Loading...
Larger font
Smaller font
Copy
Print
Contents
சபைகளுக்கு ஆலோசனை - Contents
  • Results
  • Related
  • Featured
No results found for: "".
  • Weighted Relevancy
  • Content Sequence
  • Relevancy
  • Earliest First
  • Latest First

    சபையின் உத்தரவாதம்

    இராத் தரிசனத்தில் ஒரு பெருங்கூட்டத்தையும், கூடியிருந்தோர் அனைவர் மனதிலும் கல்வியைப் பற்றிய கலக்கம் இருந்ததென்றும் கண்டேன். நீண்ட காலமாக நமக்கு போதனை அளித்து வந்த ஒருவர் கூறினார்: கல்விப்பயிற்சி அளிப்பதாகிய பெரும் பொருள் மீது எஷ்.டி.ஏ. சபையார் அனைவரும் சிரத்தை கொள்ள வேண்டும். 6T 162.CCh 536.1

    தங்கள் பிள்ளைகளைக் கல்வி பயிலச் செய்து பயிற்சி அளிக்கும் பொழுது, வேறு பள்ளிகளில் சீர்கேடான பழக்கங்களையுடையவர்களோடு சகவாசம் செய்வதால் அவர்களும் சீர்கெட்டுப் போகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். உலகம் பாவத்தினாலும் தெய்வ கட்டளைக்குப் பற்றிய அசட்டையினாலும் நிறைந்திருக்கின்றது. பட்டணங்கள் சோதோமைப் போலாகிவிட்டன. நமது பிள்ளைகள் தினமும் அனேக தீமைகளுக்குப் பாதுகாப்பு அற்றவராயிருக்கின்றனர். பொதுவாக வேறு பள்ளிகளில் படிக்கிறவர்கள் தங்களைப் பார்க்கிலும் அசட்டையாக விடப்பட்டவர்களுடனே, சகவாசம் செய்கின்றனர். வகுப்பறையில் செலவிடுகின்ற நேரம் தவிர, மீதி நேரத்தில் இவர்கள் தெருவிலே தங்கள் கல்விப் பயிற்சியை அடைந்து கொள்ளுமாறு விடப்படுகின்றனர். இளைஞருடைய இருதயங்கள் சலனமடைகின்றன. அவர்களுடைய சுற்றுப் புறங்கள் சரியான தன்மையுடையவனாக அமைந்தாலன்றி, இவ்வாறு அசட்டையாக விடப்படுகின்ற பிள்ளைகள் அதிக கவனத்துடனே வீட்டில் தங்கள் பயிற்சியை அடைந்தார்கள் மீது செல்வாக்குடையவர்களாகுமாறு சாத்தான் வேலை செய்வான். இவ்விதமாக ஓய்வுநாளை ஆசரிக்கும் பெற்றோர் என்ன நடந்ததென்று அறிவதற்கு முன்பாகவே, சீர் கேடான பாடங்கள் கற்கப்பட்டு, அவர்களுடைய இளம் பிள்ளைகளின் ஆத்துமாக்கள் சீர் கேடடைகின்றன.CCh 536.2

    தங்கள் பிள்ளைகளுக்குக் கல்விப் பயிற்சி அளிப்பதற்காக நமது பெரும் பள்ளிகள் ஸ்தாபிக்கபப்ட்டிருக்கும் இடங்களுக்குப் போகின்ற அனேக குடும்பங்கள் தாங்கள் இருக்கின்ற இடத்திலேயே இருந்து விட்டால், தங்கள் எஜமானுக்கு அதிக பலமான சேவை செய்தவர்களாவர். தாங்கள் எங்கே அங்கத்தினர்களாக இருக்கிறார்களோ அவ்விடத்தில் தங்கள் எல்லைக்குட்பட்ட பிள்ளைகள் எல்லா விதத்திலும் பிரயோஜனமுள்ள கிறிஸ்தவ கல்வியை நடைமுறையில் பயில்வதற்கென்று ஒரு பள்ளியை அமைக்குமாறு சபையை ஊக்குவிக்க வேண்டும். தங்களுடைய உதவி எங்கே தேவைப்படுகின்றதோ அத்தகைய சிறிய சபைகளுடனே நிலைத்திருப்பது தங்களுக்கும், பிள்ளைகளுக்கும் தேவ ஊழியத்திற்கும் மிகவும் நலமாயிருக்கும்; அப்படியின்றி வேறு பெரிய சபைகளுக்குப் போவதினால் முதலாவது இப்படிப் போகிறவர்களுடைய உதவி அவ்வளவாய்த் தேவைப் படாமலிருக்கலாம்; அப்படி அவர்கள் சேவை தேவைப்படாமலிருப்பதால் ஆவிக்குரிய செயலாற்றாமையினால் விழுந்துபோக அடிக்கடி சோதனை அவர்களுக்கு நேரிடலாம்.CCh 537.1

