Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    உடை மோஸ்தரின் செல்வாக்கு

    ஆடை மோகம் சன்மார்க்கத்திற்கு அபாயம் உண்டு பண்ணி அடக்கமும் அமைந்த புத்தியுமுடையவளான கிறிஸ்தவப் பெண்ணிடம் நேர் மாறான தன்மையை உண்டு பண்ணுகின்றது.CCh 486.1

    பகட்டான விலையுயர்ந்த ஆடை அதை அணிந்திருப்பவரின் உள்ளத்தில் இச்சைக்கு தூபம் போட்டு அதைப் பார்க்கிறவரின் இருதயத்தில் கீழ்த்தரமான இச்சைகளை தூண்டுகின்றது. மேட்டிமையிலும் பகட்டு ஆடை அணிவதிலும் முன்னரே ஈடுபாடு உண்டாகி பின்னால் குண நலம் கேடடைகின்றதை கடவுள் அறிகின்றார். நன்மை செய்ய வேண்டுமென்கிற இருதயத்தின் ஆசையை பகட்டாடை அவித்துப் போடுகின்றது. 4T. 645.CCh 486.2

    எளியதும் சாதாரணமானதும் போலித்தன்மையில்லாததுமான ஆடையே என்னுடைய வாலிப சகோதரிகளுக்கு நல்ல சிபாரிசாக அமையும். எளிய ஆடை அணிந்து அவ்விதமாக நடந்து கொள்ளுவதின் மூலமாகவே உங்கள் வெளிச்சம் மிகவும் நன்றாகப் பிரகாசிக்கச் செய்யலாம். நித்தியமானவற்றுடனே இவ்வுலகின் காரியங்களை ஒப்பு நோக்கி, சரியான மதிப்பையே உலக காரியங்களுக்கு அளித்திருப்பதாக உங்கள் நடத்தையால் நீங்கள் விளக்கலாம். 3T. 376.CCh 486.3

    விசுவாசிகளல்லாதவர்கள் மீது தங்களுக்குச் செல்வாக்கு உண்டு பண்ணுவதற்காக அனேகர் அவர்களைப் போன்றே ஆடை திரிக்கின்றனர். ஆயினும் அவர்கள் பெருந்தவறு செய்கின்றனர். மெய்யான இரட்சிப்புக் கேதுவான செல்வாக்கை அவர்கள் தேடுவார்களாகில், அவர்கள் தங்கள் விசுவாசத்திற்கேற்ப நீதியான கிரியைகளை நடப்பித்து வாழ்ந்து கிறிஸ்தவருக்கும் உலக மனுஷருக்கும் இருக்கும் பேதம் விளங்கச் செய்வார்கள். பேசும் வார்த்தைகளும் உடுத்தும் ஆடையும் கிரியைகளும் தேவனுக்கென்று சாட்சி பகருவதாக. அவ்வாறு செய்யும் பொழுது சூழவிருப்போர் மீது புனித செல்வாக்கு பிரகாசித்து இவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்கள் என்று அவிசுவாசிகளும் அறிவர். சத்தியத்தின் சார்பில் தங்கள் செல்வாக்கு விளங்க வேண்டுமென்று யாராவது விரும்பினால் தங்கள் விசுவாசத்திற்கிசைவாக வாழ்ந்து தாழ்மையான இயேசுவின் மாதிரியின்படியே தாங்களும் நடப்பார்களாக. 4T. 633, 634.CCh 487.1

    என் சகோதரிகளே, பொல்லாங்காய்த் தோன்றுகிற யாவையும் விட்டு நீங்குங்கள். மனிதர் துரிதமாக வாழ்ந்து ஓயும் இந்த யுகத்தில் சீர்கேடு புகை போல எழும்புகின்ற இவ் வேளையில் நீங்கள் விழிப்புடனே நின்றாலொழிய உங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. கற்பும் அடக்கமும் காண்பதற்கு அரிதாகி விட்டது. கிறிஸ்துவின் பின்னடியாராக உயர்ந்த நெறியுடைய நீங்கள் அருமையானதும் விலை மதிக்க முடியாததுமான இரத்தினமாகிய கற்பைப் பேணுங்கள். சுத்தமான எளிய நல்லுடை அணிந்து அடக்கமான நடத்தையுடையவளாகவிருப்பது ஆயிரம் ஆபத்துகளுக்கு விலக்கிப்பாது காப்பதாகிய பரிசுத்தமான மறைவிடத்தை ஒரு பெண்ணைச் சூழ உண்டு பண்ணும், எளிய ஆடை அணிவது, விவேகமுள்ள பெண்மணியை மிகவும் நல்ல முறையில் வெளிப்படுத்துகின்றது. C.G. 417.CCh 487.2

    கிற்ஸ்தவர் உடுத்தும் விதமாகச் சாதாரணமான எளிய முறையில் ஆடை உடுத்து, தெய்வ பக்தியுடைய ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும் உங்களை அலங்காரம் செய்யுங்கள்.CCh 488.1

    புத்திக் கொவ்வாத புதிய மோஸ்தர் உடைகளைப் பின்பற்றுவதற்கென்றே பலர் தங்களுக்கு இயல்பான எளிய ஆடையைக் கைவிட்டு செயற்கை ஆடையை விரும்புகின்றனர். காலத்தையும் பணத்தையும் மூளையின் சக்தியையும் செல்வு செய்து ஆன்ம உயர்வு அடைதலையும் கைவிட்டு புதிய மோஸ்தர்களைப் பின்பற்றி, ஆடை அணிந்து வாழத் தங்களை முற்றுமாக ஒப்புவிக்கின்றனர்.CCh 488.2

    பிரிய இளைஞரே, பொன்னும் சரிகையும் பதித்த ஆடைதரித்து செய்ற்கையான அலங்காரங்கள் செய்து, பகட்டான நாகரீக பாங்கின்படியே வாழ நீங்கள் மனச்சார்புடையவர்களாவதால் உங்கள் மார்க்கத்தையும் சத்தியத்தையும் நீங்கள் அவர்களுக்கு சிபார்சு செய்கிறதில்லை. உங்களை ஆராய்ந்து அறிகின்ற எவரும் வெளித் தோற்றத்தை அழகுபடுத்த நாடும் உங்கள் முயற்சிகள் பலங் குன்றிய மனதையும் மேட்டிமையான இருதயத்தையுமே வெளிப்படுத்துவதாகக் கருதுவர். C. G. 421.CCh 488.3

    ஒவ்வொரு குழந்தையும் இளைஞரும் தவறின்றி ஆசையுடனே நாடக்கூடிய ஆடை ஒன்றுண்டு. அது பரிசுத்தவான்களின் நீதியே. உலக ஜனத்தைப் பின்பற்றி ஆடை தரிக்க அவர்களுக்கு இருக்கும் மனமும் முயற்சியும் இதை நாடுவதில் உபயோகிக்கப்பட்டால் அவர்கள் விரைவில் கிறிஸ்தவானவரின் நீதியினால் தரிப்பிக்கப்படுவார்கள். ஜீவ புஸ்தகத்திலிருந்து அவர்கள் பேர் கிறுக்கிப் போடப்படமாட்டாது; அன்னைமாரும், இளைஞர்சும் சிறுவரும் சேர்ந்து, தேவனே சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என்னுள்ளத்திலே புதுப்பியும், (சங். 51:10) என்று கூறிப் பிரார்த்திக்க அவசியமாகின்றது. இத்தகைய இருதய சுத்தமும் ஆவியின் அழகும் பொன்னைப் பார்க்கிலும் தற்காலத்திற்கும் நித்திய காலத்திற்கும் அருமையாகவிருக்கும். இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். C. G. 417, 418.CCh 488.4

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents