வைக்கப்பட்டதால், மானிட யந்திரம் தொடர்ந்து இயங்கி தன் வேலையைச் செய்து, நாடி துடித்து சுவாசம் உள் சென்று வெளி வருகிறதென்பது அல்ல; நாம் தேவனுக்குள் பிழைக்கிறோம், அசைகிறோம் எல்லாக் காரியங்களையும் செய்கிறோம். ஒவ்வொரு பேச்சும், இருதயத்துடிப்பும் சதா இயங்கும் தேவனுடைய வல்லமைக்கு இடையறா சாட்சியாகும்.CCh 686.2

    இயற்கையின் வாயிலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும் யேகோவாவின் இரகசியங்களை அதிக புத்திகூர்மையுடையவர்களெவரும் அறிந்துகொள்ள முடியாது. தெய்வீக ஆவியினால் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு மகாப் படிப்பாளி தானும் பதில் கூற முடியாது. நாம் விடை கொடுக்கும் வண்ணம் இக் கேள்விகள் கேட்கப்படாமல், தேவனுடைய ஆழ்ந்த இரகசியங்களைக் கவனிக்க நமது ஞானம் குறைவுள்ளது என போதிக்கப்படவும், அறிவுக் கெட்டாத அனேக காரியங்கள் நம்மைச் சூழ அன்றாட வாழ்க்கையில் காணப்படுகின்றதென்பதைக் கவனிக்கவும் அழைக்கப்படுகின்றோம். தேவனுடைய நியாயங்களையும் திட்டங்களையும் நாம் கண்டறிய முடியாது அவர் ஞானம் ஆராய்ந்து முடியாத்து. 8T 259-261.CCh 687.1

    இங்கு ஆரம்பமாகும் கல்வி இந்த ஜீவியத்தில் முடிவடைவதில்லை. நித்திய காலமாக அது நீடித்து, சதா வளர்ச்சியடைவதாகவும் ஒரு போதும் முடிவடையாத்தாகவும் இருக்கிறது அனுதினமும் நமது மனதுக்குப் புதிய அழகுடன் தேவனுடைய அற்புதமான கிரியைகளும் சிருஷ்டித்து சமஸ்த உலகையும் தாங்கும் அவரது அற்புத வல்லமையின் அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. சிங்காசனத்திலிருந்து பிரகாசிக்கும் ஒளியில் இரகசியங்கள் வெளியரங்கமாகும் முன்னொரு போதும் விளங்கிக்கொள்ளாதவைகள் மிகவும் எளிதில் விளங்கும். அது கண்டு ஆத்துமா வியப்படையும். 8T 328.CCh 687.2