Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    வருஷாந்தரக் கூட்டம்

    தேவனுடைய பிள்ளைகள் கூடிச் சேரும்போது அவர்களோடு கலந்துகொள்ள அதிக முயற்சி எடுங்கள். சகோதர களே, தேவன் உங்களுக்கு வைத்திருக்கிற தூதைக் கேட்பதற்குரிய வாய்ப்பை நெகிழவிடுவதை விட, உங்கள் வியாபாரம் நஷ்டமடைய விட்டுவிடுவது உங்களுக்கு மிகவும் நலமாயிருக்கும். ஆவிக்குரிய ஒவ்வொரு சிலாக்கியத்தையும் ஆதாயப்படுத்துவதற்கு இடையூறாயிருக்கும் யாதொரு சாக்குப்போக்கும் சொல்லாதிருங்கள். சத்திய கதிரொளி ஒவ்வொன்றும் உங்களுக்கு அவசியம். உங்களிடத்திலுள்ள நம்பிக்கையைக் குறித்துக் கேட்பவர்களூக்குச் சாந்தத்தோடும் பயத்தோடும் காரணங் கூற நீங்கள் பக்குவப்படுவது அவசியம். நீங்கள் அப்படிப்பட்ட ஒரு சிலாக்கியத்தை தவற விடக்கூடாது.CCh 210.3

    நம்மில் எவராவது கூட்டம் நமக்கு ஓர் ஆசீர்வாதமாயிருப்பதற்கென போதகர்களையாவது, வேதாகம ஊழியர்களையாவது சார்ந்து வருஷாந்தரக் கூட்டங்களுக்குப் போகக் கூடாது. தேவன், ஜனங்கள் தங்கள் பாரங்களைப் போதகர்கள் மேல் சுமத்துவதை விரும்புகிறதில்லை. உதவிக்காக மனுஷர்களைச் சார்ந்து, அவர்கள் பலட்சியம் அடைவதை அவர் விரும்புகிறதில்லை. அவர்கள் உதவியற்ற பிள்ளைகளைப்போல், மற்றவர்கள் மீது சாய்ந்துகொண்டிருக்கக்கூடாது. தெய்வ கிருபையின் உக்கிராணக்காரனாக, ஒவ்வொரு சபை அங்கத்தினனும் தன் சொந்தப்பொறுப்பை உணர்ந்தவனாகத் தன்னில் தானே ஜீவனையும் வேரையுமுடையவனாய் இருக்க வேண்டும்.CCh 211.1

    கூட்டத்தின் சித்தி பரிசுத்த ஆவியின் வல்லமையையும் பிரசன்னத்தையும் பொருத்திருக்கின்றது. பரிசுத்த ஆவியின் மாரிக்காக அவருடைய சத்தியத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஜெபிக்க வேண்டும். நம்மால் கூடியமட்டும், அவருடைய கிரியைக்குத் தடையாயிருக்கும் ஒவ்வொன்றையும் அகற்ற வேண்டும். சபையின் அங்கத்தவர்கள் ஒருவர்க்கொருவர் கசப்பையும், பகையையும் பேணி வைத்திருக்கும்பொழுது, பரிசுத்த ஆவி ஒருபோதும் ஊற்றப்படமாட்டார். பொறாமை, எரிச்சல், தீயன யோசித்தல், தீது பேசுதல்யாவும் சாத்தானால் உண்டானவை, அவை பரிசுத்த ஆவி யானவர் கிரியைச் செய்யக்கூடாதபடி வழியை அடைத்து விடுகின்றன.CCh 211.2

    இவ்வுலகத்தின் கண் தேவனுக்குத் தமது சபையைப் போல் அருமையானது வேறு ஒன்றுமில்லை. வேறு எதுவும் அதைப்போல் அவ்வளவு கவலையோடு பாதுகாக்கப் படுகிறதில்லை. தம்முடைய ஊழியத்தைச் செய்கிற ஊழியருடைய செல்வாக்கைக் கெடுக்கிற நடத்தையைப்போல் தேவனுக்கு வருத்தத்தைக் கொடுப்பது வேறெதுவுமில்லை. சாத்தானுக்கு உதவி செய்ய அவனுடைய வேலையில் ஈடுபட்டு, குறை கூறி அதைரியப்படுத்துகிற யாவரையும் தேவன் கணக்குக் கேட்பார். 6T. 39-42.CCh 212.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents