Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    வேத போதனை

    உடைக்காக மனிதர் கவலைப் படுவதைக் கிறிஸ்து கவனித்தார். அன்றியும் அதற்காக கவலைப்பட வேண்டாம் என்று எச்சரிக்கவும் செய்தார். உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப் பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமிலை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஸ்திரீகளின் மனம் மேட்டிமையும் ஆடைக்காக அதிகச் செலவு செய்வதுமான இவ்விரு பாவங்களை இலகுவில் பற்றிக்கொள்ளும் தன்மையுடையது. எனவே இந்தத் தடைகள் அவர்களுக்கென்றே விதிக்கப்பட்டன. கிறிஸ்துவின் அழகுடனும், சாந்தத்துடனும் ஒப்பிடும் பொழுது பொன்னினாலும் முத்துக்களினாலும் செய்யப்படுகிற விலையேறப்பெற்ற அலங்காரம் எவ்வளவு அற்பமான மதிப்பை உடையது!CCh 483.3

    பின் வரும் வேத வாக்கியம் எனக்கு காண்பிக்கப்பட்டது. தேவதூதன் கூறினார், தெய்வ மக்களுக்கு அவர்கள் கற்பிக்க வேண்டும். 1 தீமோ 2:9-10: ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது விலையேறப் பெற்ற வஸ்திரத்தினாலாவது விலையேறப் பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரிகாமல் தகுதியான வஸ்திரத்தினாலும் நாணத்தினாலும் தெளிந்த புத்தியினாலும் தேவ பக்தியுள்ளவர்களென்று சொல்லிக் கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே தங்களை அலங்கரிக்க வேண்டும்.CCh 484.1

    மயிரைப் பின்னி பொன்னாபரணங்களை அணிந்து உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பா யிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக் கடவது. அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். 1 பேதரு 3:3-5.CCh 484.2

    இந்தக் கட்டளைகள் நீண்ட நெடுங் காலத்திற்கு முன்பாக அளிக்கப்பட்டபடியால் நாம் அவற்றைக் கவனிக்க வேண்டுவதில்லை என்று அனேகர் எண்ணுகின்றனர். அவற்றைத் தம்முடைய சீஷர்களுக்கு அருளியவர் நமது காலத்தில் ஆடை அணிவதில் மோகம் உண்டாகும் என்று அறிந்து நமக்கு எச்சரிப்பை அருளினார். அதைக் கவனித்து நடந்து நாம் ஞானிகளாவோமோ?CCh 484.3

    மெய்யாகக் கிறிஸ்துவைப் பின்பற்ற முயற்சிக்கிறவர்கள் பகட்டு ஆடை அணிவதில் மனச்சாட்சிக்கேற்றபடி தயக்கமே கொள்ளுவார்கள். தெளிவாக இருக்கும் இந்தக் கட்டளைகளாஇ நிறைவேற்றவே அவர்கள் முயலுவார்கள். C.G. 415, 416.CCh 485.1

    ஆடை தரிப்பதிலும் சுய வெறுப்பைக் காட்டுவது கிறிஸ்தவ கடமை. சாதாரண ஆடை தரித்து எவ்விதமாக ஆபரணங்களுமின்றி இருந்து வருவது நமது விசுவாசத்திற்கொத்த நடக்கையாகும். 3T. 366.CCh 485.2

    ஓய்வு நாள் ஆராதனைக்கு எவ்விதமாக ஆடை தரிக்க வேண்டுமென்ற போதனை அனேகருக்கு அவசியமாகின்றது. வார நாட்களில் உடுத்தும் சாதாரணமான ஆடையுடனே தெய்வ சமூகத்தில் பிரவேசித்தல் ஆகாது. ஒவ்வொருவரும் ஆராதனையின் போது, தேவனுடைய வீட்டில் அணிந்து கொள்ளுவதற்கு தனி ஆடை வைத்திருக்க வேண்டும். உலகினரின் புதிய புதிய மோஸ்தர் ஆடைகளுக்கு ஒத்ததாக நமது ஆடையும் இருக்க வேண்டியதில்லை. என்ற போதிலும் நம்முடைய வெளித்தோற்றத்தைக் குறித்து நாம் அசட்டையாக இருக்கக்கூடாது. அலங்காரமாக இல்லாவிட்டாலும் சுத்தமும் நற் சீரும் உடையதாக நமது ஆடை இலங்க வேண்டும். தெய்வப் பிள்ளைகளை உள்ளும் பிறம்பும் தூய்மையுடையவர்களாக விளங்க வேண்டும்,CCh 485.3

    ஆடை அணிவதில் குறிப்பாக நம்முடைய போதகர்மாரின் மனைவியர் வேதாகமத்தின் நேர் போதனையினின்று நீங்காதிருத்தல் வேண்டும். கட்டளைகளை மிகவும் பழமையானவை என்ற காரணத்தினால் தாங்கள் இக் கட்டளைகளைக் கவனிக்க வேண்டுவதில்லை என்று அனேகர் எண்ணுகின்றனர். ஆயினும் அவற்றைத் தம்முடைய சீஷர்களுக்கு அருளியவர் நமது காலத்தில் ஆடை அணிவதில் மோகம் உண்டாகும் என்றறிந்து நமக்கு எச்சரிப்பை அருளினார். எச்சரிப்பிற்கு நாம் செவி சாய்த்து ஞானமுள்ளவர்களாக நடந்துகொள்ளுவோமோ? ஆடம்பர உடையின் பொருட்டு செய்யப் படுகின்ற செலவுகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஆடை மோஸ்தர்கள் அடிக்கடி மாறிக் கொண்டே போகின்றன. அது மாறுவதையே கவனித்து தங்கள் ஆடை மோஸ்தரை மாற்றுவதற்கென்றே காலத்தையும் பணத்தையும் நமது சகோதரிகள் செலவிடுகின்றனர். ஆடைக்கென்று அநியாயமாகச் செலவழிக்கப்படும் இந்தப் பணம் நியாயமாகத் தெய்வதற்கு திரும்ப அளிக்கப்பட வேண்டும். 4T. 630, 631.CCh 485.4