Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First
    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents

    சபையாரை ஊழியர் பயிற்றுவித்தல்

    செய்யப்பட்ட எல்லாப் பிரசங்கங்களும், பெரும்பான்மையானவர்களை சுயநலமற்ற ஊழியர்களாக்கவில்லை என்பது வெளிப்படை. இக்காரியம் மிக முக்கிய விளைவைக்கொண்டு வரும் என்பதைச் சிந்திக்க வேண்டும். நித்தியத்திற்குரிய நம் எதிர் காலம் ஆபத்திலிருக்கிறது. வெளிச்சத்தைக் கொடுக்க மறுப்பதினால் சபை தனது தாலந்துகளை உபயோகியாமல், உலர்ந்துபோகிறது. யாவரும் தாங்கள் அடைந்த வெளிச்சத்தை நடைமுறையில் உபயோகிக்கும்படி, ஆண்டவரிட மிருந்து வந்த போதனைகளளப் போல, கவனமாய்ப் போதிக்க வேண்டும். சபையின் பொறுப்புடையவர்கள் திறமைவாய்ந்தவர்களைப் பொறுக்கி எடுத்து, பொறுப்புகளை அவர்களுக்குக் கொடுத்து பிறருக்கு ஆசீர்வாதமாக சிறப்பாய் பணியாற்ற அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். 6T.431.CCh 130.1

    இயந்திரத் தொழிலாளிகள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள், மற்றும் பலதரப்பட்ட தொழிலாளிகளும், உத்தியோகஸ்தர்களும் தத்தம் தொழில் துறைகளில் மிகத்திறமை வாய்ந்தவர்களாயிருக்கும்படித் தங்களை விருத்தி செய்து கொள்ளுகிறார்கள். கிறிஸ்துவின் பின்னடியார்கள் குறைந்த ஞானமுள்ளவர்களாயிருந்து, அவருடைய சேவையைச் செய்கிறவர்களெனச் சொல்லிக்கொண்டு, கையாடவேண்டிய வழிமுறைகள் பற்றி அறிவில்லாதிருக்கலாமா? நித்திய ஜீவனையடைய எடுக்கும் முயற்சிக்கு லெளகீக ஆதாயம் ஒன்றும் ஒப்பாகாது. இயேசுவிடம் ஆத்துமாக்களை வழி நடத்துவதற்கேதுவாயிருக்க மனுஷ சுபாவம், மனுஷ மனப்பான்மை பற்றிய அறிவு அவசியம். சத்தியத்தைப் பற்றி ஆண்கள் பெண்களிடம் கூறி அறிவிக்க மிகவும் ஆழ்ந்த சிந்தனையும் ஊக்கமான ஜெபமும் தேவை. 4T.67.CCh 131.1

    ஒரு சபை ஸ்தாபனமானவுடனே ஒரு போதகர் அவர்களை உழைக்கும்படிச் செய்வாராக. சித்திகரமாக உழைக்கும்படி அவர்கள் கற்பிக்கப்பட வேண்டும். போதகர் பிரசங்கிப்பதைவிட ஊழியஞ் செய்யக் கற்பிப்பதில் அதிக நேரம் செலவிடுவாராக. தாங்கள் அடைந்த அறிவைப் பிறருக்குக் கொடுக்கும்படி விசுவாசிகள் கற்பிக்கப்படவேண்டும். அனுபவம் முதிர்ந்தவர்களிடம் விசுவாசத்தில் குழந்தைகளாக இருப்போர் ஆலோசனை கேட்பது அவசியமெனினும், போதகர்களை தேவனுடைய ஸ்தானத்தில் வைத்துவிடக் கூடாது.CCh 131.2

