Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    அத்தியாயம்

    யோசுவாவும் தூதனும்-65

    காணப்படாத உலகங்களுக்கும் காணப்படும் உலகத்திற்கும் நடுவாக இருக்கும் திரை அகன்று, மனிதனின் மீட்பிற்கென்று சாத்தானோடும் அவனுடைய பொல்லாத தூதர்களோடும் கிறிஸ்துவும் பரிசுத்த தூதர்களும் நடத்தும் பெரும் போராட்டத்தைத் தெய்வ மக்கள் பார்ப்பதற்குக் கூடுமானால், பாவ அடிமைத்தனத்திலிருந்து ஆத்துமாக்களை விடுவிப்பதற்குத் தெய்வம் நடப்பிக்கும் அதிசயமான கிரியையையும் பொல்லாங்கனுடைய விரோதத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கு அவர் இடைவிடாமல் வல்லமையுடனே வேலை செய்வதையும் அறிந்துகொள்ளும் பொழுது, சாத்தானின் தந்திரங்களை எதிர்ப்பதற்கு அவர்கள் அதிகமான ஆயத்ததுடனிருப்பார்கள்.CCh 740.1

    அப்பொழுது மீட்பின் ஒழுங்கின் விரிவையும், அதின் முக்கியத்தையும், கிறிஸ்துவின் உடன் ஊழியராக தங்கள் முன்னிருக்கும் மா பெரும் வேலையையும் பற்றிய சிந்தனையினாலே அவர்களுடைய மனது பக்தி வினயம் பெறும். பரலோகம் முழுவதும் தாங்கள் இரட்சிப்படைவதிலே வாஞ்சையாகவிருக்கின்றது என்றறிந்ததினாலே அவர்கள் ஊக்கமுடையவர்களாகவிருந்த போதிலும், மனத் தாழ்மையுடவர்களாகவிருப்பார்கள்.CCh 740.2

    சாத்தானின் அலுவலையும், கிறிஸ்துவின் அலுவலையும் தமது ஜனத்தைக் குற்றம் சாட்டுகிறவனை முறியடிப்பதற்குச் சக்தி வாய்ந்த நமது மத்தியஸ்தரின் வல்லமையையும் விளக்கும் மிகுந்த பலமானதும், மனதிலே இலகுவில் பதிவதுமாகியதோர் திருஷ்டாந்தம் சகரிய தீர்க்கதரிசனத்திலே அளிக்கப் பட்டிருக்கின்றது. சகரியா 3. அந்தப் பரம தரிசனத்திலே பிரதான ஆசாரியனாகிய யோசுவோ” அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்” மிகுந்த உபத்திரவத்திலிருக்கின்ற தன்னுடைய ஜனங்களுக்காக வேண்டுதல் செய்கிறவனாகக் கர்த்தருடைய தூதனானவரின் முன் நின்று. கடவுளுடைய இரக்கத்திற்காகக் கெஞ்சுகின்றான். சாத்தான் அவனைத் தடை செய்வதற்கு அவனுடைய வலது பக்கத்திலே நிற்கின்றான். சாத்தான் சாட்டும் குற்றச்சாட்டுகளுக்கு நீங்கித் தன்னையும் தன் ஜனங்களையும் தப்புவிப்பதற்குப் பிரதான ஆசாரியனால் கூடாது. அவர்கள் பாவங்களின் அடையாளமாக அழுக்கு வஸ்திரத்தைத் தரித்து, கர்த்தருடைய தூதனானவருக்கு முன்பாக அவர்களுடைய பாவத்தை அறிக்கையிட்டு, அவர்கள் மனந்திரும்பினார்களென்றும் மனத் தாழ்மையைக் காண்பித்தார்களென்றும் குறிப்பிட்டுக் கூறி, பாவங்களை மன்னிக்கும் இரட்சகரின் கிருபையையே சார்ந்து, தேவ வாக்குத்தத்தங்களை உரிமை பாராட்டுகின்றான்.CCh 740.3

    அப்பொழுது பாவிகளின் இரட்சகரும் கர்த்தருடைய தூதனுமாகிய கிறிஸ்துவானவர் “சாத்தானை நோக்கி, கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா?” என்று கூறி, அவனை அமர்த்துகின்றார். சகரி. 3 : 2.CCh 741.1

    யோசுவின் வேண்டுதல் அங்கீகரிக்கப்பட்டதும், “இவன் மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்து போடுங்கள்” என்ற கட்டளைப் பிறக்கின்றது. அன்றியும் தூதன் யோசுவை நோக்கி: “பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்றார். “அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின் மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்.” அவனுடைய சொந்த பாவங்களும் அவனுடைய ஜனங்களின் பாவங்களும் மன்னிக்கப்பட்டன. இஸ்ரவேலர் “சிறந்த வஸ்திரம்” தரிக்கப் பெற்றனர். அதாவது கிறிஸ்துவானவரின் நீதி அவர்களுக்கு அளிக்கப்பட்டது.CCh 741.2

