Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    உவைட் அம்மையார் வாழ்க்கையும் திருப்பணியும்

    1827-ம் ஆண்டு நவம்பர் 26யெில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வட கிழக்குப் பகுதியில், மெயின் மாகாணச் சிற் றூர்களில் ஒன்றாகிய கோர் ஹாமில், இராபர்ட் ஹார்மனுக்கு இரட்டைப் பிள்ளைகளில் ஒருவராக எலன் ஜி.ஹார்மன் பிறந்தார். அவர் ஒன்பது பிராயமானபோது வகுப்புத் தோழி ஒருத்தி யோசனையின்றி அவர் மீது எறிந்த கல் அவரை விபத்திற்குள்ளாகிற்று. முகத்தில் ஏற்பட்ட கடுமையான காயம் மரணத்திற்கேதுவாக அவரை நோய்வாப்படுத்தியது. அதினால் உண்டான பெலவீனத்தினால் அவர் தொடர்ந்து படிக்கக் கூடாமற் போயிற்று.CCh 30.4

    பதினோராம் பிராயத்தில் அவர் தமதிருதயத்தைக் கடவுளுக்குப் படைத்து, கடலில் ஞானஸ்நானம் பெற்று, மெதடிஸ்டு சபையின் அங்கத்தினர் ஆயினார். அக்காலம் மெயின் மாகாணத்திலுள்ள போர்ட் லாந்தில், உல்லியம் மில்லரும், அவரைக் சேர்ந்தவர்களும், கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் எனப் பிரசங்கித்தனர்; அவர்கள் பிரசங்கத்தைக் கேட்க எலனும், அவர்கள் குடும்பத்தினரும், போவது வழக்கமாயிருந்தது. அவர்கள் அப்பிரசங்கங்களைக் கேட்டு, அவைகளை நம்பி, கிறிஸ்துவின் வருகையை ஆவலோடு எதிர் நோக்கினர்.CCh 31.1

    1844-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் காலையில், எலனும் வேறு நான்கு பெண்பிள்ளைகளும் சேர்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும்பொழுது தெய்வ வல்லமை எலன் மேல் இறங்கியது. சுற்றிலுமுள்ள உலகக் காரியங்களை அவர் மறந்தார். பரம நகருக்குப் பிரயாணம் செய்யும் அட்வெந்து மக்களையும், அவர்களில் உண்மையுள்ளவர்களுக்குக் கிடைக்கும் பிரதி பலனையும் அவர் உருவகக்காட்சியாகக் கண்டார். பதினேசு வயதான எலன் அம்மாள் இந்தக் காட்சியையும் இதற்குப் பின் கண்ட தரிசனங்களையும், போர்ட்லாந்திலுள்ள தம் நண்பர்களுக்கு மிகவும் பயத்துடனும் நடுக்கத்துடனும் தெரிவித்தார். அன்றியும், சமயம் வாய்த்த போதெல்லாம், மெயின் மாகாணத்திலும், அடுத்த மாகாணங்களிலும் கிறிஸ்துவின் வருகையை எதிர் பார்த்த மற்ற விசுவாசிகளுக்கும் இத்தரிசனங்களைத் திரும்பவும் கூறினார்.CCh 31.2

    1846, ஆகஸ்டு மாதம் அட்வென்றிஸ்ட் போதகர் ஜேம்ஸ் உவைட் என்னும் இளைஞருக்கும், குமார் எலன் ஹார்மன் அம்மாளுக்கும் திருமணம் நிகழ்ந்தது. பின் இருவரும் சேர்ந்து, முப்பதைந்து ஆண்டு மிகவும் ஊக்கமாகக் கடவுள் திருப்பணி ஆற்றினர். அமெரிக்க ஐக்ய நாடுகளில் சுற்றித்திரிந்து பிரசங்கள் செய்தார்கள். பிரசுர வேலை மூலம் சத்தியத்தை வெளிப்படுத்தினார்கள். சபைகள் நிறுவி அவற்றை பலப்படுத்தி நடத்தினார்கள். ஒழுங்குகள், திட்டங்கள் வகுத்து நற்பணி செய்தார்கள். 1881 ஆகஸ்டு 6ம் தேதி எல்டர் ஜேம்ஸ் உவைட் மரணமடைந்தார்.CCh 32.1