    போதகர்களையல்ல, கடவுளைச் சார்ந்து, அவருக்கு உழைக்கக் கற்பிப்பதே சபையாருக்குச் செய்யப்படவேண்டிய பேருதவி. கிறிஸ்து உழைத்தது போல அவர்களும் உழைக்கப் பழகுவார்களாக. அவர்கள் தங்கள் ஊழியர் படைகளோடு சேர்ந்து, அவருக்கென உண்மையான பணியாற்றுவார்களாக 7T. 19,20.CCh 131.3

    ஜனங்களுக்காக உழைப்பதில் ஆசிரியர்கள் முன்னோடிகளாயிருப்பார்களாக. மற்றவர்கள் அவர்களோடு சேர்ந்து போவதினால் அவர்கள் முன்மாதிரியிலிருந்து உழைக்க கற்றுக் கொள்ளுவார்கள். பல பிரசங்கங்களை விட ஒரு முன்மாதிரி மிகவிலை யேறப் பெற்றது. M. H.149.CCh 132.1

    சபையின் மேய்ப்பர்கள் சபையின் ஒவ்வொரு அங்கத்தினரும் கடவுளுக்கென உழைக்கும்படி தக்க வழி முறைகள் கண்டுபிடிக்கவேண்டும். கடந்த காலங்களில் இப்படி யாதொன்றும் செய்யப்படவில்லை. எல்லாருடைய தாலந்துகளும் சேவையில் பயன்படுமாறு திட்டங்கள் செய்யப்படவில்லை. இதனால் எத்தனை நஷ்டம் என்பதை வெகு சிலரே உணர்ந்திருக்கிறார்கள். தேவ ஊழியத்தில் மாபெரும் உதவியாயிருக்கும் பல தாலந்துகள் உண்டு; அவைகளைத் தகுந்த சேவையில் ஈடுபடுத்தவேண்டும். பெரிய சிறிய சபைகளூக்கு ஊழியர்களை அனுப்பி, சபைகளையும் அவிசுவாசிகளையும் மேம்பாடாக்க அங்கத்தினர் உழைக்கும்படிப் பயிற்றுவிக்க சிறந்த திட்டம் இருக்க வேண்டும். பயிற்சியும், கல்வியுமே தேவை. எல்லாரும் இக்காலத்திற்குரிய வேலைக்குத் தக்க அறிவு பெறும்படி தங்கள் மனதையும் இருதயத்தையும் பக்குவப்படுத்தி தங்களுக்குப் பொருத்தமானதில் மிகத்திறமை அடைவார்களாக.CCh 132.2

    சபையை விருத்தி செய்வதற்குத் தாலந்துள்ளவர்களைக் கண்டுபிடித்து, அவர்களுக்குப் பயிற்சியளித்து, சபையைக் கட்ட, ஞானமுள்ள ஊழியர்கள் தேவை. சபைகளைச் சந்திக்க உழைப்பவர்கள் சகோதர சகோதரிகள் மிஷனெரி ஊழியஞ் செய்ய அனுபவ வாயிலாக கற்பிக்க வேண்டும். வாலிபருக்கும் அப்பயிற்சியளிக்கும் வகுப்பு நடத்தப்படுவதாக. வாலிப ஆண்கள் பெண்கள் தங்கள் வீடுகளிலும், அயல் வீடுகளிலும், சபையிலும் உழைக்கக் கற்பிக்கப் படுவார்களாக. An Appeal to Ministers and Church Officers.CCh 132.3

    நடக்க வேண்டிய மாபெரும் வேலையில் சபையார் தங்களோடு ஒத்துழைக்கும்படி பரம தூதர்கள் நீடித்த நாட் களாய் காத்துக் கொண்டிருக்கிறனர். அவர்கள் உனக்காகக் காத்துகொண்டிருக்கிறார்கள். இடம் விசாலமானது, திட்டம் வெகு அடக்கமானது; எனவே பரிசுத்தமாக்கப்பட்ட ஒவ்வொரு இருதயமும் தேவ வல்லமையின் கருவியாக சேவையில் புகுந்துகொள்ளும். 9T, 46, 47.CCh 132.4

