Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சமையற் கலை

    சமையல் கேவலமான கலையன்று. அது வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான கலைகளில் ஒன்றாகும். எல்லாப் பெண்களும் கற்கவேண்டிய கலை அது. பரம ஏழைகளுக்கும் பயன் தரத்தக்கவாறு அது கற்பிக்கப்பட வேண்டும். ஆகாரத்தை சுவைப்பட அதே சமயத்தில் எளிய, சத்துள்ள உணவைச் சமைப்பதற்கும் திறமை அவசியம்; எளிய உணவாய் இருப் பினும், அதை ருசிகரமாகவும் ஆரோக்கியமாகவும் எளிய முறையில் எப்படிச் சமைப்பதென்று அறிந்திருக்க வேண்டும்CCh 578.3

    MH 302, 303.CCh 579.1

    நமது உணவைச் சாதாரணமாக்குவதில் விவேகமான முன்னேற்றமடைய வேண்டும். தெய்வாதீனமாக, சரீர வளர்ச்சிக்கு அவ்சியமான சத்துள்ள உணவுப் பொருட்களை ஒவ்வொரு நாடும் உற்பத்தி செய்கிறது. இந்த உணவுப்பொருட்களைச் சுகத்தைத்தரும் சுவையுள்ள பதார்த்தங்களாகச் சமைக்கலாம். CD 94.CCh 579.2

    அனேகர் இது ஒரு கடமையென உணர்வதில்லை. ஆதலால், ஆகாரத்தைச் சரியான முறையில் சமைக்க முயற்சிப்பதுமில்லை. மாமிசம், வெண்ணை, கொழுப்பு முதலியவற்றை உபயோகிக்காமல், சுகத்தைத் தரும் உணவு இலகுவாக சமைக்கப்படக்கூடும். திறமை எளிமையுடனே இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதற்குப் பெண்கள் கற்க வேண்டும். பின்பு தாங்கள் கற்றதைப் பொறுமையுடன் அப்பியாசிக்க வேண்டும். IT 681.CCh 579.3

    கொழுப்பும் வாசனைத் திரவியமுமின்றி, எளிய முறையில் சமைக்கப் பெற்ற எல்லா வித பழங்கள், தானியங்கள் மரக்கறிகள், பால் அல்லது பாலாடை இவைகளே ஆரோக்கியத்திற்கு ஏற்ற சிறந்த உணவு. CH 115.CCh 579.4

    பரலோகம் செல்ல ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறோமென சொல்லுகிறவர்களுக்கு, கூடியவாறு இயற்கை நிலைமையில் கொழுப்பில்லாமல் சமைக்கப்பட்ட தானியங்கள், பழவர்க்கங்கள் அடங்கிய உணவே ஆகாரமாயிருக்க வேண்டும். 2T 352.CCh 579.5

    ஆகாரத்தில் சர்க்கரை அதிக சர்வ சாதரணமாக உபயோகிக்கப்படுகிறது. கேக்குகள், தித்திப்புப் பண்டங்கள், சர்க்கரைப் பாகுகள், ஜாம் முதலிய இனிப்புப் பதார்த்தங்களே அஜீரணத்துக்கு முக்கிய காரணங்கள். முட்டைCCh 579.6

    பால், சர்க்கரை சேர்ந்த பலகாரங்களே விசேஷித்த தீங்குள்ளவை, பாலும் சர்க்கரையும் அதிகமாய்ச் சேர்த்துச் சாப்பிடுவதை நீக்க வேண்டும். MH 302.CCh 580.1

    உஷ்ணப் பிரதேசங்களில் சர்க்கரை குறைவாகச் சேர்த்து பண்டங்களை தயாரிப்பது சரீர உஷ்ணத்தைக் குறைக்கும். CD 95.CCh 580.2

    பால் உபயோகித்தால், அது நன்றாகக் காய்ச்சப்பட வேண்டும். இப்படி முன் எச்சரிக்கையாயிருப்பின், பாலை உபயோகிப்பதினால் வரும் நோய்களும் குறையும். MH 302.CCh 580.3

    பாலும் உபயோகிக்கக் கூடாத காலம் வரலாம். ஆயினும், பசுக்கள் ஆரோக்கியமானவைகளாக இருந்து பாலும் நன்றாகக் காய்ச்சப்பட்டால், காலம் வருவதற்கு முன் வேதனையை வருவிக்க அவசியமிராது. CD 357.CCh 580.4