    அம்மையாரும் அவரைச் சேர்ந்தவர்களும்; சபையை உறுதியும் விசாலமுள்ள அஸ்திவாரத்தின் மீது பரீட்சைக்கு நிற்கத்தக்கதாக மிகவும் ஞானமாகக் கட்டியிருக்கிறார்கள் என்பதை காலம் விளக்கியிருக்கிறது. அவர்கள் 1849, 1850-ம் ஆண்டுகளில் ஓய்வு நாளை ஆசரித்துவந்த அட்வென்றிஸ்டர் மத்தியில் பிரசுர வேலை ஆரம்பித்தனர். 1855 - 1860 ஆண்டிற்கு இடையில் சபை ஸ்தாபனம் செய்து உறுதியான பொருளாதார நிலையை ஏற்படுத்தினார்கள். 1863ல் ஏழாம் நாள் அட்வென்டிஸ்தர் என்ற பெயருடன் ஜெனரல் கான்பரன்ஸ் (பொது ஆலோசனைக் கூட்டம்) ஸ்தாபிதம் ஆயிற்று. 1860-ம் 1870-ம் ஆண்டுகளுக்கு மத்தியில் மருத்துவ நிலையங்களும் 1870 முதல் கல்வி நிலையங்களும் நிறுவப்பெற்றன. 1868-ல் வருடாந்திரக் கூட்டங்கள் (Camp Meetings) ஆரம்பமாயின. 1874-ல் அயல் நாடுகளுக்கு முதல் மிஷனெரியை அனுப்பினார்கள்.CCh 32.2

    உவைட் அம்மையாருக்குக் கடவுள் அளித்த ஆலோசனையின் படியே இவை யாவும் நடந்தேறின.CCh 32.3

    அந்த ஆலோசனைகள் பெரும்பாலும் நேரிடையான கடிதவடிலும் நிகழ்கால சத்தியம் (Present Truth) என்னும் நமது முதல் பத்திரிகையில் கட்டுரைகள் மூலமாயும் வெளியாயின. அம்மையார் எழுதிய முதல் நூல், எலன் ஜி. CCh 32.4

    உவைட் அம்மையின் கிறிஸ்துவ அனுபவங்களும், சாட்சியங்களும் (A sketch of the Christian Experiences and views of Ellen G. White) ஆகும். அது 64 பக்கங்களுடன் 1851-ல் வெளியிடப் பெற்றது.CCh 33.1

    1855 முதல் சபையின் சாட்சி ஆகமம் (Testimonies for the Church) என்னும் பல துண்டுப் பிரசுரங்களைத் தொடர்ச்சியார் வெளியிட்டார். இவ்வாறு அப்போதைக்கப் போது தம் மக்களுக்குப் போதிக்கவும், சீர்திருத்தவும், கடவுள் அளித்த இத்தூதுகள் தான் தெரிந்துகொண்ட ஜனத்திற்கு ஆசீர்வாதமாக விளங்கவும், அவர்கள் வழி நடத்தப்படவும், எச்சரிக்கப்படவும் உதவும் வகையில் வெளியாயின. அவைகளில் வெளியான உபதேசங்களை மக்கள் மிகவும் விரும்பியதால், அவைகளையெல்லாம் தொகுத்து, 1885-ல் நான்கு பகுதிகளாக வெளியிட்டார். 1889-முதல் 1909-வரை வந்த வெளியீடுகளோடு சேர்ந்து, இவற்றை ஒன்பது பகுதிகளாகத் தொகுத்தனர். இவ்வாறு சபையின் சாட்சியாகமம் (Testimonies for the Church) ஒன்பது பகுதிகளாக வெளிவந்தது.CCh 33.2

    உவைட் தம்பதிகளுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. அவருள் மூத்தவர் ஹென்றி பதினாறு வயதிலும், இளையவர் ஹெர்பர்ட் மூன்று மாதத்திலும் மரணம் அடைந்தார்கள். இடையிலுள்ள இரண்டு பிள்ளைகள் எட்சனும், உவில்லியமும் பெரியவர்களாகி, அட்வெந்து சபையில் தொண்டர்களாகப் பணியாற்றினர்.CCh 33.3