    கிறிஸ்தவர்கள் ஏகோபித்து ஒரே வல்லமையின் கீழ், ஒரே நோக்கத்தோடு, ஒன்று போல் முன்னேறினால், அவர்கள் உலகத்தையே அசைத்துவிடலாம். 9T. 221.CCh 133.1

    உலகத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கும், ஜனத்தலைவர்களுக்கும் கூறியறிவிக்கப்படும் அழைப்பே பெருவழிகளில் உள்ளவர்களுக்குக் கொடுக்க்ம் அழைப்பாகும். பொது வாழ்க்கையில் பெரும் பொறுப்புடைய மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர், நீதிபதிகள், பொதுநல அலுவலாளர்கள், தொழிலாளிகள் யாவருக்கும் தூதுகள் திட்டமாகவும் தெளிவாகவும் அறிவிக்கப்படவேண்டும். மனுஷன் உலக முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும் தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால், அவனுக்கு லாபமென்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? மாற்கு 8:36, 37.CCh 133.2

    கைவிடப்பட்டிருக்கும் ஏழைகளைப்பற்றி நாம் பேசவும் எழுதவுங்கூடும். அப்படியே, அசட்டை பண்ணப்பட்ட ஐசுவரியவான்களையும் நாம் கவனிக்க வேண்டாமா? அனேகர் இவர்களை நம்பிக்கையற்ற வகுப்பினராகக் கருது, சாத்தானுடைய வல்லமையினால் குருடாகி நித்தியத்தைப்பற்ரிய உணர்வை இழந்து கிடக்கும். இவர்களுடைய கண்களைத் திறக்க முயலாதிருக்கிறார்கள். அவர்களுடைய வெளித்தோர்றத்தின்படி தீர்ப்புச்செய்து நம்பிக்கையற்றவர்களென புறக்கணித்தபடியால், ஆயிரக் கணக்கான ஐசுவரியவான்கள் எச்சரிக்கப்படாமல் தங்கள் கல்லறைகளுக்குச் சென்றிருக்கிறார்கள். ஆனால் நிர்விசாரிகளாக வெளிக்குத் தோன்றின போதுலும், அவர்களில் மிகுதியானவர்கள் தங்கள் ஆத்துமா பாரமடைந்திருப்பதாக எனக்குக் காட்டப்பட்டார்கள். ஆயிரக் கணக்கான தனவந்தர் ஆவிக்குரிய ஆகாரமின்றி பட்டினியாயிருக்கிறார்கள். உத்தியோகஸ்தர் பலரும் தங்களுக்கில்லாத ஒரு ஆவிக்குரிய தேவையை உணருகிறார்கள். பயனில்லையென எண்ணி, அவர்களில் சிலரே ஆலயஞ் செல்கின்றனர். அவர்கள் கேட்கும் உபதேசம் அவர்கள் இருதயத்தைத் தொடுவதில்லை. இவர்களுக்காக நாம் தனியாள் முயற்சி எடுக்காமலிருக்கலாமா?CCh 133.3

    பிரசுரங்கள் மூலம் இவர்களுக்கு உதவ முடியாதா? எனச் சிலர் கேட்கலாம், அனேகரை இவ்விதம் கண்டடைய முடியாது. தனியாள் ஊழியமே அவர்களுக்குத் தேவை. விசேஷ எச்சரிப்பு இன்றி அவர்கள் அழிய வேண்டுமா? பண்டை காலத்தில் அப்படியிருக்கவில்லை. உயர்ந்த நிலையிலிருந்தவர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் சமாதானமும் இளைப்பாறுதலும் அடையும்படி தேவதாசர்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டார்கள்.CCh 134.1

