Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உலகத்தோடு வியாபாரக் கூட்டுறவு

    உலகக் காரியங்களை ஞானமாய் நடத்துவதற்குச் சிலருக்குச் சாமர்த்தியமில்லை. அவர்களுக்குப் போதிய திறமை இல்லாதபடியால், சாத்தான் அவர்களையும் பயன்படுத்திக் கொள்ளுகிறான். காரியம் இப்படியிருக்க, அப்படிப்பட்டவர்கள் தங்கள் வேலையைப் பற்றி அறிவில்லாதிருக்கக் கூடாது. தங்கள் திட்டங்களை நிறைவேற்றுமுன், அவர்கள் தங்களைத் தாழ்த்தி, தங்கள் சகோதரருடைய ஆலோசனையைக் கேட்டு, அவர்களது விவோத்தின்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒருவர் பாரத்தை ஒருவர் சுமருங்க. (கலாத். 6:2) என்ற வசனத்தைக் கவனிக்கும்படி வழி நடத்தப்பட்டேன். தங்கள் சொந்தத் திட்டங்களைப்பின் பற்றும்வரை, விவேகமுள்ளவர்கள் தங்களுக்காகக் கணக்கு விவரங்களைக் கவனிக்கும்பை, சிலர் போதுமான அளவு தங்களைத் தாழ்த்துகிறதில்லை. ஆகவே, தங்களைச் சிக்கலுக்குள்ளாக்கிக் கொள்கின்றனர். பின்பு அவர்கள், தங்கள் சகோதரருடைய அபிப்பிராயத்தையும், ஆலோசனையையும் அடைய வேண்டிய அவசியத்தை உணர்கின்றனர்; ஆனால், முன்பு இருந்ததைவிட அது எவ்வளவு அதிக பாரமுடையதாகிறது. கூடுமானவரை சகோதரர்கள் நியாயஸ்தலத்துக்குப் போவதை விலக்க வேண்டும்; ஏனெனில், சத்துருவானவன், அவர்களைக் கஷ்டத்துக்கும் சிக்கலுக்கும், உட்படுத்த, அது அவனுக்கு பெரும் சிலாக்கியம் அளிக்கும். நஷ்டம் ஏற்படினும், ஓர் ஒப்பந்தம் செய்து கொள்வது உசிதம்.CCh 304.3

    அவிசுவாசிகளுக்காகப் பிணைப்படுவதைக் குறித்து தேவன் தமது ஜனங்கள் மீது வெறுப்புக்கொண்டதாக நான் கண்டேன். கையடித்து, உடன் பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே (நீதி. 22:26) என்ற வசனம் எனக்குக் காட்டப்பட்டது. அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான். நீதி. 11:15. உண்மையற்ற உக்கிராணக்காரர்! தங்களுடையதல்லாததை------தேவனுடையதை பணையம் வைக்கின்றனர். சாத்தான், அவர்களுடைய கைகளிலிருந்து அதை, தன் பிள்ளைகள் பறித்துக் கொள்வதற்கு உதவி செய்ய ஆயத்தமாயிருக்கிறான். ஓய்வுநாளை ஆசரிக்கிறவர்கள் அவிசுவாசிகளுடன் பங்காளிகளாயிருக்கக் கூடாது. தேவனுடைய ஜனங்கள் அந்நியருடைய வார்த்தைக்களை வெதுவாய் நம்பி, அவர்கள் கருத்தையும் ஆலோசனையும் கேட்கின்றனர்; ஆனால் அப்படி இருக்கலாகாது. சத்துரு அவர்களைத் தன்னுடைய காரியஸ்தர்களாக்கி தேவனுடைய ஜனங்களைக் குழப்பி, அவர்களுடையதைப் பறித்துக் கொள்ளும்படி அவர்கள் மூலமாய்க் கிரியைச் செய்கிறான். 1T.200,201.CCh 305.1