    பொது ஆலோசனைக் கூட்டத்தின் (ஜெனரல் கான்பரன்ஸின்) வேண்டுகோளுக்கு இணங்கி உவைட் அம்மையார் 1885-ல் கோடை காலத்தில் ஐரோப்பா சென்றார். சுவிட்ஸர்லாந்து தேசத்து பேசல் நகைல் தங்கியிருந்துகொண்டு, ஐரோப்பாவின் பல பாகங்களில் சென்று கூட்டங்களில் பிரசன்னமாகியும், விசுவாசிகளைச் சந்தித்து ஊக்கம் அளித்தும் இரண்டு ஆண்டு சிறந்த ஊழியம் செய்தார்.CCh 33.4

    பின் அமெரிக்கா வந்தார். நான்கு ஆண்டுகளின் பின்னர் அவரை ஆஸ்திரேலியா போகுமாறு பொது ஆலோசனைக் கூட்டம் (General Conference) கேட்டது. அம்மையார் தமது 63வது வயதில் அங்குப் போய் ஒன்பது ஆண்டுகள் தங்கினார். கல்வியும், மருத்துவமும் அங்கு விருத்தியடைவதற்கு வேண்டிய முயற்சி செய்தார். 1900-ல் திரும்பவும் அமெரிக்கா வந்து, காலிபோர்னியாவைச் சேர்ந்த செயிண்டு ஹெலீனாவில் வாசம் பண்ணினார். 1915-ல் அவர் நித்திரை அடையும் வரை அங்கேயே குடியிருந்தார்.CCh 34.1

    அம்மையார் அறுபது ஆண்டுகள் அமெரிக்காவிலும், பத்து ஆண்டுகள் அயல் நாடுகளிலும் திருத்தொண்டு செய்தார். அக்காலத்தில் ஏறக்குறைய இரண்டாயிரம் தெய்வ தரிசனங்கள் அவருக்குக் கிடைத்தன. அவை தனியாளுக்கும், சபைக்கும், பொதுச் சங்கங்களுக்கும், ஆலோசனை கூட்டங்களுக்கும், உரிய அறிவுரைகள். அட்வெந்து இயக்கத்தை உருவாக்கவும், வளர்க்கவும், அவை பெரிதும் பயன்பட்டன. தமக்குக் கடவுள் அளித்த செய்திகளைத் தெரிவிக்க அவர் ஒரு போதும் தயங்கியதில்லை.CCh 34.2

    ஒரு லட்சத்துக்கு அதிகமான பக்கங்கள் அடங்கிய வெளியீடுகள் அம்மையார் எழுதியுள்ளார். கடவுள் அருளிய தூதுகளைத் தனி ஆட்களுக்குக் கடிதங்கள் மூலமும், சபைக்கு அட்வெந்து வாரப் பத்திரிகைகள் மூலமும், நூல்கள் வழியாகவும் வெளியிட்டார். வேத சரித்திரம், அன்றாட வாழ்க்கையின் கிறிஸ்துவ அனுபவம், ஆரோக்கியம், கல்வி, சுவிசேஷ வேலை, மற்றும் பெரும் பயனுள்ள பல பொருட்கள் அவைகளில் அடங்கியுள்ளன. அவர் இயற்றிய நாற்பத்தாறு நூல்களின் பிரதிகளில் பெரும்பாலானவை ஏனைய உலக நாடுகளின் பிரதான மொழிகளில் பெயர்க்கப் பெற்று இலட்சக் கணக்கில் விற்கப்பட்டன.CCh 34.3

    கடைசியாக தமது எண்பத்தோறாவது வயதில் அமெரிக்காவிலுள்ள காலி போர்னியாவிலிருந்து அக்கண்டத்தின் மறு முனையில் நடைபெற்ற பொது ஆலோசனைக் கூட்டத்திற்குச் சென்றார் (General Conference). அப்புறமாக ஆறு ஆண்டுகாலமே வாழ்ந்திருந்தார். அக்காலத்திற்குள்ளாக தமது எழுத்து வேலையை முடித்தார். அவர் மரணமாவதற்கு சிறிது முன்னர் பின்வருமாறு எழுதினார். என்னுடைய வாழ் நாட்கள் நீடித்தாலும், நீடிக்காத போதிலும் என்னால் பதிப்பிக்கப் பெற்ற நூல்கள் மக்களுடனே தொடர்ந்து உரையாடும். காலத்தில் இறுதி வரைக்கும் அவற்றால் நடைபெற வேண்டிய வேலை முன்னேறிச் செல்லும். கடைசி வரையிலும் திட நெஞ்சத்துடனும், மீட்பாரில் முழு நம்பிக்கையுடனும் நிலைத்திருந்து, 1915-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ம் தேதி தம் இல்லத்தில் மிகவும் அமைதியாய் மரணம் அடைந்தார். அவரது உடல் மிஷிகன் நாட்டில். பாட்டில்க்ரிக் ஒக்ஹில் கல்லறைத் தோட்டத்தில் கணவருக்கும், மக்களுக்கும் அருகில் அடக்கம் செய்யப்பெற்றது.CCh 34.4