    விழுந்துபோன மனுக்குலத்தை மீட்கவே மேலோகராஜன் உலகம் வந்தார். அவர் தாழ்த்தப்பட்டோருக்காக மட்டுமல்ல, உயர்ந்த நிலையிலிருப்பவருக்காகவும் வந்தார். தேவ கற்பனைகளைக் கைக்கொள்ளாமலும், தேவனி அறியாமலுமிருந்த உயர்குலத்தவர்களுடைய இருதயங்களை அடைய அவர் மிக யுக்தியுடன் உழைத்தார்.CCh 134.2

    அதே வேலை கிறிஸ்து பரமேறிய பின்னும் தொடர்ந்து செய்யப்பட்டது. கொர்நெலியுவுக்குக் கர்த்தர் காட்டிய வாஞ்சையைப்பற்றி வாசிக்கும்போது என் இருதயம் உருகுகிறது. கொர்நேலியு ரோமப்படையில் உயர்பதவியிலிருந்தான்; ஆனால், தனக்குக் கிடைத்த வெளிச்சத்தில் மிக உண்மையாய் நடந்தான். பரத்திலிருந்து கர்த்தர் அவனுக்கு விசேஷித்த தூது அனுப்பினார்; அதே சமயம் வேறொரு தூது மூலம் பேதுரு அவனைச் சந்தித்து ஒளியருள் செய்தார். ஒளிக்காக மன்றாடுகிறவர்களிடம் தேவன் காட்டும் அன்புக்கும் அனுதாபத்துக்கும் அத்தாட்சியாகவிருந்து, நம் ஊழியத்தில் நமக்கு ஊக்கமளிக்க இது பேருதவியாயிருக்க வேண்டும்.CCh 134.3

    சபையில் சேரும்படி கடவுள் விரும்பும் அனேகர் இக்காலத்திலும் கொர்நேலியுவைப் போலிருக்கின்றனர். அவர்களுடைய அனுதாபம் கற்பனையைக் கைக்கொள்ளுகிறவர்களோடு இருக்கிறது. ஆனால் அவர்களை உலகத்தோடு கட்டும் பிரிகள் பலமாகவிருக்கின்றன. எளிமையானவர்களோடு சேரும்படியான சன்மார்க்க தைரியம் அவர்களுக்கில்லை. இந்த ஆத்துமாக்களுக்காக நாம் விசேத முயற்சி எடுப்பதவசியம். பொறுப்புகளும் சோதனைகளும் அவர்களுக்கு இருப்பதால் நம் விசேஷ ஊழியம் அவர்களுக்கு அவசியம்.CCh 135.1

    எனக்குக் கொடுக்கப்பட்ட வெளிச்சத்தின்படி, உலகத்தில் அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த மனிதருக்கு, கர்த்தர் உரைக்கிறார் என்று தெளிவாகக் கூறப்படவேண்டும். அவர்கள் கடவுளால் மிக முக்கிய பொறுப்புகளைப் பெற்ற உக்கிராணக்காரர் ஆவர். அவர்கள் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டால் கடவுள் தமது ஊழியத்தில் அவர்களைப் பயன் படுத்துவார்.CCh 135.2

    உயர்ந்த வகுப்பினருக்கென உழைக்கத் தகுந்தவர்கள் சிலர் உண்டு. இப்படிப்பட்டவர்கள் தினமும் கர்த்தரைத் தேடி, அவர்களைக் கண்டடையும் வழி முறைகளை ஆராய்ந்து, அவர்களோடு பழகுவது மட்டுமல்ல, தங்கள் விசுவாசத்தினாலும் தனியாள் ஊழியத்தினாலும் அவர்களை விடாமற் பற்றிக்கொண்டு, அவர்கள் ஆத்துமாக்கள் பற்றி ஆழ்ந்த அன்பு பாராட்டி, தேவ வசனத்தின்படி, சத்தியத்தை அவர்கள் அறியும்படி ஊக்கம் காட்ட வேண்டுட். 6T. 78-81.CCh 135.3

    Larger font
    Smaller font
    Copy
    Print
    Contents