    சாத்தான் யோசுவாவையும் அவனுடைய ஜனங்களையும் குற்றஞ் சாட்டினது போலவே, சகல யுகங்களிலும் இரக்கத்தையும் தேவ தயவையும் நாடுகிறவர்களைக் குற்றஞ் சாட்டுகின்றான். வெளிப்படுத்தலில் “இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ் சுமத்தும் பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ் சாட்டுகிறவனென்று” அவன் அழைக்கப்படுகிறான். வெளி. 12: 10. பொல்லாங்கனாகிய சாத்தானைச் சேர்ந்தவர்களிடமிருந்து பரலோக குடும்பத்தில் ஒருவன் அங்கத்தினனாகும் பொழுதெல்லாம், அவனுடைய உறுதியான எதிர்ப்புக்கள் வெளியரங்கமாகின்றன. பாவத்தின் மீதுள்ள வெறுப்பினால் குற்றமுடைய தெய்வ மக்கள் மீது சாத்தான் குற்றஞ் சாட்டாமல், பழுதுள்ள அவர்களுடைய குணத்தின் நிமித்தமே அவ்வாறு செய்கின்றான். தெய்வ பிரமாணத்தை அவர்கள் மீறினால் மாத்திரமே அவர்கள் மேல் அவன் ஆதிக்கஞ் செலுத்தக் கூடும். கிறிஸ்துவானவருக்கும் அவனுக்குமிடையே உள்ள பகையின் காரணமாகவே அவனுடைய குற்றஞ் சாட்டுதல்கள் எழும்புகின்றன. இரட்சிப்பின் திட்டத்தின் மூலமாக மனுக்குலத்தின் மேல் அவன் கொண்டுள்ள பிடியைத் தகர்த்து, அவனுடைய ஆதிக்கத்தினின்று ஆத்துமாக்களை மீட்கின்றார். கிறிஸ்துவானவரின் மேலாதிக்கத்தின் அத்தாட்சியாகிய மீட்கப்பட்ட மனிதனைப் பார்க்கும் பொழுது பிரதான கலக்காரனின் பகையும் விரோதமும் பற்றியெரிகின்றது. அவருடைய இரட்சிப்பை அங்கீகரித்திருக்கும் மீதமாக இருக்கும் மனுஷ ஜாதியினரைப் பேய்த்தனமான வல்லமையினாலும் கொடிய தந்திரங்களினாலும் அவரை விட்டுப்பிரிப்பதற்கு அவன் கிரியை நடப்பிக்கின்றான்.CCh 742.1

    மனிதர் நாஸ்திகத்தினாலே மருள விழும்படி செய்து, தெய்வத்தைப் பற்றிய நம்பிக்கையையும், அவர் பேரில் கொண்டுள்ள அன்பையும் விட்டு அவர்களைப் பிரித்து விடுகின்றான். அவருடைய பிரமாணத்தை மீறும்படி அவர்களைச் சோதித்து. அவர்களை மீறுதலுக்குப்பட்ட பிறகு அவர்கள் தன்னால் சிறைபிடிக்கப்பட்டவர்கள். எனவே அவர்களைத் தன்னை விட்டு அகற்றும் உரிமை கிறிஸ்துவுக்கு இல்லை யென்று கூறி. அவன் வழக்காடுகின்றான். மன்னிப்பையும் கிருபையையும் ஊக்கமாகத் தேடுகிறவர்கள் அதைக் கண்டடைவார்கள் என்று அவன் அறிவான். எனவே. அத்தகையோர் அதைரிய மடையும்படியாக அவர்களுடைய பாவங்களை அவன் அவர்களிடமாக எடுத்துக் காட்டுகின்றான். தெய்வத்திற்குக் கீழ்ப்படிய விரும்புகிறவர்களுக்குப் பிரதி கூலமான வேளைக்காக அவன் இடைவிடாமல் காத்திருக்கின்றான். அவர்களுடைய மிகுந்த நன்மையும் ஏற்றுக்கொள்ளப்படத் தக்கதுமான ஊழியத்தைக் குறித்து கறைப்படுத்திக் காட்ட வழி தேடுகின்றான். மிக நுண்ணியதும் மிகுந்த குரூரமுமாகிய எண்ணிறந்த உபகரணங்களைக் கொண்டு அவர்களை ஆக்கினைத் தீர்ப்பிற்குட்படுமாறு செய்ய முற்படுகின்றான்.CCh 742.2