    உடன் பணியாட்களும், சபையாரும், உறவினரும், அம்மையாரைக் கடவுளுக்குத் தம்மை முற்றிலும் கையடைத்த அன்னையார் என்றும், சமயத் தொண்டில் சிறிதும் சலிப்படையாத உழைப்பாளர் என்றும், ஊக்கமும் தயாள சிந்தையும் குடிகொண்ட உத்தம தீர்க்கதரிசி என்றும் பலவாறு பாராட்டினார்கள். அவர் சபையில் எவ்வகையான பதவியும் வகித்ததில்லை. அவர் பரலோகச் செய்திகளைத் தெய்வ மக்களுக்குத் தெரிவிக்கும் தூதன் என்றே சபையார் அனைவரும் நன்கு மதித்தார்கள். தம் வழிகளைப் பிறர் பின்பற்ற வேண்டும் என்று ஒருவரையும் ஒருகாலும் அவர் கேட்டதில்லை. அவருக்குக் கிடைத்த ஆவியின் வரத்தினால், அவர் பொருள் ஈட்டவோ தம் செல்வாக்கைப் பெருக்கவோ ஒரு காலும் துணிந்ததில்லை, தம்மையும் தம் பொருட்கள் அனைத்தையும் கடவுளுக்கு முற்றுமாகத்தத்தம் செய்திருந்தார்.CCh 35.1

    அவர் மரணமடைந்த பின்னர் அமெரிக்காவில் சிறந்த வார வெளியீடான தி இண்டிப்பெண்டண்ட் (The Independent) என்னும் பத்திரிகை, 1915, ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி அவருடைய வாழ்க்கையைப் பற்றிப் பின்வருமாறு வெளியிட்டது:- அம்மையார் தமக்கு வெளிப்படுத்தப் பட்டவைகளில் உண்மையான நம்பிக்கை கொண்டிருந்தார். அவர் வாழ்க்கை பிறருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தமக்கு ஆவியின் வரம் கிடைத்திருக்கிறது என்று எண்ணி அவர் ஒரு போதும் செருக்கு அடைந்ததில்லை.ல் இழிவான ஆதாயத்தை எக்காலும் இச்சிக்கவில்லை. அவரது வாழ்க்கையும், திருப்பணியும் அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசினி என்று உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளன.CCh 35.2

    தமது மறைவிற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னே தாம் இயற்றிய நூல்களைப் பாதுக்காக்குமாறு சபைத் தலைவர்களைக் கொண்ட கழகம் ஒன்றமைத்து அந்நூல்கள் அனனத்தையும் அவர்களிடம் ஒப்புவித்து அவைகளைப் பாதுகாக்கவும், தொடர்ந்து வெளியிடவும் அவர்களுக்குப் பொறுப்பளித்தார். அப் பாதுகாப்புக் கழக அலுவலகம் உவாஷிங்டன் டி.சி.யிலுள்ள ஏழாம் நாள் அட்வெந்து மிஷன் உலகத்தலைமைக் காரியாலயத்தோடு சேர்ந்துள்ளது.CCh 36.1

    அக்கழகம் அம்மையாரின் நூல்களைப் பாதுகாத்து, அவ்வபோது அவைகளை ஆங்கிலத்தில் வெளியிடுவதுடன் பிற மொழிகளிலும் முழு நூல் அல்லது அவற்றின் பகுதிகளை மொழி பெயர்த்து வெளியிட ஊக்கம் அளிக்கின்றது. அம்மையாரின் கட்டளைக்கு இணங்கு அக் கழகம் அவர் பத்திரிகைகளில் வெளியிட்ட கட்டுரைகளையும் அவர் விட்டுப்போன கையெழுத்துப் பிரதிகளையும் திரட்டித் தொகுத்து பல நூல்களை வெளியிட்டது. இந்நூலையும் அக்கழக அனுமதி பெற்றே வெளியிடுகின்றோம்.CCh 36.2