Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    கடிந்து கொள்ளுதலை எவ்வாறு ஏற்றுக் கொள்ளுவது

    தேவனுடைய ஆவியினாலே கடிந்து கொள்ளப் படுகிறவர்கள் ஆவிக்குப் பாத்திரமாகவிருக்கின்ற தாழ்மையான ஊழியருக்கு விரோதமாக எழும்பக்கூடாது. அவர்களை அழிவினின்று இரட்சிக்கும்படியாகப் பேசுகிறவர் தவறும் மனிதனல்ல, அவர் தேவனே. கடிந்துகொள்ளுதல் மனித சுவாவத்திற்குப் பிரீதியானதல்ல. தேவ ஆவியினால் பிரகாசிக்கப்படாத மனித இருதயம் கடிந்துகொள்ளுதலின் அவசியத்தையும் அதினாலுண்டாகும் ஆசிர்வாதத்தையும் அறிந்துணர்ந்து கொள்ள முடியாது. ஒரு மனிதன் பாவச் சோதனைக்கு இடங்கொடுத்து பாவத்தில் ஈடுபடும்பொழுது, அவனுடைய மனது இருளடைகின்றது. சன்மார்க்க அறிவு மாறுப்பாடடைகின்றது. மனச்சாட்சி கூறும் எச்சரிப்புகள் நிராகரிக்கப்பட்டு, அதின் குரல் மந்தமாகவே செவிப்புலனாகிறது. படிப்படியாய் அவன் நன்மை, தீமை என்ற பேதம் அறியக் கூடாமலிருந்து, முடிவில் தேவனுக்கு முன்பாக தன்நிலை எந்நிலையென்று புரிந்து கொள்ளாமற் போகிறான். அவன் மார்க்க சடங்குகளை ஒழுங்காக அனுஷித்து வைராகியத்தோடு உபதேசங்களை பற்றி இருக்கையிலேயே அவ்வுபதேசங்களின் ஆவியில்லாதவனாயிருப்பான். உண்மையுள்ள சாட்சியானவரால் அவனுடைய நிலை பின்வருமாறு சித்தரிக்கப்படுகின்றது. நீ நிர்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்ரும் எனக்கு ஒரு குறைவுமில்லை என்றும் சொல்லுகிறாய். தேவ ஆவியானவர் கடிந்து கொள்ளுதலாக இதுவே அவனுடைய நிலைமை என்று கூறுகிறபொழுது, இத்தூது உண்மையானதென்று அவன் அறிந்துகொள்ள முடியாது. எனவே, அவன் எச்சரிப்பை புறக்கணிக்கலாமோ? கூடாதே.CCh 285.2

    சாட்சியாகமங்களின் குணநலம் குறித்து நிச்சயத்தை அடைய விரும்புகிறவர் அனைவரும் அதைப்பெறுவதற்குப் போதிய அத்தாட்சிகளைக் கடவுள் அளித்திருக்கின்றனர். அவை தேவனால் அனுப்பப் பெற்றவை என்றறியும் பொழுது தங்கள் பாவமான போக்கை அவர்கள் அறியாதிருந்தாலும் கடிந்துகொள்ளுதலை ஏற்பது அவர்களுடைய கடமையே. அவர்கள் தங்கள் நிலையை உள்ளவாறே உணர்ந்தால் கடிந்து கொள்ளுவதற்கு என்ன அவசியமிருக்கிறது? அவர்கள் தங்கள் நிலையை அறியாத காரணத்தினால் தானே, காலம் வெகுவாய் கடந்து போவதற்குமுன், தெய்வம் கருணையாக அவர் கள் மனந்திரும்பி சீரடைவதற்குக் கடிந்துகொள்ளுத அடங்கிய சாட்சியாகமத்தை அவர்கள் முன்பாக வைக்கின்றார். எச்சரிப்புகளை அசட்டை செய்கிறவர்கள் தாங்கள் வஞ்சிக்கப்படத்தக்கதாக இருளில் விடப்படுவார்கள். எச்சரிப்புக்குச் செவி கொடுக்கின்றவர்கள் தங்களுக்கு அவசியமான கிருபைகளைப் பெறும்படிக்கு, பாவங்களை மிகவும் வைராக்கியமாய்த் தங்களிடமிருந்து அகற்றி, அன்புள்ள இரட்சகர் தங்கள் இருதயங்களில் பிரவேசித்து வாசம்பண்ணத்தக்கதாக அவைகளை அவருக்குத்திறந்து வைப்பார்கள். தெய்வத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளவர்களே அவர் பேசுகையில் அவருடைய குரலை அறிந்து கொள்பவர்கள். ஆவிக்குரியவர்களே ஆவிக்குரிய காரியங்களை அறிந்து கொள்வார்கள். அத்தகையோர் கர்த்தர் தங்களுடைய தவறுகளை சுட்டிக்காட்டியதற்காக நன்றியறிவு உடையவர்களாய் இருப்பார்கள்.CCh 286.1

    கடவுள் தன்னை நடத்திய விதத்திலிருந்து தாவீது ஞானம் பெற்று, உன்னதமானவரின் சிட்சையின்கீழ் தாழ்மையுடன் பணிந்து நடந்துகொண்டான். தீர்க்கதரிசியாகிய நாத்தான் உள்ளபடியாகச் சித்திரித்த தாவீதின் உண்மைநிலை அவன் தன் பாவங்களை உடனே அறிந்து கொள்ளவும் அவற்றை அகற்றிடவும் உதவியது. தாவீது ஆலோசனையை சாந்தமாக ஏற்றுக்கொண்டு, தன்னைக் கடவுளுக்கு முன்பாகத் தாழ்த்தினான். கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. என்று அவன் வியந்து கூறினான். (சங் 19:7.)CCh 287.1

    “எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிருக்க மாட்டீர்கள். எபே 12:8. நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்.” வெளி. 3:19. “எந்த சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல்CCh 287.2

    துக்கமாய் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத்தரும்.” எபி 12:11. சிட்சை எவ்வளவு கசப்பானதாயிருப்பினும் அது நாம் அவருடைய பரிசுத்தத்துக்குப் பங்குள்ளவர்களாயிருக்கத்தக்கதாக பரம பிதாவின் உருக்கமான அன்பினால் நியமிக்கப்பெற்றதே ஆகும். 5T. 682-683.CCh 288.1