    எங்கெங்கே ஓய்வுநாள் ஆசரிக்கிற சிலர் இருக்கின்றனரோ அங்கங்கே தங்களுடைய பிள்ளைகளும் இளவயதின ரும் போதனையடையுமாறு பெற்றோர் ஒன்றுபட்டு ஒரு பள்ளியை நடத்துவதற்கு இடத்தை அளிக்க வேண்டும். தற்பிரதிஷ்டை செய்த ஊழியக்காரராக தாமே விளங்கி, பிள்ளைகளையும் அவ்வாறே ஊழியஞ்செய்ய பயிற்றுவிக்கும் ஒரு கிறிஸ்தவ ஆசிரியரை வேலையில் அமர்த்த வேண்டும். CT 173, 174.CCh 537.2

    நம்முடைய பிள்ளைகளை உலகத்திற்கென்றல்ல, தெய்வத்திற்கென்று வளர்க்க வேண்டும். உலகினரோடு அவர்கள் கைகோக்காமல், தெய்வத்தை நேசித்து, அவருக்குப் பயந்து, அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியும் பத்தி வினயமான புனித உடன் படிக்கையை நாம் அவருடனே செய்திருக்கின்றோம். தாங்கள் சிருஷ்டிகரின் சாயலில் உருவாக்கப்பட்டவர்களென்றும், கிறிஸ்துவானவரின் மாதிரியின்படியே அவர்கள் விளங்க வேண்டுமென்ற எண்ணத்தை அவர்கள் மனதிலே பதிக்க வேண்டும். இரட்சிப்புக்கேற்ற ஞானமுடையத்தக்கதான அறிவை அளித்து, தெய்வ மாதிரிக்கேற்ப வாழ்வையும் குணத்தையும் இசையச் செய்யும் கல்விப் பயிற்சி அளிப்பதில் மிகுந்த கவனமும் ஊக்கமும் செலுத்தப்பட வேண்டும். 6T 127.CCh 538.1

    வேலையாட்கள் குறைவுபடுவதைத் தவிர்ப்பதற்கு, வெவ்வேறு நாடுகளிலே தங்களுடைய பிற்கால வளர்ச்சியை இளமையிலேயே வெளிப்படுத்தும் மாணவர்கள் நடைமுறை அறிவையும், வேதாகம சத்தியத்தையும் பயிலுமாறு கல்வி ஸ்தாபனங்கள் நிறுவப்பட வேண்டுமென்று தெய்வம் விரும்புகிறார். இவ்வாறு பயிற்சிபெற்ற ஊழியர்கள் புதிய இடங்களில் உழைக்கும் பொழுது நிகழ்கால சத்தியத்தின் கிரியைக்கு சான்றாக இருப்பார்கள்.CCh 538.2

    நம்முடைய பழைய சபைகளிலிருந்து மிஷனெரிகளாக அனுப்பப்படுகிறவர்களுக்குக் கல்வி பயிற்சியை அளிப்பதும் அல்லாமல், உலகில் பல்வேறு இடங்களில் வாழுகிறவர்கள் தங்களுடைய சுய தேசத்தாருக்கென்றும், தங்களுடைய சுற்றுப் புறங்களில் உள்ளவர்களுக்காகவும் உழைப்பதற்குப் பயிற்சி அளிக்க வேண்டும். கூடுமானவரைக்கும் அவர்கள் எவ்விடத்தில் உழைக்கப் போகிறார்களோ அவ்விடத்தில் தானே அவர்கள் தங்கள் பயிற்சியை அடைவது நலமும் பாதுகாப்புமானது. ஊழியன் தன்னுடைய பயிற்சியை அடையுமாறு தொலைவில் இருக்கும் நாடுகளுக்குச் செல்லுவது ஊழியனுக்கோ ஊழியத்தின் முன்னேற்றத்துக்கோ அதிகமான நன்மை பயப்பது அபூர்வமே. 6T. 137.CCh 538.3

    நியாயத் தீர்ப்பிலே ஒரு சபையாகவும் தனி நபர்களாகவும் நாம் குற்றமற்றவர்களாக இருப்பதர்கு நம்முடைய இளைஞர் நம்முடைய கரங்களில் ஒப்புவிக்கப்பட்டிருக்கும் பெரும் வேலையின் பலவேறு கிளைகளையும் நிர்வகிக்கத்தக்கதாக அவர்களைப் பயிற்றுவிப்பதற்கு அதிகமான முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவானவருடைய ஊழியம் திறமையுடைய வேலைக்காரர் இல்லாமையால் பின்னடையாமல் தாலந்தும், நிர்வகிக்கும் மனதும், பலமும் நல்லொழுக்கப் பயிற்சியுமடைந்து, அவர்கள் வாஞ்சையுடனும் உண்மையுடனும் தங்கள் வேலையை செய்யத்தக்கதாக நாம் ஞானமுடைய திட்டங்களைப் போட வேண்டும். CT 43. CCh 539.1