Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    மனதிலும் ஆத்துமத்திலும் ஏற்படும் கேடுகள்

    சரீர நோய்களைவிட மாமிச உணவினால் ஏற்படும் ஆவிக்குரிய தீமைகள் குறைவானவையல்ல, புலால் உணவு சுகத்துக்குக் கேடு உண்டாக்கும். எவை எல்லாம் சரீரத்தைப் பாதிக்குமோ அவை ஆத்துமாவையும் மனத்தையும் தாக்கும். MH 315.CCh 594.2

    மாமிச உணவு குணத்தை மாறச் செய்து, மிருக சுபாவத்தைப் பலப்படுத்துகிறது. நாம் எவைகளை உண்கிறோமோ அவைகளால் ஆக்கப்பட்டிருக்கிறோம். அதிக மாமிசம் உண்பதால் புத்திக்கூர்மை மந்தப்படுகிறது. ஒருபோதும் மாணவர் மாமிசத்தை உருசி பாராதிருந்தால், தங்கள் பாடங்களில் மிகவும் திறமைசாலிகளாக விளங்குவார்கள். மாமிச உணவு அருந்தி, மனிதன் பலம் அடைந்தால், அதே வீதத்தில் மனேசக்திகள் குன்றிவிடுகின்றன. CD 389.CCh 594.3

    எளிய நடையில் ஆகாரம் இருக்க வேண்டிய ஒரு காலம் இருக்குமானால், அது இப்பொழுதே. நமது பிள்ளைகளுக்கு முன் மாமிச உணவு வைக்கவேண்டாம். அது மாமிச இச்சைகளைத் தூண்டி, அவற்றைப் பலப்படுத்தி, சன்மார்க்க சக்திகளை உணர்ச்சியற்றதாக்குகிறது. 2T 352.CCh 594.4

    கிறிஸ்துவின் அதி சீக்கிர வருகையை எதிர்பார்க்கும் மக்களுக்கிடையில் பெரிய சீர்திருத்தம் காணப்பட வேண்டும். இதற்குமுன் செய்யப்படாத ஒரு வேலையை நமது ஜனங்களுக்கிடையில் சுகாதார சீர்திருத்தம் செய்ய வேண் டும். சரீர, மனோ, ஆவிக்குரிய சுகத்தை ஆபத்துக்குள்ளாக்கும் மிருகங்களின் மாமிசத்தை இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவர்கள் விழிப்படையச் செய்ய வேண்டும். மாமிசம் புசிக்கும் விஷயத்தில் இப்பொழுது அரைமனதாய் மனந்திரும்பின அனேகர் தேவனுடைய பிள்ளைகளோடு நடவாமல், அவர்களை விட்டு விலகிப் போவார்கள். CH 575.CCh 594.5

    சத்தியத்தை விசுவாசிக்கிறோமென்று சொல்லுகிறவர்கள், தங்கள் செய்கைகள் அல்லது வார்த்தைகளினால் தேவனுக்கும் அவருடைய வேலைக்கும் எவ்விதத்திலும் கனவீனம் ஏற்படாதபடி, தங்களுடைய சரீர மன சக்திகளைக் கவனதோடு காத்துக்கொள்ளவேண்டும். வழக்க பழக்கங்கள் தேவனுடைய பிள்ளைகள் மாமிசம் புசிப்பதற்கு விரோதமாக உறுதியாக நிற்கவேண்டுமென்று எனக்குத் தெளிவாகக் காட்டப்பட்டது. அவர்கள் சுத்த இரத்தமும் தெளிவான மனதும் உடையவர்களாயிருக்க விரும்பினால், மாமிச உணவை விட்டுவிடவேண்டுமென்ற இத்தூதுக்கு அவர்கள் செவி கொடுக்க அவசியமில்லை என்று தேவன் எண்ணி இருப்பாரானால், அவர் முப்பது ஆண்டுகளாகத் தமது பிள்ளைகளுக்கு இத்தூதைக் கொடுத்திருப்பாரா? மாமிச உணவின் உபயோகத்தினால் மிருக சுபாவம் பலப்பட்டு, ஆவிக்குரிய தன்மை பலவீனப்படுகிறது. CD 383.CCh 595.1