    குற்றவாளிகளாகிய மனிதர் இந்தத் குற்றச்சாட்டுகளுக்குத் தாங்களாக எதிர் பேச முடியாது. தெய்வ சந்திதானத்திலே தன் பாவக் கறைகளை உடைய வஸ்திரத்துடனே அவன் நிற்கின்றான். மெய் மனஸ்தாபத்தினாலும் விசுவாசத்தினாலும் தங்களுடைய ஆத்துமாக்களை அவரிடம் ஒப்புவித்த அனைவருக்காகவும் இயேசுவானவர் பலமாகப் பரிந்து பேசுகின்றார். கல்வாரியின் பலத்த நியாயங்களைக் கொண்டு அவர் அவர்களுக்காக வாதாடி. அவர்களைக் குற்றஞ் சாட்டுகிறவனை ஜெயிக்கின்றார். சிலுவையின் மாணபரியந்தமும் அவர் கேவனுடைய நியாயப்பிரமாணத்திற்குப் பரிபூரணமாகக் கீழ்ப்படிந்ததால், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குற்ற முடையவன் பேரில் இரங்கி அவனை மன்னிக்கும் படியாகத் தம்முடைய பிதாவைக் கேட்டுக்கொள்ளுகின்றார். தம்முடைய ஜனத்தைக் குற்றஞ் சாட்டினவனை நோக்கி: “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, இவர்கள் என்னுடைய இரத்தக் கிரயத்தினால் கொள்ளப் பட்டவர்கள். அக்கினியின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளிகள்” (சகரியா 3: 2) என்று கூறுகின்றார். விசுவாசத்தின் மூலமாக அவர் பேரிலே சார்ந்து கொள்ளுகிறவர்களுக்குப் பின்வரும் ஆறுதளிக்கும் உறுதிமொழி கூறப்படுகின்றது. “பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச் செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன்” என்றார். சகரி. 3: 4.CCh 743.1

    கிறிஸ்துவின் நீதியாகிய அங்கியைத் தரித்துக்கொண்ட அனைவரும் அவருக்கு முன்பாகத் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையும் உத்தமுமானவர்களுமாக அவர் முன்பாக நிற்பர். அவர்களைக் கிறிஸ்துவானவருடைய கரங்களிலிருந்து தன் வசப்படுத்திக் கொள்ளுவதற்கு சாத்தானால் கூடாது. மெய் மனஸ்தாபத்துடனும் விசுவாசத்துடனும் தம்முடைய பாதுகாப்பை உரிமை பாராட்டுகின்ற ஒரு ஆத்துமாவும் சாத்தானின் வல்லமைக்கு உட்படுவதற்கு கிறிஸ்து அனுமதியார். “அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாவான்” (ஏசா. 127 : 5.) என்பது அவருடைய உறுதிவாக்கு. யோசுவாவிற்கு அளிக்கப்பட்ட வாக்குத்தத்தம் அனைவருக்கும் கூறப்படுகிறது. “நீ என் காவலைக் காத்தல். . . இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.” சகரி. 3: 7. இவ்வுலகிலும் தெய்வதூதர்கள் அவர்களுடைய இரு பக்கங்களிலும் உலாவுவார்கள். முடிவில் தேவனுடைய சிங்காசனத்தைச் சிற்றிலும் நிற்கின்ற தேவ தூதர்கள் நடுவிலும் அவர்கள் நிற்பார்கள்.CCh 744.1

    தெய்வ அங்கீகாரம் பெற்றவர்கள் கர்த்தருடைய சமூகத்திலே அழுக்கு வஸ்த்திரங்களுடனே நிற்பதாகக் குறிப்பிடப்படுவது கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்திருக்கும் அனைவரும் தங்களை தாழ்மைப்படுத்தவும், ஆழ்ந்த இருதய பரிசோதனைச் CCh 744.2

    செய்யும் வழி நடத்த வேண்டும். சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்கள் தங்களைப் பற்றி மிகவும் தாழ்மையான அபிப்பிராயமுடையவர்களாக விருப்பர். கிறிஸ்துவின் கறை திரையற்ற சுபாவத்தை மிகவும் சமீபித்து உற்று நோக்கி வரும் பொழுது, அவருடைய சாயலின்படியே மாறுதலடைவதற்கு அவர்கள் மிகுந்த வாஞ்சை கொள்ளுவர். தங்களிலே பரிசுத்தமும் தூய்மையும் இல்லை யென்றுணருவர். நம்முடைய பாவத் தன்மையை நாம் உணர்ந்துகொள்ளும் பொழுது நம்முடைய நீதியும் பரிசுத்தமும் மீட்புமாகவிருக்கின்ற அவரை நாம் சார்ந்துகொள்ள வேண்டும். சாத்தாவின் குற்றச்சாட்டுகளுக்கு நாம் பிரதியுத்தரம் அளிக்க முடியாது. நமது சார்பில் கிறிஸ்துவானவரே பிரயோஜனமான வேண்டுதலைச் செய்வதற்கு ஆகும். அவர் நம்முடைய புண்ணியங்களையல்ல, தம்முடைய சொந்த புண்ணியங்களையே காட்டி வழக்காடி, குற்றஞ் சாட்டுகிறவனை, அடக்கிப்போட வல்லவராயிருக்கிறார்.CCh 745.1

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents